மே மாத ராசிபலன்கள் 2019: மீனம் ராசிக்காரர்களுக்கு உற்சாகமான மாதம்
மீனம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமான மாதம் இது. மே மாதத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். வெளியூர் உல்லாச பயணம் பலன் தரும். கை நிறைய பணம் சேரும்.
மதுரை: மே மாதம் உழைப்பாளர்கள் மாதம். வசந்த மாதம். கோவில்களில் கொடை விழாக்கள் அதிகம் நடைபெறும் மாதம் முருகனின் விசாக திருவிழா நடைபெறும் மாதம் மே மாதம்தான். இந்த மாதத்தில் சூரியன் தனது உச்ச வீட்டில் இருந்து உழைப்பின் வீட்டிற்குள் நுழைகிறார். கிரகங்களின் சஞ்சாரம் மீனம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமான மாதம் இது உற்சாகம் கரைபுரண்டு ஓடும்.
சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. கால புருஷ தத்துவப்படி பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது உச்ச ராசியிலும், சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் காலமே மே மாதம். அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது. சாமானியனையும் உழைப்பினால் சாதிக்க வைக்கும் மே மாதம்.
நவகிரகங்களில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் இடப்பெயர்ச்சி மே மாதத்தில் நிகழ்கிறது. சூரியன் மேஷத்தில் இருந்து 15ஆம் தேதி ரிஷபத்திற்கு மாறுகிறார். ரிஷபத்தில் உள்ள செவ்வாய் மே 7ஆம் தேதி மிதுனம் ராசியில் ராகு உடன் கூட்டணி சேருகிறார். மீனம் ராசியில் உள்ள சுக்கிரன் புதன் மேஷம் ராசியில் உச்சம் பெற்ற சூரியனுடன் கூட்டணி சேருகின்றனர். கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

உல்லாச பயணம் செல்வீர்கள்
மே மாதம் கிரக நிலை அற்புதமாக உள்ளது. உங்கள் ராசியில் சுக்கிரன் ராசியில் உச்சம் பெற்றுள்ளதால். சுகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தன வாக்கு ஸ்தானத்தில் சூரியன் உச்சம் பெற்றுள்ளதால் உற்சாகமான மாதம். மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சுக்கிரன் உச்சமடைந்திருப்பதால் அதிகமாக இன்ப சுற்றுலா செல்வீர்கள். வங்கிக்கடன்கள் கிடைக்கும். அரசு அப்ரூவல் கிடைக்கும். வெளியூர் உல்லாச பயணம் பலன் தரும். கை நிறைய பணம் சேரும்.

மதிப்பு மரியாதை கூடும்
சூரியன் தன ஸ்தானத்தில் இருப்பதால் வேகம் கூடும். அரசு ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். 15 நாட்களுக்குப் பின்னர் மூன்றாம் வீட்டிற்கு மாறுகிறார். திருமணம் கை கூடி வரும். உங்களின் மதிப்பு மரியாதை கூடும். திருமண பேச்சு வார்த்தை சுபமாக முடியும். திருமணம் முடிந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கைகூடி வரும். பிரச்சினைகள் குறையும்.

வீடு வண்டி வாகன யோகம்
தங்கம் வைரம் நகைககள் வாங்கு வீர்கள். பெண்கள் அதிக நகை வாங்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வீடு, வண்டி வாகனம் வாங்குவீர்கள். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வீர்கள். செவ்வாய் மூன்றாம் இருப்பது சாதகமான அம்சம். நான்காம் வீட்டில் செவ்வாய் ராகு இருப்பதால் கல்வியை தேர்வு செய்வதில் சிறிது மனக்குழப்பம் ஏற்படும். புதன் பகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

யோசித்து முடிவு செய்யுங்கள்
மே 7ஆம் தேதிக்குப் பின்னர் வீடு சொத்து வாங்கும் போது கவனம் தேவை. அம்மாவின் உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை. சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், வேலை வாய்ப்பு கிடைக்கும். பணி மாறுதல் பற்றி சிந்தியுங்கள். சனி கேது இணைவினால் பாதிப்புகள் ஏற்படும். ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்து செய்வது நல்லது பண விசயங்களில் எச்சரிக்கை தேவை.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications