எந்த நோய் யாரை எப்போது தாக்கும்..12 ராசிக்காரர்களும் கவனம்..சத்தாக சாப்பிட்டால் தப்பிக்கலாம்
சென்னை: நவ கிரகங்களும் 12 ராசிகளை ஆளுகின்றன. 12 ராசிகளும் நெருப்பு, நிலம், நீர், காற்று என்று நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ராசிகளின் தன்மையைப் பொறுத்தும் அந்த ராசிகளில் அமர்ந்துள்ள கிரகங்களைப் பொருத்தும் அந்தந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு நோய்கள் பாதிக்கப்படுகின்றன. அதேபோல 12 லக்னகாரர்களுக்கு எந்தெந்த நோய்கள் தாக்கும் இந்த நோய் பாதிப்பை சரிசெய்வதற்கு ஏற்ற என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.

மேஷம்: சூரியன் மேஷம் ராசிக்கு செல்லும் போது சித்திரை மாதம் பிறக்கிறது. அக்னி வெயில் தகிக்கும் மாதம் மேஷ மாதம். செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோய் காய்ச்சல். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தொற்று நோய், சுவாசக் கோளாறு, சிறுநீர் கல் அடைப்பு, ரத்த சோகை வர வாய்ப்பு உள்ளது. இவர்கள் வாழைப்பழம், அத்திப்பழம், ப்ராக்கோலி, பீன்ஸ் போன்றவற்றை சாப்பிட்டு வர நோய் பாதிப்புகள் படிப்படியாக குறையும்.
ரிஷபம்: ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன். வைகாசி மாதத்தில் இந்த ராசியில் சூரியன் பிரவேசிக்கிறார். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அடிக்கடி ஜலதோஷம் தாக்கும். பற்கள் சிதைவு, தோல் நோய், சீதபேதி, காசநோய், விஷக்காய்ச்சல் போன்றவை அவ்வப்போது வந்து போகலாம். இந்த ராசிக்காரர்களுக்கு நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய சம்மந்தம் உண்டு. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, உப்புச்சத்தால் தான் ரிஷப ராசிக்காரர்கள் கஷ்டப்படுவார்கள். இந்த வயிறு பிரச்சனை சரிசெய்ய, பசலைக்கீரை, காய்கறி சாலட், மற்றும் பருப்பு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மிதுனம்: மிதுனத்தின் அதிபதி புதன் கிரகம். சூரியன் இந்த ராசிக்கும் நுழையும் போது ஆனி மாதம் பிறக்கிறது. காற்று காலம் ஆரம்பமாகும். நமது உடலில் மார்பு பகுதியில் இந்த ராசி அங்கம் வகிக்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வாயு தொல்லை, தலைவலி, வயிற்றுக்கோளாறு, தீராத மலச்சிக்கல், புதிய தொற்று நோய் வரக்கூடும். நோய்களையும் மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த பாதாம், மோர், கிரேப் ஃபுரூட், அஸ்பாரகஸ் போன்றவற்றை சாப்பிடலாம்.
கடகம்: கடக ராசியின் அதிபதி சந்திரன். சூரியன் இந்த ராசிக்கு செல்லும் போது, ஆடி மாதம் பிறக்கிறது. ஆடியில் சூறைக்காற்றோடு மழையும் தொடங்கும். நமது உடலில் இதயத்தை குறிக்கும் ராசி கடக ராசி, பொதுவாக தண்ணீரால் வரும் நோய்களை உருவாக்கும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மலச்சிக்கல், அஜீரண கோளாறு, காது கோளாறு, ஏற்படும். பெர்ரிப் பழங்கள், பச்சை காய்கறிகள், மீன் போன்றவற்றை சாப்பிட்டால் டென்சனும் குறையும் வயிறு பிரச்சினைகளும் நீங்கும்.
சிம்மம்: ஆவணி மாதத்தில் சிம்ம ராசியில் சூரியன் நுழைகிறார். சூரியனை அதிபதியாகக் கொண்ட இந்த ராசிக்கும் வரக்கூடிய பொதுவான ஒன்று, உடலில் அடிக்கடி காயம் ஏற்படுவது. ஆவணி மாதம் தென்மேற்கு பருவமழை உச்சத்தில் இருக்கும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு நரம்பு தளர்வு, நெஞ்சு வலி, சிறுநீர் பிரச்சினை, கண், காது கோளாறு, பாத வெடிப்பு, சிம்ம ராசிக்காரர்கள் கடல் உணவுகள், எலுமிச்சை, தேங்காய், பீட்ரூட் போன்றவற்றை சாப்பிடலாம்.

கன்னி: புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசிக்குள் நுழைகிறார். இதுவும் மழைக்காலம்தான். புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோய் முடக்கு வாதம். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சளித்தொல்லை, ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வந்து போகும். கன்னி இந்த ராசிக்காரர்கள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டு வந்தால், செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதில் நார்ச்சத்துள்ள உணவுகளான ஓட்ஸ், வாழைப்பழம், பப்பாளி உட்கொள்வதன் மூலம் நோய் பாதிப்பில் இருந்து தப்பலாம்.
துலாம்: ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் நீச்சமடைகிறார். சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம், ராசி மண்டலத்தில் ஏழாவது ராசியாக விளங்குகிறது. இந்த ராசி நமது உடலில், அடி வயிற்றுப் பகுதியில் அங்கம் வகிக்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய பொதுவான நோயாக பால்வினை நோய் உள்ளது. மேலும் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு கண் பார்வைக் கோளாறு, மூலநோய், விஷக் காய்ச்சல், வாயுத்தொல்லை வந்து போகும். இந்த ராசிக்காரர்கள் பீட்ரூட், சோளம், கேரட், ஆப்பிள், உலர் திராட்சை போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், ஆல்கஹால் சாப்பிடுவதையும் கட்டாயம் குறைத்துக் கொள்ள வேண்டும்.
விருச்சிகம்: கார்த்திகை மாதத்தில் சூரியன் விருச்சிக ராசிக்குள் பயணம் செய்கிறார். ராசி மண்டலத்தில் எட்டாவது ராசியாக விருச்சிகம் திகழ்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய பொதுவான நோய் வாயுத் தொல்லை. இது தவிர இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மஞ்சள் காமாலை, நரம்பு தளர்வு, மனக் கோளாறு, தோல் நோய், சளித்தொல்லை உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். நோய்த்தொற்றுகளால் கஷ்டப்படுவார்கள் பால், தயிர், வால்நட்ஸ், பாதாம், அன்னாசி பழங்களை சாப்பிடலாம்.
தனுசு: குரு பகவானை அதிபதியாகக் கொண்ட ராசி தனுசு. சூரியன் மார்கழி மாதம் முழுவதும் இந்த ராசியில் இருப்பார். இந்த ராசி நமது உடலில் இடுப்புக்குக் கீழ் பகுதியில் ஆதிக்கம் செய்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய நோய் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களாகும். செரிமான கோளாறு, புதிய தொற்று நோய்கள், சளித் தொல்லை இருக்கக்கூடும். இந்த ராசிக்காரர்கள் தானியங்கள், ஸ்கிம்டு மில்க், மீன், தயிர் போன்றவற்றை உணவில் சேர்ப்பது நல்லது.
மகரம்: ராசி மண்டலத்தில் பத்தாவது ராசியாக இருக்கும் மகர ராசியின் அதிபதி, சனி கிரகம் ஆகும். தை மாதம் முழுவதும் இந்த ராசியில் சூரியன் பயணிப்பார். இந்த ராசி மனித உடலில் முழங்கால்களை ஆதிக்கம் செய்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மன அழுத்தம், பித்த நீர் பையில் கோளாறு, சுவாசக் கோளாறு, கண் பார்வைக் கோளாறு, தோல் அரிப்புகள் வந்து போகும். மகர ராசிக்காரர்கள் எலும்பு தொடர்பான பிரச்சனையை அதிகம் சந்திப்பார்கள். பட்டாணி, உருளைக்கிழங்கு, பசலைக்கீரை, ஓட்ஸ், பால் ஆகியவைகளை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வாழலாம்.
கும்பம்: ராசி மண்டலத்தில் பதினோறாவது ராசியாக கும்ப ராசி. சூரியன் இந்த ராசியில் மாசி மாதம் முழுவதும் தங்கி இருப்பார். நமது உடலில் கணுக்கால்களை ஆதிக்கம் செய்யும் ராசி இது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய நோய் நரம்பு தளர்வு ஆகும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மூலநோய், தொற்று நோய், உடல் எடை கூடுதல், பற்சிதைவு, சுவாசக் கோளாறு போன்ற நோய்கள் தாக்கும். கும்ப ராசிக்காரர்கள் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த பேரிக்காய், அத்திப்பழம், எலுமிச்சை, பேரிச்சம்பழம், மாதுளை போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

மீனம்: மீனம் ராசியின் அதிபதி குரு பகவான். கடைசி மாதமான பங்குனி மாதம் முழுவதும் இந்த ராசியில் சூரியன் பயணிப்பார். நமது உடலில் பாதத்தை இந்த ராசி அங்கமாக கொண்டு உள்ளது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுவாக சளித்தொல்லை, சுவாசக் கோளாறு, கண் மற்றும் பற்கள் கோளாறு, பருவநிலை நோய், உடலில் காயங்கள், தழும்புகள் உண்டாகும். சிக்கன், மட்டன், பீட்ரூட், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். போன்றவற்றை அதிகம் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்த்தொற்றுகளில் இருந்து விடுபடலாம்.
கிரக கோளாறுகள்: உடல்நல பாதிப்புகள் நோய்கள் அனைத்தும் கிரக கோளாறுகள் திசா புத்தி கணக்குப்படி தான் வருகிறது. இந்த நோய் வர வேண்டும் என்று விதி இருந்தால் அது விடாது வந்தே தீரும். போவது போயே தீரும். இதனை மனதில் கொண்டு நாட்களை மகிழ்ச்சியோடு போக்க வேண்டும்.மேஷம், சிம்மம்,தனுசு நெருப்பு ராசிகள். ரிஷபம், கன்னி,மகரம் நில ராசிகள். மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள். கடகம் , விருச்சிகம் , மீனம் நீர் ராசிகள், மேற்கண்ட ராசிகளில் எது உங்கள் லக்னமாக வருகிறதோ அந்த லக்னத்துக்குண்டான பஞ்சபூத ஸ்தலத்தை தரிசனம் செய்தால் உங்கள் லக்ன தோஷம் நிவர்த்தியாகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications