Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனம் ராசியில் நீசம் பெற்ற புதனால் எந்த ராசிக்கு என்ன பாதிப்பு வரும் தெரியுமா

புத்திகாரகன் புதன் இப்போது மீனம் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். இந்த புதனால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதன் பகவான் இப்போது மீன ராசியில் நீசமான நிலையில் அமர்ந்துள்ளார். இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில் புதன் நீசமாக இருப்பார். புதன்தான் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை ஆள்பவர். ஆண்களுக்கு ஆண்மை குறைவையும், பெண்களுக்கு பெண்மை குறைவையும் தரக்கூடிய அலி கிரகம். புதன் ஒருவரின் ஜாதகத்தில் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு ஏதாவது ஒரு காலகட்டத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். புதன் இன்று முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரைக்கும் மீனம் ராசியில் சஞ்சரிப்பார். புதன் நீசம் பெற்றிருப்பதால் எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

புதன் கிரகம் மிதுனம் கன்னி ஆகிய இரு வீடுகளுக்கு சொந்தமாகும் கன்னியில் புதன் கிரகம் உச்ச பலம் பெறுகிறது மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சி பலம் பெறுகிறது. புதன் மீனத்தில் நீச்சமாகிறது. புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் புதன் பகவான் அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். புதன் நரம்பின் நாயகன். இவர் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும்.

மனிதனின் நரம்பு மண்டலமே உடல் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாக உள்ளது. மூச்சு விடுவது முதல் தசைகளின் அசைவுகளை நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது. மனிதர்களின் நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்துவதில் புதன் முக்கிய பங்கு வகிக்கிறார். மூளை,நரம்பு, தண்டுவடப் பிரச்சினைக்கு கரணம் ஒருவரின் ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டிருப்பதே.

மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்கு புதன் 3 மற்றும் 6 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும். வீட்டிலேயே பாலிடிக்ஸ் அதிகரிக்கும். உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். வம்பு வழக்குகளால் பிரச்னை அதிகாிக்கும். வாய் பேச்சில் கவனமாக இருங்க. சிலருக்கு உடல் உபாதை ஏற்படும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் 2 மற்றும் 5ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் அமர்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும். பண வருவாய் உண்டு. நல்ல வாய்ப்பு வீடு தேடி வரும். திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம்.

மிதுனம்

மிதுனம்

மிதுனத்திற்கு புதன் ராசி அதிபதி மற்றும் சுக ஸ்தான அதிபதி. மீன ராசிக்கு 4 மற்றும் 7 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரரான புதன் 10வது இடத்தில் அமர்கிறார். அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான இடமாகும். சகல செளபாக்கியம் கிடைக்கும். பண வருவாய் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் பேசி முடிக்கலாம். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும்.

கடகம்

கடகம்

கடகத்திற்கு புதன் 3 மற்றும்12 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா் புதன். புதன் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் அமர்வது நன்மையை தரக்கூடிய அம்சமாகும். வருமானம் அதிகரிக்கும் எந்த பக்கமாவது இருந்து பணம் வந்து கொண்டேயிருக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும். பங்குச்சந்தை முதலீடுகளால் லாபம் கிடைக்கும். பூா்வீக சொத்தில் பிரச்னைகள் தலைதூக்கும். அப்பாவின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். சகோதர வழியில் ஆதாயம் ஏற்பட்டாலும் திருப்தி இருக்காது. தொழில் தடை ஏற்படும் முயற்சிகளில் கவனக்குறைவு ஏற்படும். பிரச்சினைகளை சமாளிக்க புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் பாதிப்புகள் குறையும்.

சிம்மம்

சிம்மம்

சிம்மத்திற்கு புதன் 2 மற்றும் 11 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் 8வது இடத்தில் அமர்கிறார். திடீா் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். கணவரை கூட்டுக்கொண்டு கடை வீதிக்கு சென்று பர்ஸை காலி செய்யுங்கள் அந்த அளவிற்கு ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வருவாய் திருப்தி தரும் பிள்ளைகளின் சாதனை பெருமைப்பட வைக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன்கோவிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள் நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்கு புதன் ஆட்சிநாதன் மற்றும்10 ஆம் வீட்டுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் களத்திர ஸ்தானத்தில் உங்கள் ஆட்சி நாதன் புதன் அமர்கிறார். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். பயணத்தில் எச்சாிக்கை தேவை. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். நண்பா்கள் எதிரிகளாகும் நேரம் இது. கூட்டுத்தொழிலி பங்குதாரா்களிடம் எச்சாிக்கையாக இருக்கவும். பணப்பிரச்னை தலையெடுக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டமாகும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்கு புதன் பகவான் 9 மற்றும் 12ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். 6வது இடத்திற்கு புதன் செல்கிறார். 6வது இடம் ருண ரோக ஸ்தானம். தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. இது திருப்தியான காலமாகும். பண வரவு அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். சகோதா்களின் உதவி கிடைக்கும். ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்வது நல்லது. சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு செல்வது அதிக நன்மை தரும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு புதன் 8 மற்றும் 11ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். 5வது இடத்தில் புதன் அமர்வதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவி இடையே பிரச்சினை வந்து போகும். வீட்டில் வீண் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வீட்டில் பிள்ளைகளிடம் பிரச்னை ஏதும் செய்யாதீா்கள் அப்புறம் அது தொல்லையில் வந்து முடிந்து விடும்.

தனசு

தனசு

தனசு ராசிக்கு புதன் 7 மற்றும் 10 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் உங்கள் ராசிநாதன் புதன் அமர்ந்துள்ளார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். வேலைகளில் திறமை பளிச்சிடும் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். உறவினா் வருகை உண்டு. பணம் வருவாய் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவினமும் அதிகாிக்கும். வாகன லாபம் உண்டு. வியாபாரத்தில் வேலைப்பளு அதிகாிக்கும். ஒருமுறை திருவெண்காடு சென்று புதன் பகவானை வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்கு புதன் 6மற்றும் 9ஆம் வீடுகளுக்குச் சொந்தக்காரா். புதன் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்வதால் நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்வா்களுக்கு பிரச்னை ஏற்படும். பண வருவாய்க்கு பஞ்சமிருக்காது என்றாலும் செலவுகளும் தேடி வரும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் இல்லாவிட்டால் மருத்துவ செலவு அதிகரிக்கும்.

கும்பம்

கும்பம்

கும்பத்திற்கு புதன் 5 மற்றும் 8 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் உங்கள் ராசிக்கு 2வது இடத்தில் வாக்கு ஸ்தானத்தில் அமர்வது உற்சாகமான கால கட்டமாகும். பேச்சில் இனிமை கூடும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். பணவருவாயும், சொத்து சோ்க்கை உண்டு. உதவிகள் வந்து சேரும். இந்த கால கட்டத்தில் எதிா்பாராத உடல் உபாதை ஏற்படும். உடல் நலனில் அக்கறை செலுத்தவும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்கு 4 மற்றும் 7 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரரான புதன் உங்கள் ராசியில் அமரும் புத பகவானால் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் சிலருக்கு கெட்ட பெயா் வரும் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

பரிகாரங்கள்

பரிகாரங்கள்

புதன் பாதிக்கப்பட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் எனவும், அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம். நரம்பு பிரச்சினை, பேசுவதில் பிரச்சினை உள்ளவர்கள் மகாவிஷ்ணுவை வணங்கி துளசி தீர்த்தம் சாப்பிடலாம். புதனுக்குரிய பச்சைப்பயறு தினமும் சிறிதளவு ஊறவைத்து பச்சையாக சாப்பிடுதல், பச்சை வெண்டைக்காய், பச்சையாக முட்டைகோஸ் சிறிதளவு, உப்பு நீரில் ஊறவைத்த முழு நெல்லிக்காய் ஒன்று என தினமும் சாப்பிட்டு வந்தாலே நரம்பு பலகீனமாக இருப்பவர்கள் வலிமை அடைவார்கள். புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடைகளை அணியலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+