மாசி மாத ராசி பலன் 2022 : கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு லாபமா? நஷ்டமா? பலன்கள் எப்படி
மாசி மாதம் கும்ப மாதம். இந்த மாதத்தில் நவகிரங்களின் சஞ்சாரம் கூட்டணியால் கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் குதூகலமும் உற்சாகமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. மீன ராசிக்காரர்களுக்கு நிம்மதியான மாதமாக உள்ளது.
சென்னை: மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். தமிழ் மாதங்களில் மாசி மாதம் 11வது மாதம். அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகச்சிறப்பு மிக்க மாதம். காலபுருஷ தத்துவப்படி சூரியன் குரு கூட்டணி லாப ஸ்தானத்தில் 11வது வீட்டில் நிகழ்கிறது. மாத இறுதியில் புதனும் கும்ப ராசியில் இணையப் போகிறார். மகர ராசியில் செவ்வாய் சனி,சுக்கிரன் இணையப் போகிறது. ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிகத்திலும் பயணம் செய்கின்றனர். இந்த மாதத்தில் கிரகங்களின் கூட்டணி சேர்க்கை பார்வையால் கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கும் மீன ராசியில் பிறந்தவர்களுக்கும் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தைப்பார்த்தால் மாசி மாதத்தில் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சனி, புதன், ராசியில் சூரியன், குரு, நான்காம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டில் கேது, லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. கும்ப ராசியில் உள்ள அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சுப விரைய செலவுகள் இந்த மாதம் அதிகரிக்கும். பேசும் வார்த்தைகளில் நிதானமும் கவனமும் தேவைப்படும். அதிக பண வரவு வரும் கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது.
அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். அரியர் பணம் மொத்தமாக கிடைப்பதால் கை மேல் பலன்தான். பணவரவு வந்து திக்குமுக்காட வைக்கப்போகிறது. தொழில் வியாபாரத்தில் ஆர்வம் அதிகரிக்கும். லாபமும் கை கூடி வரும். குடும்பத்தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரிகள் ஆர்வமுடன் அதிக பண முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
பெண்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த மாதமாக உள்ளது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். தனியார் துறையில் வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும் குடும்பத்தில் அமைதி கூடும். அலைச்சல் நீங்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தோடு சிறு ஆன்மீக பயணம் செல்வீர்கள். புது தொழில் தொடங்குபவர்கள் வியாபாரத்தில் அதிக கவனத்தோடு இருப்பது நல்லது. எந்தக்காரியத்தையும் வீட்டில் உள்ள பெரியவர்களை கலந்து ஆலோசித்து செய்வது நல்லது. விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைத் தேடித்தரும். இந்த மாதம் ஸ்ரீரங்கநாதரை வணங்க சிக்கல்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, இந்த மாதம் நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மாசி மாதத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி, புதன், ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சூரியன், குரு, மூன்றாம் வீட்டில் ராகு, ஒன்பதாம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. உங்களுக்கு இது லாபங்கள் அதிகரிக்கும் மாதம். செய்யும் முதலீடுகளில் ஒன்றுக்கு பத்தாக லாபம் கிடைக்கும்.
அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை குறைந்து நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். சிலருக்கு பதவியும் பட்டமும் தேடி வரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உறவினர்கள் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பிள்ளைகளின் கல்வி, திருமணத்திற்காக சுப செலவுகளை செய்வீர்கள். பெண்களின் மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.
மாத பிற்பகுதிகளில் அலுவலகத்தில் சின்னச் சின்ன மாற்றங்கள் ஏற்படலாம். உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் பார்ட்னர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலை, தொழில் விசயமாக மேற்கொள்ளும் பயணங்களால் வெற்றி கிடைக்கும். குருபகவானை வியாழக்கிழமைகளில் வணங்க நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications