மாசி மாதம் ராசி பலன் 2021: மேஷம் ராசிக்கு தொட்டது துலங்கும் யோகமான மாதம்
மாசி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணியைப் பொறுத்தும் மேஷம் ராசிக்கு என்ன பலன் கிடைக்கும் என்னென்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
சென்னை: மாசி மாதம் கும்பம் மாதம். தமிழ் காலண்டரில் 11வது மாதம். இந்த மாதம் முழுவதும் சூரியன் கும்பம் ராசியில் பயணம் செய்வார். கூடவே புதன், சுக்கிரனும் சூரியனுடன் இணைந்து பயணம் செய்கின்றனர். மாசி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய மாற்றங்களும் முன்னேற்றங்களும் கிடைக்கும். தொட்டது துலங்கும் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இந்த மாசி மாதத்தில் 13-02-2021 முதல் 13-03-2021 வரை மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
மாசி மாதம் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால், மகர ராசியில் உள்ள புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். பிப்ரவரி 21ஆம் தேதி செவ்வாய் மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். ராகு உடன் செவ்வாய் இணைகிறார். சுக்கிரன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சனியை விட்டு விலகி சூரியனுடன் இணைகிறார் சுக்கிரன். கூடவே புதன் மாத இறுதியில் இடப்பெயர்ச்சி அடைந்து சூரியன் சுக்கிரனுடன் இணைகிறார்.
இந்த மாதம் பண்டிகைகள் அதிகம் உள்ளது. ரத சப்தமி, மாசி மகம்,மகா சிவராத்திரி, மாசி அமாவாசை ஆகிய முக்கிய பண்டிகைகள் உள்ளன. மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்று பார்க்கலாம்.

யோகமான மாதம்
மாசி மாதம் மேஷம் ராசிக்காரர்களுக்கு ராசிக்கு 11ல் சூரியன், ராசியில் செவ்வாய், இரண்டாம் வீட்டில் நகர்ந்து ராகு உடன் நகர்கிறார். எட்டாம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் சனி, குரு, புதன், சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சூரியன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் லாபம் வரும். யோகமான மாதம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மன அழுத்தம் நீங்கும். உங்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தியவர்கள் உங்களிடம் சரணடைவார்கள். புதிய வண்டி வாகனம் வாங்கலாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

திருமண தடை நீங்கும்
ராசிக்கு ஐந்துக்கு உடைய சூரியன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் செய் தொழில் லாபம் அதிகம் உண்டு. வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் நடைபெறும். தடைகள் நீங்கும். திருமண தடைகள் நீங்கும் சுப காரியங்கள் நடைபெறும்.

புதிய வேலை கிடைக்கும்
சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கையும் ஆதரவும் கிடைக்கும். தொட்டது துலங்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும். தொலை தூரங்களில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். வேலை விசயமாக வெளியூர் பயணம் செய்யலாம்.

குடும்பத்தில் கவனம்
மாசி 9ஆம் தேதி செவ்வாய் இடப்பெயர்ச்சியாகி ராகு உடன் இணைகிறார். கோபத்தை கட்டுப்படுத்தவும். குடும்ப விசயங்களில் கவனம் தேவை. நெருப்பு விசயங்களில் கவனம் அவசியம். சகோதரர்களுடன் தேவையில்லாத விசயங்களில் பேச வேண்டாம். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சூரியன் இணைவதால் கூட்டுத்தொழில் நன்மையை கொடுக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானமும் கவனமும் தேவை.

சூரிய வழிபாடு நல்லது
பெண்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சகோதரர்களுக்குள் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புரமோசன் வரும். திருமண சுபகாரியம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அமாவாசை நாளில் குல தெய்வ வழிபாடு செய்யவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரத சப்தமி நாளில் கோதுமையில் செய்த உணவுகளை தானமாக கொடுத்து சூரிய நமஸ்காரம் செய்யவும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications