Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாசி மாத ராசி பலன் 2022 : தனுசு ராசிக்காரர்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் நிறைந்த மாதம்

மாசி மாதம் கும்ப மாதம். இந்த மாதத்தில் நவகிரங்களின் சஞ்சாரம் கூட்டணியால் தனுசு ராசிக்காரர்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். தமிழ் மாதங்களில் மாசி மாதம் 11வது மாதம். அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகச்சிறப்பு மிக்க மாதம். திருமால், மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்கிறது புராணம். மகாசிவராத்திரி, மாசி மகம் உள்ளிட்ட பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த மாதத்தில் கிரகங்களின் கூட்டணி சேர்க்கை பார்வையால் தனுசு ராசிகளில் பிறந்தவர்களுக்கு மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. நன்மைகள் நடைபெற என்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

காலபுருஷ தத்துவப்படி சூரியன் குரு கூட்டணி லாப ஸ்தானத்தில் 11வது வீட்டில் நிகழ்கிறது. மாத இறுதியில் புதனும் கும்ப ராசியில் இணையப் போகிறார். மகர ராசியில் செவ்வாய் சனி,சுக்கிரன் இணையப் போகிறது. ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிகத்திலும் பயணம் செய்கின்றனர்.

Masi Month rasi palan 2022 Tamil: Dhanusu rasi masi matha rasi palan

தனுசு ராசிக்காரர்களுக்கு நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசியில் செவ்வாய், சுக்கிரன், இரண்டாம் வீட்டில் சனி, புதன், மூன்றாம் வீட்டில் குரு, சூரியன், ஆறாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. மாசி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. ராசியில் உள்ள சுக்கிரன் செவ்வாய் மன தைரியத்தையும் அதிக தன்னம்பிக்கையையும் தருவார்.

புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் அரங்கேறும். சில நேரங்களில் கோபம் வரலாம். கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது. அலுவலகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இதன்மூலம் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய கடன்கள் அடைபடும் வங்கி சேமிப்பும் உயரும் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பணிச்சுமை அதிகரித்தாலும் செய்யும் வேலைகளை எளிதில் செய்து முடிப்பீர்கள் இதன் மூலம் அலுவலகத்தில் உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷம் அதிகரிக்கும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு இது மகிழ்ச்சிகரமான மாதம் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+