For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே மாத ராசி பலன் 2022: மே மாதத்தில் யோகத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் நீங்கள்தான்

மே மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியை பொருத்து மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள், பரிகாரங்களைப் பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: மே மாதம் சித்திரை வைகாசி மாதங்கள் இணைந்த மாதம். மே மாதத்தில் சூரியன் தனது உச்ச வீட்டில் இருந்து உழைப்பின் வீட்டிற்குள் நுழைகிறார். அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது. சாமானியனையும் உழைப்பினால் சாதிக்க வைக்கும் மே மாதம். இந்த மாதத்தில் மேஷம் முதல் கடகம் வரையிலான ராசிகளில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். பண வரவு அதிகரிக்குமா?, உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மேஷத்தில் சூரியன், ராகு, ரிஷபத்தில் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் செவ்வாய் சனி, மீன ராசியில் சுக்கிரன்,குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் சூரியன் மேஷத்தில் இருந்து 15ஆம் தேதி ரிஷபத்திற்கு மாறுகிறார். சுக்கிரன் மே 17 செவ்வாய் மீன ராசிக்கு மாறுகிறார். 23ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து மேஷம்,ரிஷபம், மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

ஸ்ரீ ரங்கத்தில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்... ரங்கா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம் ஸ்ரீ ரங்கத்தில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்... ரங்கா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்

மேஷ ராசி

மேஷ ராசி

செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, உங்கள் ராசி இந்த மாதம் வலுவாக உள்ளது. இந்த மாதம் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். வேலை தேடினால் நல்ல வேலை கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். பாசிட்டிவ் எண்ணங்களுடன் முயற்சி செய்யுங்கள் நல்லதே நடக்கும். திருமண நிச்சயம் நடைபெறும். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு சுபமான மாதம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ராகு இரண்டாம் வீட்டில் இருக்கிறார். வேலையில் மாற்றம் கிடைக்கும். இடமாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மாதம் முயற்சி செய்யலாம். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். முதலீடுகளுக்கு லாபம் கிடைக்கும். திருமணம் சுப காரியம் நல்ல விதமாக கை கூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். படிக்கும் மாணவர்களுக்கு நல்ல மாதம். மாத பிற்பகுதியில் ராசிக்குள் சுக்கிரன் வருவதால் மனத்தெளிவு அதிகரிக்கும். முகத்தில் பொலிவு கூடும். இரண்டாம் வீட்டிற்கு கிரகங்கள் நகர்கின்றன. வாக்கு பலிதமாகும். பணவரவு அதிகரிக்கும். உறவுகள் நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை நீங்கும். பயணங்களுக்கு நல்ல மாதம். ஆலய தரிசனம் மன அமைதியைக் கொடுக்கும் அன்னதானம் செய்யலாம் நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பத்தாம் வீட்டில் சனி பதவி உயர்வு, பதவி மாற்றத்தை கொடுப்பார். நல்ல வேலை கிடைக்கும். வேலையில் மாற்றத்தை கொடுக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். வேறு ஊரில் இருந்து சொந்த ஊருக்கு இடமாற்றம் ஏற்படும். தொழில் பிசினசில் முன்னேற்றம் ஏற்படும். கௌரவ பதவி தேடி வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். திருமணம் சுப காரியங்களில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மங்கள காரியம் நடைபெறும். பதவிக்காக காத்திருப்பவர்களுக்கு பதவி தேடி வரும். மாணவர்களுக்கு இந்த மாதம் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சிகளில் தெளிவு பிறக்கும். வண்டி வாகனம் வாங்கலாம். புது வீடு கட்ட வாஸ்து செய்யலாம். பரம்பரை சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். ராகு கேது உங்களுக்கு சில தடைகளை ஏற்படுத்தினாலும் சுபமாக முடியும். விரைய ஸ்தானத்தில் உள்ள புதன், ராகு சில நேரங்களில் மன குழப்பத்தை ஏற்படுத்துவார். மே மாதம் அற்புதமான மாதம் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம். திடீர் மருத்துவ செலவுகள் வரும். நோய்கள் நீங்க பகவான் தன்வந்திரியை வணங்கலாம்.

மிதுனம்

மிதுனம்

புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் இடமாற்றம் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் ஏற்படும். உணர்வு பூர்வமாக பேசுவதை கைவிட்டு அறிவுப்பூர்வமாக யோசித்து பேசவும். பணவரவு நன்றாக இருக்கும். தெரியாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணம் சுப காரியம் தொடர்பாக மாத இறுதியில் முயற்சி செய்யலாம். வாகனங்கள், சொத்துக்கள் வாங்க அவசரம் காட்ட வேண்டாம். பயணங்களை தள்ளிப்போடவும் போடவும். சனிக்கிழமை பெருமாள் கோவிலில் அன்னதானம் செய்யலாம்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் யோகங்கள் தேடி வரும். நல்ல திருப்புமுனை வரும். அஷ்டமத்து சனியால் சில தடைகள் ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். பிரச்சினைகள் வந்தாலும் வேலையை விட்டு விட வேண்டாம். உயரதிகாரிகளுடன் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லவும். முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும் என்றாலும் பெரிய அளவில் பணம் முதலீடு செய்வதை தவிர்த்து விடவும். ஏழில் சனி இருந்தாலும் குடும்ப ஸ்தானத்தில் குரு பார்வையிடுவதால் திருமண சுப காரியத்திற்கு முயற்சி செய்யலாம். தாமதங்களுடன் நல்ல செய்தி தேடி வரும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்தவும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடவும். புதன் சூரியன் வாழ்க்கையில் சந்தோஷத்தை தருவார்கள். மாணவர்கள் குருவின் ஆசிகளை பெறவும். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதம்.

 சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே இந்த மாதம் உங்களுக்கு புதிய வேலை கிடைக்கும். மாத பிற்பகுதியில் சூரியன் பத்தாம் வீட்டிற்கு வருவதால் புதிய தொழில் தொடங்கலாம். பத்தாம் இடத்தில் வரப்போகும் சூரியன் பதவி உயர்வைத் தருவார். பண வரவு அபரிமிதமாக இருக்கும். சொத்து வாங்க முயற்சி செய்யலாம். பதவி உயர்வு அதிகாரம் கிடைக்கும். குருவின் பார்வை, லாப ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் யோகங்கள் அதிகம் நடக்கும் மாதம். திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் திருமணம் கைகூடி வரும். குரு ஏழாம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் தம்பதியரிடையே இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும். கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் கல்வி முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். மனதில் தெளிவு பிறக்கும் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும். கண்டகச்சனி இருப்பதால் வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு பழக்கங்களில் கவனமாக இருக்கவும். காரமான உணவுகளைத் தவிர்த்து விடவும். உடலில் உஷ்ணம் அதிகமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் வந்தாலும் சரியாகும்.

கன்னி

கன்னி

புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த மாதம் நிறைய செலவுகள் வரும். சுப செலவுகளாக மாற்றுங்கள். வேலையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் வேலையில் சிக்கல் இன்றி தொடரலாம். நிறைய பண வரவு வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் பணம் கடனாக கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். குருவின் பார்வையால் திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். மாணவர்களுக்கு இந்த மாதம் அற்புதமாக உள்ளது. உயர் கல்விக்காக திட்டமிடலாம். வெளியூர் பயணங்கள் வெற்றியைக் கொடுக்கும். சிலர் வீட்டினை பராமரிப்பு செய்வீர்கள். பெண்கள் வீட்டிற்குத் தேவையான மின்சார சாதனங்கள் வாங்கலாம். வீடு மாற்றம் ஏற்படும். உணவு விசயங்களில் கவனம் தேவை. மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பிரச்சினைகள் நீங்கி உற்சாகம் அதிகரிக்கும்.

English summary
May month Rasi palan 2022: Check out Rasi palan for the month of May 1st 2022 to May 31st 2022, Mesham, Rishabam, Mithunam, Kadhagam, Simmam, Kanni.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X