புதன் பெயர்ச்சி: மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு மாறும் புத்தி காரகன் - பலன்கள்

மேஷம் ராசியில் சஞ்சாரம் செய்யும் புதன், நாளை முதல் ரிஷபம் ராசிக்கு இடம் மாறுகிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லாம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புதன் கிரகம் மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு இடம் பெயர்கிறது. 12 ராசிக்கும் பலன்கள், பரிகாரங்களைப் பார்க்கலாம்.

புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருப்பவர் புதன் பகவான். இவர் அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அதனால் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

கிரகங்களில் புதன் உடற்கூறு இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். புதன் பகவான் மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து பெருமாளை தரிசனம்

செய்வதன் மூலம் புதன் பகவானால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கலாம்.

மேஷம்

மேஷம்

உங்கள் ராசியில் இருந்த புதன் இனி ராசிக்கு2வது இடத்தில் தன, வாக்கு ஸ்தானத்தில் அமரப் போவதால் பேச்சில் இனிமை அதிகரிக்கும். பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் கூடும். பாக்கெட்டில் பணம் சேரும் சொத்து சோ்க்கை உண்டு. உடல் நிலையில் கவனம் தேவை. வீட்டில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போவது நல்லது. புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணியலாம். மதுரை மீனாட்சியை தரிசிக்க நல்லதே நடக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் ராசியில் புதன் குடியேறுவதால் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு ப்ரமோசனுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு அதிகரிக்கும். தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு உடல்நலனில் அக்கறை தேவை. நரம்பு தொடர்பான பிரச்சினை ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வந்தால் பாதிப்பு குறையும்.

மிதுனம்

மிதுனம்

உங்களின் ராசிநாதன் புதன் இனி 12வது வீடான விரைய ஸ்தானத்தில் அமர உள்ளதால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள், வாக்குவாதம் வந்து செல்லும். உத்தியோகத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிறிய, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். நரம்பு பிரச்சினை, கை,கால்கள் நடுக்கம், புத்தியில் தடுமாற்றம் சிலருக்கு வரும். மாணவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படாமல் தடுக்க புதன்கிழமையன்று பச்சை நிற ஆடை அணியலாம். பெருமாள் கோவில்களுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபடலாம்.

கடகம்

கடகம்

புதன் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் அமர்வதால் வருமானம் அதிகரிக்கும். இது யோகமான காலமாகும். பண வருவாய் உண்டு. அதிர்ஷ்டம், திடீா் வாய்ப்பு தேடி வரும்.புதன் 11ம் வீட்டில் அமா்ந்திருக்கும்போது வீடு மனை நிலம் வாங்க காலம் கணிந்து வருகிறது. வீட்டில் பொருள் சோ்க்கை ஏற்படும். காதல் முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். பெருமாள் கோவில்களில் அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித் தர மேலும் நன்மைகள் பல நடக்கும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் அமர்வது நன்மையை தரக்கூடியது. அண்ணன் தம்பிகள் உதவிகள் தாராளமாக கிடைக்கும். தம்பதியரிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். காதல் கைகூடும். பண வருவாய் திருப்தி தரும். தாய் வழி உறவினா்கள், தாய்மாமன்கள் நன்மை செய்வார்கள். மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவில் படிக்க இடம் கிடைக்கும். மேலும் நன்மைகள் நடக்க ஆஞ்சநேயரையும், மதுரை மீனாட்சியையும் வழிபடலாம்.

கன்னி

கன்னி

உங்கள் ராசி நாதன் புதன் உங்கள் ராசிக்கு புதன் 9வது இடத்தில் அமர்வதால் பணம் தாராளமாக வரும், சிலருக்கு புரமோசன் ஊதிய உயர்வு கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகளுக்கு நன்மைகள் கிடைக்கும் காலமாகும். மாணவர்களுக்கு கல்லூரிகளில் மேல்படிப்புக்கு இடம் கிடைக்கும். பலருக்கு புது வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் நன்மைகள் நடக்க புதன்கிழமைகளில் ஹயக்ரீவரை வணங்கலாம். பசுவிற்கு அகத்திக்கீரை தானமாக தரலாம்.

துலாம்

துலாம்

புதன் உங்கள் ராசிக்கு 8வது இடத்தில் மறைவதால் வார்த்தைகளில் கவனம் தேவை. பண வருவாய் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும். சிலா் மனை நிலம் வாங்குவதற்கு சரியான காலம். உத்யோகம் தொழிலில் நன்மைகள் ஊதிய உயா்வு பெறுவீா்கள். சிலருக்கு நரம்பு பிரச்சினைகள் ஏற்படும். இதனை தவிர்க்க உடன் பிறந்த சகோதரிகளுக்கு பரிசுகளை வாங்கி கொடுக்கவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் புதன் அமர்கிறார். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். உடல் நலனின் அக்கறை செலுத்தாவிட்டால் ஆபத்தாகி விடும் அப்புறம் தேவையில்லாமல் மருத்துவ செலவுகள் ஏற்படும். சிலருக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வீட்டில் தம்பதியரிடையே சின்னச்சின்ன சண்டை வரும் வாயை மூடி பேசவும். சிவன் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தரலாம் பிரச்சினைகள் சரியாகும்.

தனுசு

தனுசு

6வது இடத்திற்கு புதன் அமர்கிறார். 6வது இடம் ருண ரோக ஸ்தானம். தோல் நோய்கள் ஏற்படலாம். பண வரவு அதிகரிப்பதோடு கூடவே புகழ் கிடைக்கும். சகோதா்கள் உதவி கிடைக்கும். ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்ல வேண்டிய காலம் இதுவாகும். வீட்டில் கணவன்,மனைவியரிடையே உற்சாகம் அதிகரிக்கும். சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

மகரம்

மகரம்

உங்கள் ராசிக்கு 5வது இடத்திற்கு புதன் அமர்கிறார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிப்பார்கள். பள்ளிகளில் பீஸ் கட்டுவதன் மூலம் குழந்தைகள் வழியில் செலவுகள் ஏற்படலாம். பண வருவாய் இருக்கும். சின்னச்சின்ன தடைகள் ஏற்படும். கோவிலில் பசுவிற்கு அகத்திக்கீரை வாங்கித் தருவதன் மூலம் நன்மைகள் நடக்கும்.

கும்பம்

கும்பம்

ராசிக்கு 4வது வீட்டில் புதன் அமர்வதால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் கிடைக்கும். வேலைகளில் புரமோசன் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு உயரும். பணம் பாக்கெட்டில் அதிகம் சேரும் கூடவே அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம். பசுவிற்கு கோதுமை கொடுப்பதன் மூலம் நன்மைகள் நடக்கும்.

மீனம்

மீனம்

புதன் 3வது இடத்தில் அமர்வதால் நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான நேரம் இதுவாகும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். அதே நேரத்தில் இளைய சகோதரர்கள் உடல் நலம் பாதிக்கப்படும். நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்வா்களுக்கு சின்னச் சின்ன பிரச்னை ஏற்படும். பண வருவாய் பஞ்சமிருக்காது. கூடவே செலவுகளும் அதிகரிக்கும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வரலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+