மே மாத ராசி பலன்கள் 2019: சிம்ம ராசிக்காரர்களுக்கு யோகமான மாதம்
Recommended Video
மதுரை: மே மாதம் உழைப்பாளர்கள் மாதம். வசந்த மாதம். கோவில்களில் கொடை விழாக்கள் அதிகம் நடைபெறும் மாதம் முருகனின் விசாக திருவிழா நடைபெறும் மாதம் மே மாதம்தான். இந்த மாதத்தில் சூரியன் தனது உச்ச வீட்டில் இருந்து உழைப்பின் வீட்டிற்குள் நுழைகிறார். கிரகங்களின் சஞ்சாரம் சிம்மம் ராசிக்காரர்களுக்கு யோகங்களை அள்ளித்தரும் மாதமாக அமைந்துள்ளது.
சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. கால புருஷ தத்துவப்படி பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது உச்ச ராசியிலும், சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் காலமே மே மாதம். அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது. சாமானியனையும் உழைப்பினால் சாதிக்க வைக்கும் மே மாதம்.
நவகிரகங்களில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் இடப்பெயர்ச்சி மே மாதத்தில் நிகழ்கிறது. சூரியன் மேஷத்தில் இருந்து 15ஆம் தேதி ரிஷபத்திற்கு மாறுகிறார். ரிஷபத்தில் உள்ள செவ்வாய் மே 7ஆம் தேதி மிதுனம் ராசியில் ராகு உடன் கூட்டணி சேருகிறார். மீனம் ராசியில் உள்ள சுக்கிரன் புதன் மேஷம் ராசியில் உச்சம் பெற்ற சூரியனுடன் கூட்டணி சேருகின்றனர். கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து சிம்மம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

உச்சத்தில் சூரியன்
மே மாதத்தில் உங்க ராசிஅதிபதி சூரியன் உச்சத்தில் இருப்பதால் ராஜயோகம் காத்திருக்கிறது. அரசு வேலைக்கு செய்யும் முயற்சிகளில் நன்மைகள் நடைபெறும். மாத பிற்பகுதியில் ரிஷபத்தை சூரியன் அடையும் போது குரு பார்வை கிடைக்கிறது. கவுரவ பதவிகள் தேடி வரும். அப்பாவின் வழியில் பணம் சேரும். சொத்துக்கள் கிடைக்கும். நல்ல காரியங்கள் சுபமாக நடைபெறும் மாதம் பணவரவு அதிகமாக இருக்கும். இது யோகமான மாதமாக அமைகிறது.

வெளிநாடு கல்வி
வெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும், அரசு வழியில் நன்மை உண்டு. தடைகள் நீங்கும் காலம். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உயர்கல்வி யோகம் மாணவர்களுக்கு தேடி வரும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். கல்வி மற்றும் வியாபாரம் தொடர்பாக வெளிநாடு செல்வீர்கள்.
சுக்கிரன் புதன் சூரியன் ஒன்றாக இணையும் இந்த காலத்தில் கல்வியில் உயர்வு கிடைக்கும்.

பணம் நகை பத்திரம்
பண வரவு அற்புதமாக இருக்கும். செவ்வாய் வெற்றிகளை தருவார். சகோதர ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும் மனை வாங்கலாம், மனைவியின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். சுக்கிரன் எட்டாம் வீட்டில் இருப்பதால் பெண்கள் தங்களின் பணம், நகைகளை பத்திரமாக வைத்திருங்கள் 11ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன் மேஷம் ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கு இடம் மாறுவதால் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். அனைத்து வகையிலும் உயர்வான மாதம் இது.

செவ்வாய் ராகு கூட்டணி
சூரியனுக்கு செவ்வாய் தளபதியாக போன்றவர் செவ்வாய் ராகு உடன் இணைந்து லாப ஸ்தானமான 11வது வீட்டில் அமைவது நன்மை தரக்கூடியது. திருமணத்தில் தடைகள் ஏற்பட்டால் நன்மைகள் நடைபெறும். சிக்கல்கள் விலகும் காலம். சுக்கிரன், புதன் சூரியன் மேஷத்தில் இணையும் காலத்தில் நன்மை நடைபெறும். ரிஷபத்தில் புதன் சூரியன் இணைவது நீங்கள் பார்க்கும் வேலையில் நன்மை நடைபெறும். கோபம் அதிகமாக இருக்கும் கட்டுப்படுத்துங்கள்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications