மே மாத ராசி பலன்கள் 2019: கடகம் ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடும்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கடகம் - விகாரி-தமிழ் புத்தாண்டு பலன்கள் | Vikari | Tamil Puthandu RasiPalan | Kadagam Rasi

    மதுரை: மே மாதம் உழைப்பாளர்கள் மாதம். வசந்த மாதம். கோவில்களில் கொடை விழாக்கள் அதிகம் நடைபெறும் மாதம் முருகனின் விசாக திருவிழா நடைபெறும் மாதம் மே மாதம்தான். இந்த மாதத்தில் சூரியன் தனது உச்ச வீட்டில் இருந்து உழைப்பின் வீட்டிற்குள் நுழைகிறார். கிரகங்களின் சஞ்சாரம் கடகம் ராசிக்காரர்களுக்கு அற்புதமாக உள்ளதால் வெற்றி மீது வெற்றி வந்து சேரும்.

    சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. கால புருஷ தத்துவப்படி பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது உச்ச ராசியிலும், சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் காலமே மே மாதம். அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது. சாமானியனையும் உழைப்பினால் சாதிக்க வைக்கும் மே மாதம்.

    நவகிரகங்களில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் இடப்பெயர்ச்சி மே மாதத்தில் நிகழ்கிறது. சூரியன் மேஷத்தில் இருந்து 15ஆம் தேதி ரிஷபத்திற்கு மாறுகிறார். ரிஷபத்தில் உள்ள செவ்வாய் மே 7ஆம் தேதி மிதுனம் ராசியில் ராகு உடன் கூட்டணி சேருகிறார். மீனம் ராசியில் உள்ள சுக்கிரன் புதன் மேஷம் ராசியில் உச்சம் பெற்ற சூரியனுடன் கூட்டணி சேருகின்றனர். கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

    கடகத்திற்கு எப்படி

    கடகத்திற்கு எப்படி

    விகாரி வருடம் கடகராசி கடக லக்னத்தில் பிறந்துள்ளது. ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சனி, கேது பாக்ய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்ற சூரியன் லாப ஸ்தானத்திலும் விரைய ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கின்றனர்.

    நன்மைகள் நடைபெறும் மாதம்

    நன்மைகள் நடைபெறும் மாதம்

    கடக ராசிக்காரர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே யோகங்கள் நிறைந்த ஆண்டாக உள்ளது. மீனத்தில் உள்ள புதன் மே 4ஆம் தேதி மேஷ ராசியில் உள்ள சூரியனுடன் இணைகிறார். சுக்கிரன் 11ஆம் தேதி மேஷம் ராசியில் புதன் சூரியனுடன் இணைவது சிறப்பம்சம். மே மாதம் யோகமான மாதமாகும். குரு சூரியனை பார்வையிடுவதால் நன்மைகள் அதிகம் நடைபெறுகிறது. சனி கேது இணைவு 6ஆம் வீட்டில் இருப்பதால் எதிரிகளை வெல்வீர்கள். சிலர் திடீர் எதிரிகளாக மாறலாம் கவனம்.

    வீடு நிலம் வாங்கும் யோகம்

    வீடு நிலம் வாங்கும் யோகம்

    செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் வீடு வாங்கும் யோகம் வரும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு சாதகமான மாதம். செவ்வாய் ராகு விரைய ஸ்தானத்தில் இருப்பதால் நிலம் விற்பனை வகையில் லாபம் கிடைக்கும். 12ஆம் வீட்டில் செவ்வாய் ராகு உடன் இணைவதால் பணத்தை முதலீடு செய்வீர்கள். எச்சரிக்கையுடன் செய்யவும். வீடு கட்ட ஆரம்பிக்கலாம். வண்டி வாகனம் வாங்கலாம்.

    காதல் கை கூடும்

    காதல் கை கூடும்

    செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழு, எட்டாம் வீட்டை பார்ப்பதால் காதல் கை கூடும். கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் அதிகரிக்கும் நல்ல வரன் அமையும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் அமையும். குரு பார்வையும் சுக்கிரன் புதன் மீதும் செவ்வாய் மீதும் விழுவது சிறப்பு அம்சம்.

    புதிய வேலை அமையும்

    புதிய வேலை அமையும்

    பத்தாம் வீட்டில் புதன் சுக்கிரன், சூரியன் கூட்டணி உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் விழுவதால் கல்வியில் நல்ல நிலை ஏற்படும். மாணவர்களுக்கு இருந்த தடங்கல்கள் நீங்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். சிலருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பயணங்களினால் வெற்றி கிடைக்கும். மனைவியின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள் உங்கள் உடல் நலத்திலும் அக்கறை காட்டுங்கள். வேலையில் கவனமாக இருக்கவும். அவசரப்பட்டு வேலையை விட வேண்டாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+