செவ்வாய் பெயர்ச்சியால் யாருக்கு பணமழை கொட்டும் - காதல் கைகூடும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேஷம், விருச்சிக ராசிகளுக்கு அதிபதி செவ்வாய். மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு இடம்பெயர்ந்து உள்ளார் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவான் தனது ஆட்சி வீடான மேஷத்தில் இருந்து இரண்டாம் வீடான ரிஷபத்தில் இடம் பெயர்வது நல்ல அமைப்பாகும். பொருளாதார ரீதியாக உயர்வு ஏற்படும். இந்த இடப்பெயர்ச்சியால் 12 ராசிகாரர்களுக்கு யாருக்கு பணவரவு அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

சூரியன் சந்திரனைப் போல் நவகிரகங்களில் செவ்வாயும் ஒரு முக்கியமான கிரகமாகும். செவ்வாய் கிரகம் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர். பெண்களுக்கு களத்திர காரகனாய் விளங்குபவர் செவ்வாய். செவ்வாய் பூமிகாரகன் என்பதால் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் நிலையைப் பொருத்து புதையல் கிடைக்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

செவ்வாய் என்றாலே சக்தி. ஒருவருக்கு செவ்வாய் பலவீனமடையும்போது அவரும் சேர்ந்து பலவீனமடைகிறார். செவ்வாயானது மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். மே 7ஆம் தேதி வரை ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாயினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் பாதிப்புகள் யாருக்கு என்பதைப் பார்ப்போம்.

மேஷம்

மேஷம்

செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீடான தன வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது சிறப்பான அம்சமாகும்.

ரிஷபத்தில் செவ்வாய் அமர்வது சிறப்பான அம்சம். பணவரவு அதிகமாக இருக்கும். பாக்கெட் நிறைய பணம் வரும். வாக்கு ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் உஷ்ணமான பேச்சை ஏற்படுத்துவதார். குடும்ப செவ்வாயினால் சில குழப்பங்கள் வரும் கணவன் மனைவிக்குள் மோதல் மூளும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டை நான்காம் பார்வையாக பார்க்கிறார் செவ்வாய். பிள்ளைகளால் நன்மைகள் நடைபெறும் பூர்வீக சொத்துக்களை விற்பதில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டையும், ஒன்பதாம் வீட்டையும் பார்ப்பதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. ஆன்மீக பயணம் வெற்றியைத் தரும். திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன சண்டை வரலாம். உறக்கம் கெடும் இதனால் மன அமைதி கெடும். காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், கவனம் தேவை. செவ்வாய்கிழமை முருகனை வணங்குங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

வீர நாயகன் செவ்வாய் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் ராஜயோகம் வரப்போகிறது. ஆளுமைத்திறன் அதிகரிக்கும் கூடவே கோபம் அதிகரிக்கும். உங்களின் செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். நான்காம் வீட்டை பார்ப்பதால் வீடு நிலம் வாங்குவதற்கு நல்ல தருணம். அதேசமயம் பத்திரங்களை வில்லங்கம் சரிபார்த்து வாங்கவும். களத்திர ஸ்தானத்தை ஏழாம் பார்வையாக உங்கள் களத்திர ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் திருமணம் கைகூடி வரும் காலமாகும். காதல் வாழ்க்கையும் உற்சாகத்தை தரும். எட்டாம் வீட்டை எட்டாம் பார்வையாக பார்ப்பதால் மன அழுத்தம் இருக்கலாம். வாகனங்களை ஓட்டும்போது கவனம் தேவை. நல்ல காலம் பிறந்து விட்டது வெற்றி நடைபோடுங்கள்.

மிதுனம்

மிதுனம்

செவ்வாய் உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். வெளிநாடு செல்லும் யோகம் கூடி வந்துள்ளது. பணமழை பொழியப்போகிறது. கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். மருத்துவ செலவுகள், வண்டி வாகனங்களினால் செலவுகள் வரும். உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை நான்காம் பார்வையாக பார்க்கிறார் செவ்வாய். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டை ஏழாம் பார்வையாக பார்ப்பதால் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வங்கிகளில் லோன் கிடைக்கும். உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தினை எட்டாம் பார்வையாக பார்க்கிறார். கணவன் மனைவி உறவில் உற்சாகம் அதிகரிக்கும். உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். அல்சர் போன்ற உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. செவ்வாய்கிழமை முருகனை வணங்குங்கள்.

கடகம்

கடகம்

உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளது நன்மை தரும் அமைப்பாகும். சமூகத்தில் மதிப்பு உயரும். மனைவியுடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சொத்துப் பிரச்சினைகள் தீரலாம். அடுத்த 6 வாரங்களுக்கு உங்களுக்கு யோகம்தான். பிரச்சினைகள் தீரும். பணவரவு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்தவும். செவ்வாய்கிழமையன்று துர்க்கா தேவியை செவ்வரளி பூக்களைக் கொண்டு வணங்க நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு அதிகம். உயர் பதவிகளை அடைவீர்கள். பொறுப்புகள் கூடும். பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வது ராஜயோகம் வரும் காலம். நல்ல நேரம் வந்து விட்டது. அரசு பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினருக்கு நன்மைகள் நடைபெறும் காலம். வீடு வாசல் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி

உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமர்வது நன்மைகள் நடைபெறும் காலமாகும். வேலையில் மாற்றம் ஏற்படலாம். பொருளாதாரம் வலுப்பெறும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. செவ்வாய் கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வணங்கலாம். பழனியாண்டவர் கோவிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள் நன்மைகள் நடைபெறும்.

துலாம்

துலாம்

செவ்வாய் இப்போது உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அமர்ந்துள்ளார். எட்டாம் வீட்டில் செவ்வாய் அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். பணம் வரும் வாய்ப்பு ஏற்படும். அடுத்த 6 வாரத்தில் எதிர்பாராத லாபம் ஒன்றை சந்திப்பீர்கள். விபத்து காரகர் எட்டில் அமர்வதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துகள் ஏற்படும். ரத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம் அதிகம் தேவை. மன அழுத்தம் கூடும். வியாழக்கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு நேர் எதிரில் 7வது வீட்டில் களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளதால் இது ருசக ராஜயோகம். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடங்கள் நீங்கும். உங்களின் பெர்சனாலிட்டி அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உங்களின் அப்பாவின் உடல் நலனில் அக்கறை செலுத்தவும். மனைவியிடம் வாயைக் கொடுக்காதீர்கள். சண்டை வரலாம். புத்திசாலித்தனமாக நடப்பது உத்தமம்.

தனுசு

தனுசு

உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். இந்த இடப்பெயர்ச்சி உங்களுக்கு நன்மையைத் தரும். நீங்கள் எதிரிகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள். உங்களின் முகப்பொலிவு அதிகரிக்கும். கடன்கள் கேட்ட இடத்தில் கிடைக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். காதலில் வெல்வீர்கள் பாஸ். சட்ட போராட்டங்களில் வெற்றி கிடைக்கும். சேர்த்து வைத்த பணத்தை பத்திரப்படுத்துங்கள். செலவுகளில் சிக்கனம் தேவை.

மகரம்

மகரம்

உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். பங்குச் சந்தையில் உங்களுக்கு சந்தோஷ செய்தி கிடைக்கலாம். அமைதியாக இருங்க. எதிர்ப்புகள் வலுக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் உடல் நலனில் பிரச்சினை வரலாம் அக்கறை காட்டுங்கள். பொறுமையாக எதையும் கையாளுங்கள் நிதானம் அவசியம்.

கும்பம்

கும்பம்

உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வீடு, மனைகளை வாங்கும் யோகம் கைகூடி வரும் என்றாலும் கவனமாக தாய் பத்திரத்தை பார்த்து வாங்கவும். வேலையில் உயர்வு காணப்படும். மனைவி அல்லது கணவருக்கு பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். எதிர் பாலினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வரை போகலாம். வாயைக் கட்டுவது நல்லது. திருமண வாழ்க்கையில் உரசல்கள் ஏற்படலாம். உடல் நலப் பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு.

 மீனம்

மீனம்

உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் நலத்தில் உற்சாகம் அதிகரிக்கும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இளைய உடன் பிறப்புக்களின் உதவி கிடைக்கும். செய்யும் தொழிலில் வெற்றி தேடி வரும் வியாபாரம் அபிவிருத்தி ஆகும். பொருளாதாரம் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் வெற்றி கிடைக்கும். வேலையில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம். தினசரியும் ஹனுமன் ஸ்லோகம் படிக்கவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+