மே மாத ராசி பலன் 2020: இந்த ராசிக்காரங்க சிக்கனமாக செலவு பண்ணுங்க
வெயிலின் கொடுமை ஒருபக்கம், கொரோனா வைரஸ் நோய் தாக்கம் மறுபக்கம் என மக்கள் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.
சென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாதம் ஆண்டுக்கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தை ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். சனி, குரு மகரத்தில் சஞ்சரிக்கின்றனர். சனி உடன் கூட்டணியில் இருக்கும் செவ்வாய் மாத முற்பகுதியிலே கும்பம் ராசிக்கு மாறுகிறார். புத பகவான் ரிஷபம், மிதுனம் என பயணிக்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்கள் சில விசயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கும் எதையும் ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசித்து முடிவு பண்ணுங்க.
கிரகங்கள் இந்த மாதம் இடம் மாறுகின்றன. மாத பிற்பகுதியில் சூரியன் ரிஷபம் ராசிக்கு மாறுகிறார். செவ்வாய் கும்பம் ராசிக்கும், மேஷம் ராசியில் சூரியனுடன் இணைந்திருக்கும் புதன் ரிஷபம் ராசிக்கும் பின்னர் மிதுனம் ராசிக்கும் இடம் மாறுகிறார். இந்த மாதம் சனி, குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் வக்ரமடைந்து சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரம் இடம் மாற்றங்களினால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.
வெயிலின் கொடுமையும் கொரோனா தாக்கவும் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த பாதிப்பு எப்போது நீங்கும் என்பதே அனைவரின் கேள்வி. மனதளவில் சோர்ந்து போயிருக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கவும் தன்னம்பிக்கை தரவும் இந்த மே மாத ராசி பலன்களை எழுதியிருக்கிறோம். மே மாதம் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். இது பொதுவான பலன்கள்தான் ஒருவரின் சுய ஜாதகத்தில் நடைபெறும் தசாபுத்தி அந்தாரம் எப்படி இருக்கிறது என்பது பொறுத்து சில பலன்கள் மாறுபடலாம்.

தடைகள் விலகும்
துலாம் ராசிக்காரர்களே இந்த மாதத்தில் உங்களுக்கு சூரியன் புதன் ஏழாம் வீட்டில் இருந்து உங்க ராசியை பார்க்கிறார். சூரியனின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. இந்த மாதத்தில் இருந்து பல தடைகள் விலகும், கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணவருமானத்தில் இருந்த தடைகள் விலகும். அலுவலகத்தில் இருந்து சம்பள பாக்கி வரும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வர வாய்ப்பு உள்ளது. சுப காரியத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும் மனதில் ஏற்பட்டிருந்த கவலைகள் தீரும்.

லாபம் வரும்
துலாம் ராசிக்கார வியாபாரிகளுக்கு இந்த மாதம் நிம்மதியாக இருக்கும். அதே நேரத்தில் புதிய முதலீடுகள் எதுவும் செய்யாதீங்க. இருப்பதை விற்று லாபம் அடையப்பாருங்க. மாணவர்களுக்கு இப்போதைக்கு படிப்பில் ஆர்வமே இல்லாமல் இருக்கிறது. இந்த மாத பிற்பகுதியில் தடைகள் விலகும். தேர்வு பயம் விலகும். நீட் தேர்வுகளுக்காக நன்றாக படித்து தயார் படுத்திக்கொள்ளுங்கள். உயர்கல்வி யோகம் தேடி வரும். தகவல் தொழில் நுட்பத்துறை படிக்க கவனம் செலுத்தலாம். வயதானவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. இந்த மாதம் உங்க குலதெய்வத்தை வேண்டி காசு முடிந்து வைக்கவும். கவலைகள் படிப்படியாக தீரும்.

யோகமான மாதம்
விருச்சிக ராசிக்காரர்களே உங்க ராசி அதிபதியாக உங்களுக்கு சுகமான மாதமாக அமையப்போகிறது. வீடு கட்டணும்னு ரொம்ப நாளாக நினைச்சிட்டு இருக்கீங்க. இந்த மாதம் அதுக்கான ஏற்பாடுகளை பண்ணுங்க அதற்கான யோகம் வந்து விட்டது. உங்க மூத்த சகோதரர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த மாதம் வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரப்போகிறது. வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் தீரும். உங்க வியாபாரம் ரொம்ப நல்லா இருக்கும்.

கணவன் மனைவி பிரச்சினை
நல்ல உழைப்பாளி நீங்க உங்களுக்கு தேவையான நல்ல பணி தேடி வரும். நெருங்கிய நண்பர்கள் கிட்ட நீங்க கவனமாக பேசுங்க. குடும்பத்தில் பிரச்சினைகள் தலை தூக்கும் விட்டுக்கொடுத்து போங்க. பேச்சில் கவனமாக இருங்க யார் கிட்டையும் கோபமாக பேசவேண்டாம். கணவன் மனைவி இடையே சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் வரலாம். பெண்கள், கர்ப்பிணிகள் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில் எதற்காகவும் வெளியே போக வேண்டாம். மாத பிற்பகுதியில் வேலையில் சில சிக்கல்கள் வரலாம் கவனமாக இருங்க. குல தெய்வ வழிபாடு குறைகளை தீர்க்கும் நம்பிக்கையோடு இருங்க.

தடைகள் நீங்கும்
தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த மாதத்தில் ரொம்ப மாற்றங்கள் ஏற்படப்போகுது. பண வருமானத்தில் ஏற்பட்டிருக்கும் தடைகள் நீங்கும். இப்போது வேலையில் பிரச்சினை, உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை என ஒரே பிரச்சினை மயமாக இருக்கேன்னு ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டு இருக்கீங்க. கவலைப்படாதீங்க காலம் மாறும். கிரகங்களின் மாற்றம் மனதிலும் உடலிலும் மாற்றங்கள் ஏற்றங்களை கொடுக்கும் என்றாலும் பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க.

உற்சாகமான மாதம்
அப்பாவிடம் அக்கறை காட்டுங்கள். அரசு தொடர்பான வேலை செய்பவர்களை விமர்சனம் செய்யாதீங்க. வியாபாரத்தில் லாபம் வரும், கடன் வாங்கவும் அதை பிசினசில் முதலீடு செய்வது பற்றியும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க. படிப்பில நல்லா கவனம செலுத்துங்க. கிடைக்கிற வாய்ப்பை நல்லா பயன்படுத்திக்கங்க. வயது மூத்தவர்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீரும். நோய்கள் நீங்கும். உயர்வும் உற்சாகமும் நிறைந்த மாதமாக இருக்கப் போகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications