புதன் பெயர்ச்சி 2022..ஆகஸ்ட் மாதத்தில் எந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் தெரியுமா?
சென்னை: புத்தி காரகன் புதன் பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த கிரகப்பெயர்ச்சியால் சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண விசயங்களில் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை சிம்ம ராசியில் பயணம் புதன் பகவானால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்ற பார்க்கலாம்.
மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
புதன்பகவான் ஒருவரின் ஜாதகத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருந்தால் அவர் சிறந்த படைப்பாளியாக திகழ்வார். சூரியனுடன் புதன் இணைந்திருந்தால் சிலருக்கு புத ஆதிபத்ய யோகமும் உண்டாகும். புதனால் சிலருக்கு உயர்கல்வி யோகமும் தேடி வரும். புதன் பகவான் அறிவுக்கு உரிய கிரகமாகும். நம்முடைய திறமைக்கும், அறிவுக்கும் உண்டான நன்மைகளை அடைய புதன் பகவான் சரியான இடத்தில் அமர்ந்து இருப்பது அவசியமாகும். சுய ஜாதகத்தில் புதன் பகவானின் நிலை சரியாக அமையாது இருந்தால் நம்முடைய புத்தியும் மந்த நிலை அடைந்துவிடும். இதனால் நாம் வெற்றியை சந்திப்பதே முடியாத காரியம் ஆகிவிடும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் ஐந்தாவது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். காதல் விசயங்களில் வெற்றி தேடி வரும். திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். உங்கள் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு இது சிறந்த நேரமாகும். கடன் வாங்குவதை தவிர்த்து விடுவது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு புதன் நான்காவது வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் மனதில் அமைதி நிலைத்திருக்கும். திருமணமான தம்பதியினருக்கு நெருக்கம் கூடும். மனைவிக்கு பொன் நகைகளை வாங்கி பரிசளிப்பீர்கள். இந்த நேரத்தில் புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகமும் கை கூடி வருகிறது. உங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காய்ச்சல், சளி போன்ற சின்னச் சின்ன தொந்தரவுகள் வந்து நீங்கும்.

மிதுனம்
புதன் பகவான் மூன்றாவது வீட்டில் பயணம் செய்வதால் உங்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். படைப்பாற்றல் திறன் கூடும். உடன் பிறப்புகளுடன் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். வேலை செய்யும் இடத்தில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. தொழில் வியாபாரத்தில் அதிக அளவில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். மாணவர்கள் பெரியவர்கள், ஆசிரியர்களின் ஆலோசனைக்குப் பிறகு உயர்கல்வியை தேர்வு செய்வது நல்லது.

கடகம்
சந்திர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே.. புதன் பகவான் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் உங்களுடைய பேச்சிற்கு மதிப்பு கூடும். பண வருமானத்தில் சின்னச் சின்ன தடைகள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உங்களுக்கு வேலையில் பளு கூடும் இதனால் மன அழுத்தப் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்களுடன் பேச்சு வார்த்தையில் விட்டுக்கொடுத்து செல்லவும். எதையும் தைரியமாக எதிர்கொண்டால் பிரச்சினைகளை எளிதில் கையாளலாம்.

சிம்மம்
சூரிய பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்குள் புதன் குடியேறுகிறார். மாணவர்களுக்கு உங்கள் லட்சியங்கள் நிறைவேறப்போகிறது. உயர்கல்வி தொடர்பான முயற்சிகள் வெற்றியைத் தரும். கலைத்துறையில் இருப்பவர்களின் படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். உங்களின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் ராசிநாதன் பயணம் செய்கிறார். பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. தவறான நபர்களுடனான தொடர்புகளை துண்டித்து விடுங்கள். தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்த்து விடுவது நல்லது. வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நல்ல செய்தி தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சின்னச் சின்ன பிரச்சினைகள் எட்டிப்பார்க்கலாம்.

துலாம்
புதன் பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும். உங்கள் வளர்ச்சி பிறருக்கு பொறாமையை ஏற்படுத்தும் கண் திருஷ்டி பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. நெருங்கிய நண்பர்கள் உறவினர்களின் உதவி வீடு தேடி வரும். புதன்கிழமைகளில் விஷ்ணு பகவான் ஆலயத்திற்கு சென்று துளசி மாலை சாற்றி வணங்குவது நல்லது.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே..இந்த புதன்பெயர்ச்சியால் உங்களுக்கு பண முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணி செய்யும் இடத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் பாராட்டு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9 வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்கிறார். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். பெற்றோர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும். அப்பாவின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். சகோதர வழியில் ஆதாயம் ஏற்பட்டாலும் திருப்தி இருக்காது.

மகரம்
அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யும் புதன் பகவானால் வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை. மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வருவாய் திருப்தி தரும் பிள்ளைகளின் சாதனை பெருமைப்பட வைக்கும். பண விசயங்களில் கவனம் தேவை. யாருக்கும் பணம் கடனாகக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

கும்பம்
புதன் பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்கிறார். புதனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். கூட்டுத்தொழிலி பங்குதாரா்களிடம் எச்சாிக்கையாக இருக்கவும். பணப்பிரச்னை நீங்கி பொருளாதார வளம் அதிகரிக்கும். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். பயணத்தில் எச்சாிக்கை தேவை. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். நண்பா்கள் எதிரிகளாகும் நேரம் இது. கூட்டுத்தொழிலில் கவனமும் நிதானமும் தேவை. பாதிப்புகள் குறைய புதன் காயத்ரி மந்திரத்தை கூறி பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வணங்கலாம்.

மீனம்
ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்கிறார். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்காக முயற்சி செய்பவர்கள் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து முடிவு செய்வது நல்லது. அரசாங்க தேர்வுகளுக்குத் தயாராகும் போட்டியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல காலம். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு செல்வது அதிக நன்மையை தரும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications