மேஷ ராசிக்காரர்களுக்கு மே மாதம் அதிகார பதவி கிடைக்கும் மாதம்

மே மாதத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம், அட்சய திரிதியை, வைகாசி விசாகம் என பல முக்கிய விஷேச தினங்கள் உள்ளன.மேஷம் ராசிக்காரர்களுக்கு மே மாதம் எப்படி இருக்கிறது. என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: மே மாதம் உழைப்பாளர்கள் மாதம். வசந்த மாதம். கோவில்களில் கொடை விழாக்கள் அதிகம் நடைபெறும் மாதம் முருகனின் விசாக திருவிழா நடைபெறும் மாதம் மே மாதம்தான். இந்த மாதத்தில் சூரியன் தனது உச்ச வீட்டில் இருந்து உழைப்பின் வீட்டிற்குள் நுழைகிறார்.

சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. கால புருஷ தத்துவப்படி பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது உச்ச ராசியிலும், சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் காலமே மே மாதம். அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது. சாமானியனையும் உழைப்பினால் சாதிக்க வைக்கும் மே மாதம்.

நவகிரகங்களில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் இடப்பெயர்ச்சி மே மாதத்தில் நிகழ்கிறது. சூரியன் மேஷத்தில் இருந்து 15ஆம் தேதி ரிஷபத்திற்கு மாறுகிறார். ரிஷபத்தில் உள்ள செவ்வாய் மே 7ஆம் தேதி மிதுனம் ராசியில் ராகு உடன் கூட்டணி சேருகிறார். மீனம் ராசியில் உள்ள சுக்கிரன் புதன் மேஷம் ராசியில் உச்சம் பெற்ற சூரியனுடன் கூட்டணி சேருகின்றனர். கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

வாக்கு பலம் கூடும்

வாக்கு பலம் கூடும்

வீரமும் எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் மேஷ ராசிக்காரர்களே... மே மாதம் உங்களுக்கு அதி அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. காரணம் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. மாதத்தின் முற்பகுதியில் சூரியன் உச்சம் பெற்று ராசியில் அமர்ந்திருக்கிறார். அரசு வகையில் உதவி கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் இரண்டாம் வீடான ரிஷபத்திற்கு நகர்வதால் பேச்சிற்கு மதிப்பு கூடும். வாக்கு பலம் அதிகரிக்கும். குருவின் பார்வை சூரியன் மீது விழுவதால் அதிகார பதவியும் கிடைக்கும்.

சுப விரையம்

சுப விரையம்

தன ஸ்தானத்தில் செவ்வாய் 7ஆம் தேதி வரை இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் தீரும். கோபம் அதிகம் வரும். உஷ்ணம் தொடர்பான நோய்கள் ஏற்படும் கவனம் தேவை. புதன் சுக்கிரன் ராசிக்கு 12ஆம் வீட்டில் இருப்பதால் பொருள் விரையம் ஏற்படும். சுப விரையமாக மாற்றிவிடுங்கள்.

உயர்கல்வி யோகம்

உயர்கல்வி யோகம்

மே 4ஆம் தேதி சூரியனுடன் புதன் இணைவதால் கல்வி முயற்சிகளில் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு யோகம் வரும்.

மிதுன வீட்டில் செவ்வாய் மேஷ வீட்டில் புதன் பரிவர்த்தனை பெறுவதால் தொழில் நுட்ப கல்வி படிக்கலாம். மருத்துவ கல்விக்கு முயற்சி செய்யலாம்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். 18ஆம் தேதிக்கு மேல் மேஷத்தில் உள்ள புதன் ரிஷபத்தில் சூரியனுடன் இணைவதால் தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கவனம் தேவை

கவனம் தேவை

செவ்வாய் 7ஆம் தேதிக்கு மேல் மிதுனத்தில் பயணிக்கிறார். ராகு உடன் இணைவதால் சிறு பயணங்களில் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் சகோதரர்களின் உறவில் பிரச்சினை ஏற்படாமல் கவனமாக இருக்கவும். உதவி செய்யுங்கள். தன வரவு அற்புதமாக இருக்கும்.

 கிரகங்களின் கூட்டணி

கிரகங்களின் கூட்டணி

மீனம் ராசியில் உள்ள சுக்கிரன் மே 11ஆம் தேதி மேஷத்தில் நுழைகிறார். சுக்கிரன், புதன், சூரியன் கூட்டணி அமைக்கின்றனர். முகத்தில் பொலிவு கூடும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை ஏற்படும். பேச்சில் கவனமாக இருங்கள். வாக்குவாதத்தை தவிருங்கள். மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். தகவல் தொடர்பு துறையில் சிலருக்கு வேலை கிடைக்கும்.

பதவி தேடி வரும்

பதவி தேடி வரும்

சனி ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் நல்ல வேலை கிடைக்கும். இளைஞர்களுக்கு அற்புதமான வேலை வாய்ப்பு அமையும். மீடியா துறையில் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த உயர்வு கிடைக்கும். சுக்கிரன் ராசியில் இருப்பதால் மனைவி வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும் பதவிகள் தேடி வரும். ஆன்லைன் வேலையில் வெற்றி கிடைக்கும். கடன் வாங்க வேண்டாம்.

சகோதரர்களின் உதவி

சகோதரர்களின் உதவி

குரு வக்ரம் 8 ஆம் வீட்டில் சில தடைகளை உருவாக்குவார். சனியும் வக்ரமடைகிறார். சூரியன் வலுவாக இருந்தாலும் முயற்சிகள் பலிக்க தாமதம் ஏற்படும்

குரு வலுப்பெற்ற ஜாதகருக்கு பிரச்சினையில்லை. செவ்வாய் ராகு, சனி கேது கூட்டணி புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் கூட்டாளிகளின் உதவியும், சகோதரர்களின் உதவியும், வீட்டில் மனைவியின் உதவியும் கிடைக்கும் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினை தீரும்

குல தெய்வ வழிபாடு

குல தெய்வ வழிபாடு

தசாபுத்தி பலவீனமாக இருந்தால் ஜாதகத்தில் கிரகங்கள் சரியில்லாமல் இருந்தால் பண பிரச்சினைகள் ஏற்படும். வேலையில் பிரச்சினை ஏற்படும்.

செவ்வாய் ராகு உடன் இணைவதால் குரு எட்டில் இருப்பதால் ஆரோக்கிய தொந்தரவு ஏற்படும் என்பதால் அக்கறை காட்டவும். உங்கள் குல தெய்வத்தை கிழக்கு திசையை நோக்கி வணங்கவும். ரத்த தானம் செய்யவும். முருகப்பெருமானை வணங்கலாம். கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+