ஆஸ்டியோபோரோசிஸ் எனும் ஆபத்து.. 50 வயதாகி விட்டதா? உங்க ஹெல்த்தோடு ஜாதகத்தையும் செக் பண்ணுங்க
மதுரை: உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு வலுவிழப்பு நோயால் பாதிக்கப்படுவதாக மருத்துவ உலகம் சொல்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு நலிவு நோய் எந்த ராசிக்காரர்களுக்கு வரும் மருத்துவ ஜோதிடம் அதற்கான பரிகாரமாக என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
எலும்பு முறிவு: பொதுவாக, ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புப்புரை என்னும் நோயாகும். இந்த நோயானது எலும்பை உருக்கி எலும்பு முறிவை ஏற்படுத்துவதோடு, கழுத்து மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தி காலப்போக்கில் உயரம் 6 அங்குலம் வரையில் குறைய வழி செய்துவிடும். இந்நோயில் எளிதில் ஏற்படும் எலும்பு முறிவின் ஆபத்து இருப்பதனால், இது குறிப்பாக ஆயுள் எதிர்பார்ப்பு மற்றும் வாழ்க்கை முறையை பாதிக்கலாம். எலும்புகள் அரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால் கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது.

யாருக்கு பாதிப்பு: பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட எலும்பு அரிப்பு' தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம். எலும்புகளை பலவீனப்படுத்தி எலும்பு முறிவு அபாயத்தை உண்டு செய்யும் இது மெனோபாஸ் அல்லது மெனோபாஸுக்கு பிறகு வெளிப்படுத்தும் என்பதால் இது குறித்து ஒவ்வொரு பெண்களும் அறிய வேண்டியது அவசியம். பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான், இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனித்தன்மை. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். சிறிய மற்றும் ஒல்லியான பெண்களுக்கு ஆஸ்டியோபோராசிஸ் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிக எடை கொண்ட பெண்களை விட குறைவானவர்கள் எலும்பை இழக்கிறார்கள்.
ஜோதிடத்தில் ஆஸ்டியோபோரோசிஸ்: உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் 'எலும்பு வலுவிழப்பு' நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். எலும்புக்கு காரகனாக சூரியனும் எலும்பிலுள்ள மஜ்ஜைக்கு காரகனாக செவ்வாய் இருந்தாலும் ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு புரை நோய்க்கும் மந்தன் எனப்படும் சனீஸ்வரனே முக்கிய பங்கு வகிக்கிறான். மேலும் ஆயுர்வேதத்தில் எலும்புபுரை நோயை வாத நோயாகவே குறிப்பிடுகின்றனர். எனவே வாத கிரஹங்களான சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் நிலையும் வாத நோயை ஏற்படுத்துகின்றது. சூரியன் மற்றும் செவ்வாயும் சனியுடன் அசுப சேர்க்கை பெறுவதும் கூட எலும்பு புரை நோயை ஏற்படுத்துகிறது.
எந்த ராசிக்காரர்கள்: உடம்பின் கட்டுமானத்திற்கு முக்கியமான எலும்பு தொடர்பான வியாதிகளை ஜாதகத்தில் நில ராசி அதிபதிகளின் நிலையை கொண்டு அறிய முடிகிறது. அந்த விதத்திலும் நில ராசி அதிபதிகளான ரிஷபம் சுக்கிரன், கன்னி புதன் மற்றும் மகரம் சனி ஆகியவற்றின் தொடர்பு எலும்பு புரை நோயை ஏற்படுத்துகிறது. கால்சியம் எனும் தாதுவிற்கு காரக கிரகம் சனியே ஆகும். மேலும் கால்சியம் சமநிலைக்கு மாங்கனிசு எனப்படும் மெக்னிஷியத்திற்கு காரக கிரகம் சூரியன் இரும்பு சத்துக்கு காரக கிரகம் செவ்வாய் ஆகியவற்றின் நிலைப்பாடும் இந்த நோயை தெரிவிக்கிறது. சர்க்கரை சத்து எனப்படும் நீரிழிவு நோய் அதிகமாவதும் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தி எலும்பு புரைநோயை ஏற்படுத்துகிறது. சர்க்கரை சத்திற்கான காரக கிரகம் சுக்ரன் ஆகும். உடம்பில் வைட்டமின் D3 எனப்படும் மெக்னீஷியம் குறைபாடு உள்ளவர்களை சூரிய வெளிச்சத்தில் நிற்க சொல்லுவது அனைவரும் அறிந்ததே.
சூரியன் சனி தொடர்பு: எலும்பிற்கு காரக கிரகமான சூரியன் சனியுடன் எந்தவிதத்தில் தொடர்பு கொண்டாலும் எலும்பு மற்றும் வாத நோய் ஏற்படுகிறது. மேலும் சூரியன் 6,8,12 வீடுகளுடன் தொடர்பு பெறும்போது ஜாதகருக்கு வாதநோய் ஏற்படுகிறது. சூரியன், சந்திரன் செவ்வாயுடன் சேர்க்கை பெற்று லக்னத்தில் நின்றாலும் வாதநோய் ஏற்படுகிறது. பத்தாம்வீடு முதுகு மற்றும் கால் மூட்டுக்களை பற்றி கூறுவதால் பத்தாம் வீட்டில் சனி,செவ்வாய் இனைவு பெற்றாலும் பத்தாம் வீடு சனியின் வீடாகி அங்கு செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் நின்றாலும் தீவிர மூட்டுவலி ஏற்படுகிறது.
வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு: பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது. வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் எலும்புகளையும் வலுப்படுத்துகிறது. பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
கால்சியம் உணவுகள்: ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு எலும்பு பாதிப்பு ஏற்படுவது குறைவு. போதுமான வைட்டமின் டி, கால்சியம் சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது எலும்புகள் வலிமைக்கு உதவும். வைட்டமின் டி எளிதாக சூரிய ஒளி மூலம் கிடைக்கும். பால், யோகர்ட், சீஸ், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், காலே உள்ளிட்ட கால்சியம் சத்துக்கள் கொண்ட உணவுகளை டயட்டில் சேர்த்து கொள்ளலாம். எலும்பு ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான கால்சியத்தை உறிஞ்ச நம் உடலுக்கு மிகவும் அவசியமான நுண்ணூட்டச்சத்துக்களில் ஒன்றான வைட்டமின் டி கட்டாயம் தேவைப்படுகிறது.
மீன் உணவுகள்: எலும்பை வலுவாக வைத்து கொள்ள சால்மன் மற்றும் ட்ரவுட் போன்ற மீன்களை எடுத்து கொள்ளலாம். சைவ உணவு உண்பவர்கள் மஷ்ரூம், பால் மற்றும் தானியங்கள் போன்ற இயற்கை உணவுகள் மூலம் போதுமான வைட்டமின் டியை பெறலாம். வைட்டமின் டியை பெற சிறந்த வழி சூரிய ஒளி தான். சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின் டி, வீட்டைவிட்டு வெளியேசெல்லும் ஆண்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும். ஆனால், வீட்டுக்குள்ளே முடங்கும் பெண்களுக்கு அந்த அளவுக்குக் கிடைப்பதில்லை. அதனாலும் இந்த நோய் வரலாம்.
சத்தான உணவுகள்: குழந்தைக்குப் பால் கொடுக்கும் காலத்தில் பெண்களுக்கு கால்சியம் சத்து இருமடங்காகத் தேவைப்படும். இதை ஈடுகட்டும் அளவுக்கு கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால், கால்சிய குறைபாடும் ஏற்படும். பன்னீரில் செய்த உணவு வகைகளில் கால்ஷியம், மெக்னீஷியம், ப்ளோரைட், பொட்டாஷியம் போன்ற தாதுக்கள் நிறைந்து இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கும் எலும்புகள் பலமாகவும் உதவுவதாக அறிவியல் செய்திகள் கூறுகின்றன.
பரிகாரம்: ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பட்டவர்கள் தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்வது அவசியம். ஆதித்ய ஹிருதயம் படிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கலாம். துவரம் பருப்பு தானம் கொடுக்கலாம். செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம். சனிக்கிழமைகளில் ஆண்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம். சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடலாம்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications