Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மே மாத ராசிபலன்கள் 2019: கும்பம் ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் காத்திருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மே மாதம் உழைப்பாளர்கள் மாதம். வசந்த மாதம். கோவில்களில் கொடை விழாக்கள் அதிகம் நடைபெறும் மாதம் முருகனின் விசாக திருவிழா நடைபெறும் மாதம் மே மாதம்தான். இந்த மாதத்தில் சூரியன் தனது உச்ச வீட்டில் இருந்து உழைப்பின் வீட்டிற்குள் நுழைகிறார். கிரகங்களின் சஞ்சாரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் விதமாக அமைந்துள்ளது. திடீர் அதிர்ஷ்டமும், பணவரவும் தேடி வரும் என்றாலும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. கால புருஷ தத்துவப்படி பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது உச்ச ராசியிலும், சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் காலமே மே மாதம். அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது. சாமானியனையும் உழைப்பினால் சாதிக்க வைக்கும் மே மாதம்.

நவகிரகங்களில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் இடப்பெயர்ச்சி மே மாதத்தில் நிகழ்கிறது. சூரியன் மேஷத்தில் இருந்து 15ஆம் தேதி ரிஷபத்திற்கு மாறுகிறார். ரிஷபத்தில் உள்ள செவ்வாய் மே 7ஆம் தேதி மிதுனம் ராசியில் ராகு உடன் கூட்டணி சேருகிறார். மீனம் ராசியில் உள்ள சுக்கிரன் புதன் மேஷம் ராசியில் உச்சம் பெற்ற சூரியனுடன் கூட்டணி சேருகின்றனர். கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து கும்பம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

நிர்வாகத்திறமை அதிகரிப்பு

நிர்வாகத்திறமை அதிகரிப்பு

உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்றிருப்பதால் வாழ்க்கையின் உச்சத்தை எட்டுவீர்கள். நன்மைகள் அதிகம் நடைபெறும். சமுதாயத்தில் உயர்ந்த மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். நிர்வாகத்திறன் பலராலும் பாராட்டப்பெறுவீர்கள். நிர்வாகத்திறன் பெருமை சேரப்போகிறது வீடு கட்டும் யோகம் கூடி வருகிறது.

தடைகள் நீங்கும்

தடைகள் நீங்கும்

நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் 7ஆம் தேதி மினத்திற்கு சென்று ராகு உடன் சேருவதால் சாதனைகள் நன்மைகள் வந்து சேரும். சமுதாயத்தில் புகழ் பெறுவீர்கள் உயர்கல்வி யோகம் அமையும். செய்யும் வேலைகளில் இருந்த சின்னச்சின்ன தடைகள் நீங்கும்.

உழைப்புக்கு ஏற்ற உயர்வு

உழைப்புக்கு ஏற்ற உயர்வு

கும்ப ராசிக்கு ராசி நாதன் சனி லாப ஸ்தானத்தில் இருக்கிறார். குரு ராகு கேது போன்றவைகளால் நல்லதாக நடக்கும், மே மாதத்தில் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். சுக்கிரன் உச்சம் பெற்று எட்டாம் வீட்டின் மீது விழுவது. உழைப்பிற்கு ஏற்ப உயர்வு கிடைக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் உயர்வான மாதம் இது சோதனைகளை சாதனைகளாக்குவீர்கள்.

வேலையில் புரமோசன்

வேலையில் புரமோசன்

மேஷ ராசியில் சூரியன் புதன் சுக்கிரன் உடன் இணைவது நல்ல அம்சம். 15ஆம் தேதிக்கு மேல் சூரியன் 4ஆம் வீட்டில் இருந்து உங்க ராசிக்கு பத்தாம் வீட்டினை பார்வையிடுகிறார். பத்தில் குரு இருப்பதால் சிறப்பான சாதகம். புரமோசன் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் சாதமான அம்சத்தில் இருக்கிறார். புது வீடு வாங்கலாம். 7ஆம் தேதி ராகு செவ்வாய் சேர்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடலாம்.

எதிலும் எச்சரிக்கை தேவை

எதிலும் எச்சரிக்கை தேவை

தன ஸ்தானத்தில் உள்ள சுக்கிரனால் பேச்சில் இனிமை பிறக்கும் வசீகரிப்பீர்கள். அதிக அளவில் சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பது சுகம் கும்ப ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனம் தேவை. உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். கால்கள், இடுப்பு, நெஞ்சில் அக்கறை காட்டுங்கள். பெண்களுக்கு உயர்வான மாதம் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கடன் வாங்கும் போது எச்சரிக்கை தேவை. அகலக்கால் வைக்க வேண்டாம். தேவையைத்தாண்டி கடன் வாங்க வேண்டாம். திருமணத்தடைகள் நீங்கும். சிலருக்கு குழந்தை பேறு கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+