மே மாத ராசி பலன் 2023: வேலையில் புரமோசன்..மனம் போல மண வாழ்க்கை யாருக்கு கிடைக்கும்?
சென்னை:
மே மாதத்தில் சூரியன் மேஷம், ரிஷபம் ராசிகளில் பயணம் செய்கிறார். புதன் மேஷ ராசியில் குரு, ராகு உடன் பயணம் செய்கிறார். சுக்கிரன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி செவ்வாய் உடன் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு பிருகு மங்கள யோகம் கைகூடி வரப்போகிறது. மே மாதத்தில் மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மே மாதம் 12ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். மே 15ஆம் சூரியன் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். மே மாத இறுதியில் சுக்கிரன் கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கும்ப ராசியில் சனி, துலாம் ராசியில் கேது பயணம் செய்கிறார்.
மிதுனம்: நவ கிரகங்களின் பயணத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. நீங்கள் நினைத்த காரியம் கைகூடி வரப்போகிறது. நற்பலன்கள் தரக்கூடிய மாதமாக மே மாதம் அமைந்துள்ளது. லாப ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன. செய்யும் முதலீடுகளில் லாபங்கள் தேடி வரும். நட்பும் உறவும் தேடி வரப்போகிறது. உங்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் தேடி வரப்போகிறார்கள். திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கப்போகிறது. வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரப்போகிறது. கல்யாண யோகமும் கைகூடி வரப்போகிறது.

பண மழை: குரு பகவானின் பார்வையும் பயணமும் உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கப்போகிறார். செவ்வாய் பகவான் பயணம் உங்களுக்கு காரிய வெற்றிகளை தேடி தரப்போகிறார். புது வேலை, புரமோசன், சம்பள உயர்வு தேடி வரப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. அச்சம் நீங்கும். நோய்கள் படிப்படியாக குணமடையும். மே மாதத்தில் உங்கள் காட்டில் பண மழை பொழியப்போகிறது. நனையத்தயாராகுங்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். வெற்றிகள் தேடி வரப்போகிறது. மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும்.
கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே உங்களுக்கு தன ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் பண வருமானம் அதிகரிக்கும். மே மாதம் உங்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். புது முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். செய்யும் தொழிலில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். மனம் போல மண வாழ்க்கை கிடைக்கப்போகிறது.

பண விரையம்: அஷ்டமத்து சனி இருப்பதால் அகலக்கால் வைக்காதீர்கள். யோசித்து முதலீடு செய்வது நல்லது. சுக்கிரன் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு சுப செலவுகளும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகமும் வெளிநாடு செல்லக்கூடிய யோகமும் தேடி வரப்போகிறது. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்க சிவபுராணம் படிக்க சிந்தனையில் தெளிவு பிறக்கும். மே மாதம் முதல் உங்கள் வாழ்க்கையில் மாற்றமும் முன்னேற்றமும் தேடி வரப்போகிறது.












Click it and Unblock the Notifications