மே மாத ராசிபலன்கள் 2019: வீடு வாங்கும் யோகம் கை கூடி வருது
மகரம் ராசிக்காரர்களுக்கு மே மாதம் உயர்வான மாதம் வீடு வாங்கும் யோகம் கூடி வருகிறது. மே மாதம் இன்னும் என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்று பார்க்கலாம்.
மதுரை: மே மாதம் உழைப்பாளர்கள் மாதம். வசந்த மாதம். கோவில்களில் கொடை விழாக்கள் அதிகம் நடைபெறும் மாதம் முருகனின் விசாக திருவிழா நடைபெறும் மாதம் மே மாதம்தான். இந்த மாதத்தில் சூரியன் தனது உச்ச வீட்டில் இருந்து உழைப்பின் வீட்டிற்குள் நுழைகிறார். கிரகங்களின் சஞ்சாரம் மகரம் ராசிக்காரர்களுக்கு மே மாதம் யோகங்கள் நிறைந்த மாதம் வெளிநாடு யோகம், வீடு வாங்கும் யோகம் கைகூடி வருகிறது.
சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. கால புருஷ தத்துவப்படி பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது உச்ச ராசியிலும், சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் காலமே மே மாதம். அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது. சாமானியனையும் உழைப்பினால் சாதிக்க வைக்கும் மே மாதம்.
நவகிரகங்களில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் இடப்பெயர்ச்சி மே மாதத்தில் நிகழ்கிறது. சூரியன் மேஷத்தில் இருந்து 15ஆம் தேதி ரிஷபத்திற்கு மாறுகிறார். ரிஷபத்தில் உள்ள செவ்வாய் மே 7ஆம் தேதி மிதுனம் ராசியில் ராகு உடன் கூட்டணி சேருகிறார். மீனம் ராசியில் உள்ள சுக்கிரன் புதன் மேஷம் ராசியில் உச்சம் பெற்ற சூரியனுடன் கூட்டணி சேருகின்றனர். கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து மகரம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

வீடு வாங்கும் யோகம்
மகரம் ராசிக்காரர்கள் மே மாதத்தில் புதன் சுக்கிரன் சாதகமாக உள்ளனர். மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வெளிநாட்டு யோகம் கை கூடி வருகிறது. லாப ஸ்தானத்தில் குரு, 12ஆம் வீட்டில் சனி கேது சஞ்சாரம் அமைந்துள்ளது. 4ஆம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்றிருப்பதால் அரசு வழியில் ஜாக்கிரதையாக இருங்கள். எதிர்ப்புகள் அதிகம் நடைபெறும். 12ஆம் வீட்டில் சனி பகவான் இருப்பதால் வேலையில் மாற்றம் உருவாகும். வீடு வாங்கும் முயற்சி கை கூடும்.
அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவீர்கள்.

வெளிநாடு செல்லும் யோகம்
சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். வெளிநாடுகளில் வேலை செய்தவர்கள் சொந்த வீடு திரும்புவார்கள். பிள்ளை வரம் கிடைக்க இறைவன் அருள் கிடைக்கும். பெண்களுக்கு இது உயர்வான மாதம் பதவி உயர்விகள் தேடி வரும்.

சூரியன் புதன் சுக்கிரன்
மூன்றாம் வீட்டில் உச்சம் பெற்றுள்ள சுக்கிரன் மே 11ஆம் தேதி நான்காம் வீடான மேஷத்தில் புதன், சூரியன் உடன் இணைவது நல்ல அம்சத்தையும் சாதகமான பலனையும் தருகிறது. மே 15ஆம் தேதிக்கு மேல் சூரியன் ரிஷபத்திற்கு செல்வது நல்ல அமைப்பு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் காரமான உணவுகளை சாப்பிடாதீங்க.

வண்டி வாகனத்தில் கவனம்
செவ்வாய் 5ஆம் வீட்டில் சாதகமாக அமர்ந்திருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு சாதமான மாதம். ஆறாம் வீட்டில் ராகு உடன் செவ்வாய் இணையப்போவதால் எதிரிகள் தொல்லை ஒழியும். நோய்கள் குறைந்து மருத்துவ செலவுகள் தீரும். வண்டி வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையா இருங்க. கூடுதல் கவனம் தேவை.

குழந்தை பாக்கியம்
தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகம் இருக்கும். குரு லாப ஸ்தானத்தில் இருப்பதால் திருமண முயற்சிகள் கைகூடி வரும், காதல் முயற்சிகள் கைகூடி வரும் திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கை கூடி வரும். விட்டுக்கொடுத்து சென்றால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications