மே மாத ராசி பலன் 2021: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு எப்படி

மே மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியை பொருத்து மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள், பரிகாரங்களைப் பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மே மாதம் சித்திரை வைகாசி மாதங்கள் இணைந்த மாதம். அட்சய திருதியை, வைகாசி விசாகம், புதன் ஜெயந்தி, நரசிம்மர் ஜெயந்தி உள்ளிட்ட பல பண்டிகைகள் இணைந்த மாதம். மே மாதத்தில் சூரியன் தனது உச்ச வீட்டில் இருந்து உழைப்பின் வீட்டிற்குள் நுழைகிறார். சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. கால புருஷ தத்துவப்படி பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது உச்ச ராசியிலும், சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் காலமே மே மாதம். இந்த மாதத்தில் மேஷம் முதல் கடகம் வரையிலான ராசிகளில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். பண வரவு அதிகரிக்குமா?, உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது. சாமானியனையும் உழைப்பினால் சாதிக்க வைக்கும் மே மாதம்.
இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மேஷத்தில் சூரியன், சுக்கிரன், ரிஷபத்தில் புதன், ராகு, மிதுனத்தில் செவ்வாய், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, கும்ப ராசியில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் சூரியன் மேஷத்தில் இருந்து 15ஆம் தேதி ரிஷபத்திற்கு மாறுகிறார். சுக்கிரன் மே 4ஆம் தேதி ரிஷப ராசியில் ராகு உடன் கூட்டணி சேருகிறார். மகர ராசியில் உள்ள சனி வக்ரமடைகிறார். 26ஆம் தேதி புதன் மிதுன ராசியில் உள்ள செவ்வாய் உடன் இணைகிறார். கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து மேஷம்,ரிஷபம், மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷ ராசி

மேஷ ராசி

செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, உங்கள் ராசி இந்த மாதம் வலுவாக உள்ளது. ராசியில் சூரியன் சுக்கிரன், இரண்டாம் வீட்டில் ராகு புதன், மூன்றாம் வீட்டில் செவ்வாய், எட்டாம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் சனி, லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். வேலை தேடினால் நல்ல வேலை கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். வேலையில் மாற்றம் கிடைக்கும். இடமாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மாதம் முயற்சி செய்யலாம். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். முதலீடுகளுக்கு லாபம் கிடைக்கும். திருமணம் சுப காரியம் நல்ல விதமாக கை கூடி வரும். பாசிட்டிவ் எண்ணங்களுடன் முயற்சி செய்யுங்கள் நல்லதே நடக்கும். திருமண நிச்சயம் நடைபெறும். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு சுபமான மாதம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ராகு இரண்டாம் வீட்டில் இருக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். அரசு கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும். படிக்கும் மாணவர்களுக்கு நல்ல மாதம். மாத பிற்பகுதியில் இரண்டாம் வீட்டிற்கு கிரகங்கள் நகர்கின்றன. வாக்கு பலிதமாகும். பணவரவு அதிகரிக்கும். உறவுகள் நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை நீங்கும். பயணங்களுக்கு நல்ல மாதம். கேது எட்டாம் வீட்டில் இருப்பதால் ஆலய தரிசனம் மன அமைதியைக் கொடுக்கும் அன்னதானம் செய்யலாம் நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் ராசிக்கு ராசி நாதன் சுக்கிரன் வந்து ராகு உடன் இணைகிறார். மாத பிற்பகுதியில் இரண்டாம் வீட்டில் செவ்வாய், பாக்ய ஸ்தானத்தில் சனி நினைத்த காரியத்தை நிறைவேற்றுவார். பத்தாம் வீட்டில் குரு பதவி உயர்வு, பதவி மாற்றத்தை கொடுப்பார். நல்ல வேலை கிடைக்கும். வேலையில் மாற்றத்தை கொடுக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். வேறு ஊரில் இருந்து சொந்த ஊருக்கு இடமாற்றம் ஏற்படும். தொழில் பிசினஸ் முன்னேற்றம் ஏற்படும். கௌரவ பதவி தேடி வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுக்கிரன்,புதன் ராகு ராசியில் இணைந்து உற்சாகத்தை ஏற்படுத்துவார். இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. திருமணம் சுப காரியங்களில் வெற்றி உண்டாகும். பத்தில் குரு இருப்பதால் குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தில் உள்ள செவ்வாயின் மீது விழுகிறது. குடும்பத்தில் மங்கள காரியம் நடைபெறும். ராகு கேது உங்களுக்கு சில தடைகளை ஏற்படுத்தினாலும் சுபமாக முடியும். பதவிக்காக காத்திருப்பவர்களுக்கு பதவி தேடி வரும். மாணவர்களுக்கு இந்த மாதம் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சிகளில் தெளிவு பிறக்கும். வண்டி வாகனம் வாங்கலாம். புது வீடு கட்ட வாஸ்து செய்யலாம். பரம்பரை சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். மே மாதம் அற்புதமான மாதம் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம். திடீர் மருத்துவ செலவுகள் வரும்.

மிதுனம்

மிதுனம்

புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு ராசியில் செவ்வாய், விரைய ஸ்தானத்தில் ராகு, புதன், லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், அஷ்டம ஸ்தானத்தில் சனி, பாக்ய ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் உங்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் யோகங்கள் தேடி வரும். நல்ல திருப்புமுனை வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் இடமாற்றம் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் ஏற்படும். விரைய ஸ்தானத்தில் உள்ள புதன், ராகு சில நேரங்களில் மன குழப்பத்தை ஏற்படுத்துவார். உணர்வு பூர்வமாக பேசுவதை கைவிட்டு அறிவுப்பூர்வமாக யோசித்து பேசவும். பணவரவு நன்றாக இருக்கும். தெரியாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணம் சுப காரியம் தொடர்பாக மாத இறுதியில் முயற்சி செய்யலாம். வாகனங்கள், சொத்துக்கள் வாங்க அவசரம் காட்ட வேண்டாம். பயணங்களை ஒத்திப்போடவும். சனிக்கிழமை பெருமாள் கோவிலில் அன்னதானம் செய்யலாம்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், லாப ஸ்தானத்தில் புதன், ராகு, விரைய ஸ்தானத்தில் செவ்வாய், ஏழாம் வீட்டில் சனி, அஷ்டம ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 12ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் சில தடைகள் ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். பிரச்சினைகள் வந்தாலும் வேலையை விட்டு விட வேண்டாம். உயரதிகாரிகளுடன் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லவும். முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும் என்றாலும் பெரிய அளவில் பணம் முதலீடு செய்வதை தவிர்த்து விடவும். ஏழில் சனி இருந்தாலும் குடும்ப ஸ்தானத்தில் குரு பார்வையிடுவதால் திருமண சுப காரியத்திற்கு முயற்சி செய்யலாம். தாமதங்களுடன் நல்ல செய்தி தேடி வரும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்தவும். வாழ்க்கைத்துணையிடம் பெரிய அளவில் சண்டை போட வேண்டாம். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடவும். புதன் சூரியன் வாழ்க்கையில் சந்தோஷத்தை தருவார்கள். மாணவர்கள் குருவின் ஆசிகளை பெறவும். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதம். கண்டகச்சனி இருப்பதால் வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு பழக்கங்களில் கவனமாக இருக்கவும். காரமான உணவுகளைத் தவிர்த்து விடவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+