செவ்வாய் பெயர்ச்சி: சனியிடம் இருந்து விலகிய செவ்வாய்... அமைதிப்பூங்காவாகும் தமிழகம்

ஞானகாரகன் கேது உடன் புரட்சி நாயகன் செவ்வாய் மகரத்தில் இணைந்து குடித்தனம் நடத்தப்போகிறார்.கேது செவ்வாய் சேர்க்கையினால் ஆன்மீக செயல்பாடுகள் அதிகரிக்கும்.

Subscribe to Oneindia Tamil

-மயூரா அகிலன்

சென்னை: செவ்வாய் பகவான் வீரத்தின் அதிபதி, புரட்சி நாயகன், இந்த கிரகம் இன்று முதல் மகரத்தில் ஞானகாரகன் கேது உடன் இணைந்து இன்னும் சில மாதங்களுக்கு குடித்தனம் நடத்தப்போகிறார்

இதுநாள் வரை தனுசு ராசியில் சனிபகவானுடன் இணைந்து இருந்த செவ்வாய் பல தீ விபத்துக்களை ஏற்படுத்தினார். தமிழகத்தில், இந்தியாவில் பல போராட்டங்களை ஏற்படுத்தினார். செவ்வாய் பெயர்ச்சியினால் போராட்டங்கள் ஓய்ந்து அமைதி திரும்பும்.

செவ்வாய் பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முதலானவற்றுக்கு காரகத்துவம் வாய்ந்தவராகத் திகழ்பவர். பிற கிரகங்களுடனான இவரது சேர்க்கை, மிக முக்கியமான பலாபலன்களைத் தரவல்லது.

ஞானத்தைத் தருவது கேது. முக்திக்கு வழிகாட்டுபவர் கேது. பல துன்பங்களை ஏற்படுத்தி அதன் மூலம் மனதைப் பக்குபவப்படுத்துபவர் அவர்.

கேது - செவ்வாய் கூட்டணி

கேது - செவ்வாய் கூட்டணி

கேது செவ்வாயைப் போல செயல்படுபவர். பல சமயங்களில் கேது, செவ்வாயின் எதிர்மறையான செயல்களைப் போல தீயவற்றைச் செய்யக்கூடியவர். மருந்து தொழில், மருத்துவத்தொழில் ஆகியவற்றில் இருப்பவர்கள் வெற்றி பெறுவதற்கு கேதுவின் பார்வை அல்லது சேர்க்கை கிடைக்க வேண்டும். ஜாதகத்தில் செவ்வாயுடன் கேது இணைந்து உள்ளவர்கள், உடல் வலிமையும், தேஜஸும், நல்ல குணங்களும், கொண்டிருப்பார்கள். இவர்கள் தர்ம சிந்தை உள்ளவர்களாகத் திகழ்வர். எங்கும் எதிலும் இவர்களுக்கு வெற்றியே உண்டாகும். உடன்பிறந்த சகோதரர்களிடம் அதிக பாசத்துடன் இருப்பதோடு பல வகைகளிலும் உதவி செய்வார்.

கேது பெயர்ச்சியின் மூலம் 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்கு பத்தாவது வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து அமர்ந்து உள்ளதால் சொத்து விஷயங்களில் சுமுகத் தீர்வு காண வேண்டும். இதுநாள் வரை தனித்திருந்த கேது உடன் இன்று முதல் கூட்டணி சேர்ந்துள்ளார் செவ்வாய் பகவான். தொழில், பிசினர் சும்மா பிச்சிக்கிட்டு போகும். லாபம் அதிகரிக்கும். வில்லங்கமாக இருந்த இடங்களில் பிரச்சினை தீர்ந்து விற்று விடுவீர்கள். புதிய தொழில், வேலை வாய்ப்புகள் அமையும். தூக்கம் குறையும் நன்மைகள் நடக்க ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியரை வணங்குங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 9ஆம் வீட்டில் அமர்ந்து உள்ளதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். சகோதரர்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். தந்தையாரின் கோபத்துக்கு ஆளாவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். புதுச்சொத்து வாங்குவீர்கள். ராசிக்கு 9வது வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்துள்ளதால் தொலைதூர பயணங்கள் ஏற்படும். கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்வீர்கள். பணி விசயமாக சிலர் வெளிநாடு செல்வதற்கான சரியான நேரம் இதுவாகும். ஸ்ரீ சரபேஸ்வரரை வெள்ளிக்கிழமையில் வில்வார்ச்சனை செய்து வணங்கினால் நன்மைகள் நடக்கும்.

மிதுனம்

மிதுனம்

சனியோடு 7வது வீட்டில் இருந்த செவ்வாய் உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டிலேயே கேதுவுடன் சேர்ந்து நிற்பதால் இக்காலகட்டத்தில் நெருப்பு, மின்சாரச் சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள். சின்னச் சின்ன விபத்துகள் ஏற்படும். கவனம் இல்லாமல் கையை விட்டு அய்யோ ஷாக்கடித்து விட்டதே என்று பதற வேண்டாம். உடல் நலத்தில் அக்கறை தேவை. உங்கள் குடும்பத்தினரிடம் பேசும் போது கவனமாக பேசவும். பணம் விசயத்தில் கவனமாக இருக்கவும். செவ்வாய் கிழமைகளில் சஷ்டி கவசம் படிக்கவும். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்கவும்.

கடகம்

கடகம்

இதுநாள் வரை ஆறாவது வீட்டில் சனியோடு அமர்ந்து இருந்த செவ்வாய் பகவான் இன்று முதல் 7வது வீட்டில் அமர்வதால் நன்மையும், தீமையும் கலந்த பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். குழந்தைகளுடன் உற்சாகமாக பொழுதை போக்குவீர்கள். வீண் விவாதங்களை தவிர்த்தால் போதும் அமைதி பூங்காவாக வீடு திகழும். செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 7ல் அமர்வதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். உணவில் கட்டுப்பாடு அவசியம்.

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 5வது வீட்டில் இருந்து 6வது வீட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளார் செவ்வாய். வேலைக்காக பயணம் செய்வீர்கள். குடும்பத்திலோ, வேலை செய்யும் இடத்திலோ பிரசினைகள் ஏற்படும். போட்டி தேர்வுகள் எழுதலாம்.

செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 6ல் நிற்பதால் வீடு, மனை வாங்குவீர்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். நாடாளுபவர்கள், அரசு அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கடனாகவும், கைமாற்றாகவும் காசு புரட்டி புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.

கன்னி

கன்னி

இதுநாள் வரை 4வது வீட்டில் சனியோடு இருந்த செவ்வாய் இன்று முதல் கேதுவுடன் சேர்ந்து உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் நிற்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாகச் செயல்படுவது நல்லது. சகோதரியின் கல்யாணத்தைப் போராடி முடிப்பீர்கள். சொத்து விற்பது, வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன பயணங்கள் செல்வீர்கள். குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். குழந்தைகளில் உடல்நலனில் அக்கறை தேவை.

துலாம்

துலாம்

நாலாவது வீட்டிற்கு குடியேறியுள்ள செவ்வாய் பகவான் உங்களுக்கு நன்மையே செய்வார். பணம் வரவு அதிகரிக்கும். வேலை, தொழிலில் பண வரவு அதிகரிக்கும். செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 4வது வீட்டில் நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்து தகராறுகள் வந்து செல்லும். ஆனால், வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். சிதம்பரம் நடராஜரை உத்திரம் நட்சத்திரம் நாளில் சென்று வணங்குங்கள் நன்மையே நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் நிற்பதால் தைரியமாகவும் தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டுமனை வாங்குவீர்கள். உங்கள் ராசி அதிபதி செவ்வாய் 3வது வீட்டில் குடியேறியுள்ளதால் உடன் பிறந்தவர்களின் ஒத்துழைத்தும், நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் வீட்டுக்கதவை தட்டும்.

தனுசு

தனுசு

இதுநாள் வரை உங்கள் ஜென்ம ராசியில் சனியோடு அமர்ந்து இருந்த செவ்வாய் பகவான், இன்று முதல் கேதுவுடன் சேர்ந்து 2ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சகோதரர், சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து போங்கள். வீண் விவாதங்களை தவிருங்கள். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும், சிலர் புதிய வீடு ஏன் ஊர் கூட மாற வேண்டிய நிர்பந்தம் கூட ஏற்படும். உறவினர்களுடன் அன்போடும், பாசத்துடனும் பழகுங்கள்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் இருந்த செவ்வாய் பகவான், இன்று முதல்

உங்கள் ராசிக்குள் குடியேறியுள்ளார். செவ்வாயும் கேதுவும் சேர்வதால் உங்களுக்கு ஏதோ பெரிய நோய் இருப்பதைப் போல நீங்கள் உணருவீர்கள். அப்படி எல்லாம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. பாதிப்புகள் குறைய புற்றுள்ள கோவிலுக்கு சென்று வணங்கி வாருங்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இது நாள்வரை லாப ஸ்தானத்தில் இருந்த செவ்வாய், விரைய ஸ்தானத்தில் கேதுவுடன் சேர்ந்து அமர்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் சகோதரர்களால் ஆதாயமும் உண்டு. இந்த கால கட்டத்தில் வெளிநாடு செல்ல வேண்டிய யோகம் உண்டு. சின்னச் சின்ன பயணங்கள் மேற்கொள்வீர்கள். காமாட்சி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். வீணாக செலவுகள் ஏற்படும் கவனமாக இருக்கவும்.

மீனம்

மீனம்

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து உள்ளதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் உதவி செய்வார்கள். தொலைதூர பயணங்கள் செல்வீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். செவ்வாயும் கேதுவும் சேர்ந்து லாப வீட்டில் நிற்பதால் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+