Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாசி மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு கெட்டி மேளம் கொட்டப்போகுது

மாசி மாதம் மகா சிவராத்திரி தொடங்கி மாசி மகம் வரை பல முக்கிய பண்டிகைகளை உள்ளன. இந்த மாதத்தில் சூரியன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். மாசி மாதம் மிதுனம், கடகம், சிம்மம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Sani Peyarchi 2020 | magaram | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- சிம்ம ராசிக்கு பலன்கள் எப்படி ?

    சென்னை: மாசி மாதம் கும்பமாதம். சூரியன் பெயர்ச்சியை வைத்து தமிழ் மாத ராசி பலன்கள் கணிக்கப்படுகிறது. மாத கிரகங்களின் பெயர்ச்சியும் சில நன்மைகளை தரும். மாசி 1ஆம் தேதி விஷ்ணுபதி புண்ணியகாலம் ஆரம்பமாகிறது. மகாவிஷ்ணு ஆலயங்களுக்கு சென்று வணங்கலாம். உங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். மாசி மாதத்தில் மிதுனம், கடகம், சிம்மம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன நடைபெறும் கல்யாணம் கை கூடி வருமா என்று பார்க்கலாம்.

    மாசி மாதம் சூரியன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் சுக்கிரன் மீனத்தில் உச்சமடைந்துள்ளார். சனி மகரத்திலும் மிதுனத்தில் ராகு, செவ்வாய், கேது, குரு தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் புதன் சஞ்சரிக்கிறார்.

    கிரகங்களின் ராசி மாற்றம் இந்த மாதம் உள்ளது. கும்பம் ராசியில் உள்ள புதன் 4ஆம் தேதி வக்ரமடைகிறார். சுக்கிரன்16ஆம் தேதி மேஷம் ராசிக்கு மாறுகிறார். மாசி 27ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றத்தின்படி மிதுனம், கடகம், சிம்மம் ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

    வேலை கிடைக்கும்

    வேலை கிடைக்கும்

    மிதுனம் ராசிக்காரர்களுக்கு மாசி மாதம் அற்புதமாக இருக்கிறது. மாசி மாதம் சூரியன் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் புதனோடு சஞ்சரிக்கிறார்.
    பத்தாம் வீட்டில் சுக்கிரன், அஷ்டமத்தில் சனி, ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் கேது குரு செவ்வாய், ராசிக்குள் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
    கணவன் மனைவி பேச்சில் கவனமாக இருங்க. வீண் வம்பு பேச்சுக்களை பேச வேண்டாம். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலிகாமாக வேலை செய்தவர்களுக்கு நிரந்தரமான வேலை கிடைக்கும். வெளிநாடு யோகம் தேடி வரும். ராசியில் உள்ள ராகு களத்திர ஸ்தானத்தில் உள்ள கேது சஞ்சாரம் கூடவே குருவின் சஞ்சாரம் பார்வையால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

    குரு பார்வை

    குரு பார்வை

    செவ்வாய் மற்றும் குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. குரு பலனால் நன்மைகள் அதிகம் நடைபெறும். திருமண தடைகள் நீங்கும். நல்ல வரன்கள் தேடி வரும். வீடு கட்டி வந்தவர்கள் இனி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். அஷ்டம சனி சில சங்கடங்களை தரலாம். வீட்டில் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்து போகும். நிதானமாக சமாளியுங்கள். ராசி நாதன் புதன் பாக்ய ஸ்தானத்தில் இருந்தாலும் வக்ரமடைந்து பின்னர் வக்ர நிவர்த்தி அடைகிறார். உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டு அதிபதியும் 12ஆம் வீட்டு அதிபதியுமான சுக்கிரன் 10ஆம் வீட்டில் உச்சம் பெற்றிருப்பதால் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும்.

    திடீர் பணவரவு

    திடீர் பணவரவு

    இந்த மாதம் சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். அஷ்டமத்தில் சனி இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தேவையில்லாத விசயங்களில் தலையிட வேண்டாம். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருது. சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகமும் வரப்போகிறது. சுக்கிரன் மாத பிற்பகுதியில் லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் ஷேர் மார்க்கெட், லாட்டரி ரேஸ் மூலம் லாபம் வரும். தெய்வ அனுகூலமான மாதம். செவ்வாய் கிழமை முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வாருங்கள் நன்மைகள் நடைபெறும்.

    பேச்சில் கவனம்

    பேச்சில் கவனம்

    உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் குரு, கேது, செவ்வாய். ஏழாம் வீட்டில் சனி, எட்டாம் வீட்டில் சூரியன்,புதன் ஒன்பதாம் வீட்டில் உச்சம் பெற்ற சுக்கிரன், 12ஆம் வீட்டில் ராகு என கிரக நிலைகள் இந்த மாதம் உள்ளது. கடகம் ராசிக்காரர்கள் மாசி மாதத்தை கவனமாக கையாளுங்கள் காரணம் சூரியன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சொத்து வாங்கி விற்பதில் கவனமாக இருங்க. வார்த்தைகளில் கவனமாக இருங்க. வேலை செய்யும் இடத்தில் நிதானமாக இருங்க. வம்புகள் வாய் மூலம் வரலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. உங்களுக்கு வரக்கூடிய தாழ்வு மனப்பான்மை சில தோல்வியை தரலாம். எனவே தன்னம்பிக்கையோடு இருங்க. சனிபகவான் கண்டச்சனியாக சஞ்சரிப்பதால் கணவன் மனைவி உறவில் பேசும் வார்த்தைகளில் நிதானமாக இருப்பது அவசியம்.

    சுக்கிரனால் சாதகம்

    சுக்கிரனால் சாதகம்

    சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தாலும் உங்களுக்கு பயனில்லை. இந்த மாதம் உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். சம்பாதிக்கும் பணம் எல்லாம் செலவாகி விடுகிறதே என்ற கவலையில் இருப்பீர்கள். வேலை விசயமாக பயணங்கள் செல்வீர்கள். பயணங்களினால் நன்மைகள் நடைபெறும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு செல்வதால் புதிய வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். மனதிற்கு பிடித்த வேலையும், அந்த வேலையால் நல்ல வருமானமும் தேடி வரும்.

    அற்புதமான மாதம்

    அற்புதமான மாதம்

    சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம். கடவுள் அனுகூலம் உங்களுக்கு தேடி வரப்போகிறது. உங்களின் துன்பங்கள் தீர்ந்து விட்டது. வாட்டி வந்த நோய்கள் தீரப்போகிறது. வம்பு வழக்கு பிரச்சினையும் தீரும். கடன் தொல்லைகளும் கட்டுக்குள் வரும். மாசி மாதம் மனதிற்கு பிடித்த மாதமாக அமைந்துள்ளது. பிள்ளைகளால் நன்மைகள் நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்க உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் திருமண யோகம் தேடி வரப்போகிறது. கல்யாணப் பேச்சுவார்த்தை சுபமாக முடியும்.

    யோகமான மாதம்

    யோகமான மாதம்

    மாணவர்களுக்கு தேர்வுகளில் வெற்றிகள் தேடி வரும் நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு விபரீத ராஜயோககாலம் எனவே ஆறுக்கு உடைய சனிபகவான் ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான கால கட்டம். வேலையில் புரமோசன் கிடைக்கும். சிலருக்கு நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். இந்த மாசி மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மகத்துவம் நிறைந்த மாதமாக அமையப்போகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+