• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதன் பெயர்ச்சி பலன்கள் 2019: நண்பர்கள் சூரியன், சுக்கிரனுடன் கடகத்தில் கூட்டணி சேரும் புதன்

|

சென்னை: புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் வக்ர நிலையில் சஞ்சரித்தார். வக்ரம் முடிந்து தற்போது நேர்கதியில் மிதுனம் ராசியில் இருந்து கடகத்திற்கு புதன் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். கடகம் ராசியில் ஏற்கனவே சூரியன், சுக்கிரன், செவ்வாய் குடித்தனம் செய்து கொண்டிருக்க, இப்போது புத்திநாதன் புதனும் குடியேறுகிறார். 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். புதன் நரம்பின் நாயகன். இவர் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். புதன் நீசமாகவும், 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை, கால் வலிப்பு, நரம்புத் தளர்ச்சி, முடக்குவாதம், பய உணர்வு, சஞ்சலம், சபல புத்தி, மனநலம் குன்றுதல், காக்கை வலிப்பு, அலித்தன்மை, மறதி, நடுக்கம் போன்ற உடல் உபாதைகள் உண்டாகும்.

புதன் கிரகம் மிதுனம் கன்னி இரு வீடுகளுக்கு சொந்தமாகும் கன்னியில் புதன் கிரகம் உச்ச பலம் பெறுகிறது மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சி பலம் பெறுகிறது. புதன் மீனத்தில் நீச்சமாகிறது. புதன் கிரகத்திற்கு நண்பா்கள் சூாியன் சுக்கிரன். புதன் கிரகத்திற்கு நன்மை தீமை கலந்து தரும் சம கிரகங்கள் சனி குரு செவ்வாய். புதன் கிரகத்திற்கு தீமை செய்யும் பகை கிரகம் சந்திரன். இப்போது புதன் தனது நண்பர்கள் சூரியன் சுக்கிரனுடனும் சம கிரகமான செவ்வாய் உடனும் இணைந்து கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இதே புதன் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு மேல் சிம்மத்திற்கு மாறுகிறார். அப்போதும் சிம்ம சூரியன், சுக்கிரன் செவ்வாய் உடன் இணைவார். செப்டம்பர் வரை தனது நண்பர்களுடன் கூட்டணி சேர்ந்து சஞ்சரிக்கும் புதனால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

புதன் உங்கள் தைரிய ஸ்தானதிபதி, ருண ரோக சத்ரு ஸ்தானாதிபதி. உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் உங்கள் ராசிநாதன் புதன் அமர்ந்துள்ளார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். பணம் வருவாய் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவினமும் அதிகாிக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். வண்டி, வாகனங்களை பராமரிப்பு செய்வீர்கள். வேலைகளில் புரமோசன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். வீட்டிற்கு உறவினா் வருவார்கள். வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு அதிகாிக்கும். ஒருமுறை திருவெண்காடு சென்று புதன் பகவானை வணங்கி வர நன்மைகள் நடைபெறும். விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்ல மேலும் நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம்

புதன் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீடான தைரிய ஸ்தானத்தில் அமர்வதால் இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்வா்களுக்கு பிரச்னை ஏற்படும். பண வருவாய்க்கு பஞ்சமிருக்காது என்றாலும் கடன் தொல்லை அதிகாிக்கும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் இல்லாவிட்டால் மருத்துவ செலவு அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று பசுவிற்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுக்கவும்.

மிதுனம்

மிதுனம்

உங்க ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு 2வது இடத்தில் வாக்கு ஸ்தானத்தில் அமர்வது உற்சாகமான கால கட்டமாகும். பேச்சில் இனிமை கூடும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். பணவருவாயும், சொத்து சோ்க்கை உண்டு. உதவிகள் வந்து சேரும். இந்த கால கட்டத்தில் எதிா்பாராத உடல் உபாதை ஏற்படும். உடல் நலனில் அக்கறை செலுத்தவும். ஸ்ரீனிவாசப்பெருமாளை வணங்கி வர மேலும் பல நன்மைகள் நடைபெறும்.

 கடகம்

கடகம்

உங்கள் ராசியில் அமரும் புத பகவானால் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் நடக்கும். அலுவலகத்தில் சிலருக்கு கெட்ட பெயா் வரும் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பாதிப்புகள் குறைய புதன்கிழமை தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கவும்.

 சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். அலுவலகத்தில் பாலிடிக்ஸ் அதிகரிக்கும். எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிறிய, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வம்பு வழக்குகளால் பிரச்னை அதிகாிக்கும். உடல் உபாதை ஏற்படும். நீண்ட நாள் உபாதை அதிக தொல்லை தரும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தம்பதியரிடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து செல்லும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வணங்கவும்.

 கன்னி

கன்னி

புதன் உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் அமர்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும். பண வருவாய் உண்டு. எதிா்பாா்த்த வகையில் பணவருவாய் உண்டு. திடீா் வாய்ப்பு தேடி வரும். வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். காதல் முயற்சிகள் கைகூடும் திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம். நன்மைகள் நடைபெற பச்சை நிற ஆடைகளை அணியவும்.

 துலாம்

துலாம்

புதன் 10வது இடத்தில் அமர்கிறார். வீடு, நிலம், வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான இடமாகும். சகல செளபாக்கியம் கிடைக்கும். பண வருவாய் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். ஆடை ஆபரணம் சோ்க்கை ஏற்படும். திருமணம் சுபகாரியங்கள் கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். பெருமாளை புதன்கிழமைகளில் வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

புதன் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் சனி, சூரியனுடன் இணைந்து அமர்வது நன்மையை தரக்கூடிய அம்சமாகும். வருமானம் அதிகரிக்கும் எந்த பக்கமாவது இருந்து பணம் வந்து கொண்டேயிருக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும். பூா்வீக சொத்தில் பிரச்னைகள் தலைதூக்கும். அப்பாவின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். சகோதர வழியில் ஆதாயம் ஏற்பட்டாலும் திருப்தி இருக்காது. தொழில் தடை ஏற்படும் முயற்சிகளில் கவனக்குறைவு ஏற்படும். பிரச்சினைகளை சமாளிக்க புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் பாதிப்புகள் குறையும்.

தனுசு

தனுசு

புதன் உங்க ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் அமர்கிறார். திடீா் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வருவாய் திருப்தி தரும் கணவரை கூட்டிக்கொண்டு கடை வீதிக்கு சென்று பர்ஸை காலி செய்யுங்கள் பிள்ளைகளின் சாதனை பெருமைப்பட வைக்கும். மறைந்த புதன் நிறைந்த கல்வி. மாணவர்களின் திறமை மேம்படும். புதன்கிழமைகளில் அம்மன்கோவிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள் நன்மைகள் நடைபெறும்.

மகரம்

மகரம்

ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் புதன் அமர்கிறார். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். பயணத்தில் எச்சாிக்கை தேவை. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். நண்பா்கள் எதிரிகளாகும் நேரம் இது. கூட்டுத்தொழிலி பங்குதாரா்களிடம் எச்சாிக்கையாக இருக்கவும். பணப்பிரச்னை தலையெடுக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். பாதிப்புகள் குறைய புதன் கிழமைகளில் புதன் காயத்ரி மந்திரத்தை கூறி பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வணங்கலாம்.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்கு 6வது இடத்தில் புதன் சஞ்சரிக்கிறார். இது திருப்தியான காலமாகும். பண வரவு அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். சகோதா்களின் உதவி கிடைக்கும். ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்வது நல்லது. ஆறாவது இடம் ருண ரோக ஸ்தானம். தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு செல்வது அதிக நன்மை தரும்.

மீனம்

மீனம்

ராசிக்கு 5வது வீட்டில் புதன் அமர்ந்துள்ளதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். வீட்டில் தம்பதியர் இடையே பிரச்சினை வந்து போகும். கணவன் மனைவி இடையே வீண் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்து போவது நல்லது. குடும்பத்தில் எதாவது சண்டை வந்து கொண்டேயிருக்கும். பிள்ளைகளிடம் பிரச்னை ஏதும் செய்யாதீா்கள் அப்புறம் அது தொல்லையில் வந்து முடிந்து விடும். புதன்கிழமைகளில் நவகிரக ஆலயத்திற்கு சென்று புதனை பச்சை வஸ்திரம் சாற்றி வணங்குங்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Now Mercury will be making its transit in the zodiac sign of Cancer from today and Mercury will be making its transit in the zodiac sign Leo on Monday, 26 August, 2019 in the afternoon at 13:56 pm, and will remain posited in the same till 11 September, 2019, 04:47 am
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more