மாசி மாத ராசி பலன் 2022 : மகர ராசிக்காரர்களுக்கு மன மகிழ்ச்சி நிறைந்த மாதம்
மாசி மாதம் கும்ப மாதம். இந்த மாதத்தில் நவகிரங்களின் சஞ்சாரம் கூட்டணியால் மகர ராசிக்காரர்களுக்கு மன மகிழ்ச்சி நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
சென்னை: மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். தமிழ் மாதங்களில் மாசி மாதம் 11வது மாதம். அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகச்சிறப்பு மிக்க மாதம். திருமால், மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்கிறது புராணம். மகாசிவராத்திரி, மாசி மகம் உள்ளிட்ட பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த மாதத்தில் கிரகங்களின் கூட்டணி சேர்க்கை பார்வையால் மகர ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று விரிவாகப் பார்க்கலாம்.
காலபுருஷ தத்துவப்படி சூரியன் குரு கூட்டணி லாப ஸ்தானத்தில் 11வது வீட்டில் நிகழ்கிறது. மாத இறுதியில் புதனும் கும்ப ராசியில் இணையப் போகிறார். மகர ராசியில் செவ்வாய் சனி,சுக்கிரன் இணையப் போகிறது. ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிகத்திலும் பயணம் செய்கின்றனர்.
மகர ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தைப்பார்த்தால் மாசி மாதத்தில் உங்கள் ராசியில் சனி, புதன், இரண்டாம் வீட்டில் சூரியன், குரு, ஐந்தாம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் கேது, விரைய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.

மாசி மாதத்தில் மன மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கஷ்டங்கள், கவலைகள் முடிவுக்கு வரப்போகிறது. அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேண்டிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தினர் மத்தியில் உங்களின் பேச்சுக்கு மதிப்பு கூடும். குடும்பத்தினர் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.
தொழில் வியாபாரத்தில் திருப்தி அதிகரிக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றமும் லாபமும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கை கூடி வரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுங்கள். உடல் நலத்திலும் அவ்வப்போது கவனம் வைப்பது நல்லது திடீர் மருத்துவ செலவுகள் வரும்.
சுப காரியங்களில் தடைகள் வந்தாலும் விரைவில் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். பெண்கள் திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான மாதமாக அமைந்துள்ளது. ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.
காதலிப்பவர்களுக்கு குடும்பத்தினர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கை கூடி வரும். பிள்ளைகளுக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பண வரவும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் டென்சன் குறைந்து நிம்மதியும் சந்தோஷம் அதிகரிக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications