புதன் பெயர்ச்சி.. மீனத்தில் ராகு உடன் இணையும் நீச்ச புதன்.. 18 ஆண்டுகளுக்குப் பின் அபூர்வ யோகம்
சென்னை: குரு வீடான மீன ராசியில் பயணம் செய்யும் ராகு உடன் நீச்சம் பெற்று அமரப்போகும் புதனால் சில ராசிக்காரர்களுக்கு 18 ஆண்டுகளுக்குப் பின்னர் அபூர்வ ராஜ யோகம் கிடைக்கப்போகிறது. சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜ யோகத்தின் மூலம் திடீர் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது.
புதன் பெயர்ச்சி: மீன ராசியில் பயணம் செய்யும் ராகு அந்த ராசிக்கு அதிபதி குருவை போலவே செயல்படுவார். புத்திநாதன் புதன் மார்ச் 07ஆம் தேதியன்று புதன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகப்போகிறார். இந்த கிரகப்பெயர்ச்சி மற்றும் கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான கால கட்டமாகும். திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு சில ராசிக்காரர்களுக்கு அபூர்வ ராஜயோகம் தேடி வருகிறது.

நீச்ச பங்க ராஜயோகம்: புதன் மீன ராசிக்கு நீச்ச வீடு. நீச்ச பங்க ராஜயோகம் என்பது ஆட்சி பெற்ற கிரகத்துடன் நீச்சம் பெற்ற கிரகம் இணைவதன் மூலம் கிடைக்கும் யோகமாகும். மீன ராசியில் ஆட்சி பெற்ற குரு போல செயல்படும் ராகு உடன் நீச்சம் பெற்ற புதன் இணையப்போகிறார். மார்ச் 15ஆம் தேதிக்கு மேல் ராகு புதனுடன் சூரியன் கூட்டணி சேரப்போகிறார். இந்த கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிகாரம், அந்தஸ்து, செல்வாக்கு, வருமானம் வரும். திடீர் எதிர்ப்புகள் பிரச்சினைகள் ஏற்பட்டு கடைசியில் வெற்றியில் முடியும்.
மேஷம்: 12ஆம் வீட்டில் பயணம் செய்யும் ராகுவால் உங்களுக்கு ஏற்கனவே விபரீத ராஜயோகம் கிடைத்துள்ளது. இப்போது புதனும் இணையப்போகிறார். சூரியனும் கூட்டணி சேர்ந்து புதாத்திய யோகத்தினால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அற்புதமான காலகட்டமாகும். ராஜயோகத்தினால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். சிறிய அளவில் பயணங்கள் ஏற்படும். வம்பு வழக்குகளால் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நோய் பாதிப்புகள் முடிவுக்கு வரும். உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் திடீர் யோகம் கை கூடி வரும். அற்புதமான கால கட்டமாகும்.
ரிஷபம்: புதன் பகவான். உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் நீச்ச பங்க நிலையில் பயணம் செய்யப்போகிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும். பணவருமானம் அதிகரிக்கும். திடீா் வேலை வாய்ப்பு தேடி வரும். காதலர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம். நன்மைகள் நடைபெற பச்சை நிற ஆடைகளை அணியவும்.
மிதுனம்: புதன் உங்கள் ராசிக்கு அதிபதி. 4 ஆம் வீட்டு அதிபதி. ராசி நாதன் புதன் 10ஆம் வீட்டில் நீச பங்க ராஜயோகம் பெற்று சஞ்சாரம் நிகழ்வது அற்புதம். திடீர் அதிர்ஷ்டத்தினால் பண வருமானம் வரும் வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சோ்க்கை ஏற்படும். கர்ம, தொழில் ஸ்தானத்தில் இந்த சஞ்சாரம் நிகழ்வது உங்களின் தொழில் விவகாரங்களில் நன்மை அடையலாம். புதன்கிழமைகளில் பெருமாளை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.
கடகம்: புதன் உங்கள் ராசிக்கு ராகு உடன் இணைந்து பயணம் செய்வது நன்மையை தரக்கூடிய அம்சமாகும். வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் எந்த பக்கமாவது இருந்து பணம் வந்து கொண்டேயிருக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் உங்களின் சிந்தனை, திறமை, ஆளுமை அதிகரிக்கும். உடல் நலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிய பாதிப்புகள் குறையும்.
சிம்மம்: புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்வது ராஜயோக காலமாகும். திடீா் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் தேடி வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வருமானம் திருப்தி தரும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள் பாதிப்புகள் குறையும்.
கன்னி: உங்கள் ராசி நாதன் புதன் பகவான் உங்கள் ராசிக்கு 7 ஆம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை குரு, சூரியன் உடன் இணைந்து பார்வையிடப்போகிறார். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். புதனின் பார்வை உங்கள் ராசிக்கு நேரடியாகக் கிடைத்தாலும் திடீர் மருத்துவ செலவுகள் வரலாம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
துலாம்: புதன் உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டில் ராகு உடன் நீச்சம் பெற்று பயணம் செய்யப்போவதால் ராஜயோகம் கிடைக்கப்போகிறது. இது மன திருப்தியான காலமாகும். பண வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பரிசுகள் மற்றும் சலுகைகளைப் பெறலாம். அரசாங்க தேர்வுகளுக்குத் தயாராகும் போட்டியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல காலம்.
விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் ராகு உடன் சூரியன் உடன் பயணம் செய்யப்போவதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்து போவது நல்லது. குழந்தைகள் மூலம் நல்ல செய்தி தேடி வரும்.
தனுசு: உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் ராகு உடன் புதன் உடன் கூட்டணி அமைத்து பயணம் செய்யப்போவதால் வீடு மற்றும் பணி இடத்தில் ஆறுதலான, சுகமான பலனைத் தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். அம்மாவின் ஆரோக்கியம் மேம்படும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். உடலில் இருந்த சோம்பல் விலகி சுறுசுறுப்பு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். வேலையில் புரமோசன் கிடைக்கும். பணம் வருமானம் அதிகாிக்கும். மன தைரியம் அதிகரிக்கும்.
மகரம்: புதன் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் ராகு உடன் பயணம் செய்வதால் பண வருமானத்திற்குப் பஞ்சமிருக்காது என்றாலும் செலவுகளைக் கட்டுப்படுத்தா விட்டால் நிதி நெருக்கடியும் கடன் தொல்லையும் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவா்களுக்கு பிரச்னை ஏற்படும்.
கும்பம்: புதன் உங்கள் ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி 2வது இடத்தில் வாக்கு ஸ்தானத்தில் ராகு உடன் இணையப்போவதால் பணவருமானம் அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை செலுத்தவும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். புதன்கிழமை பெருமாளை வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும். பேசும் வார்த்தைகளுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்களே, உங்கள் ராசியில் பயணம் செய்யும் ராகு உடன் இணைந்து புதன் உடன் உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்யப்போகிறார். கூடவே சூரியனும் இணைந்து அற்புத பலனை தர உள்ளார். உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்களின் பேச்சு திறமையால் புதிய வாய்ப்பு, வருமானம் அதிகரிக்கும். கோபமான பேச்சுக்களை கட்டுப்படுத்தவும்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications