புதன் பெயர்ச்சி: மிதுனத்தில் ஆட்சி பெற்ற புதன் எந்த ராசிக்கு நன்மை செய்வார்?

புத்தி நாதன் புதன் ஜூன் 10 ஆம் தேதி முதல் மிதுனம் ராசிக்கு குடியேறப்போகிறார். மிதுனம் ராசியில் ஆட்சி பெற்று அமரும் புதனால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு என்ன நன்மை கிடைக்கும் என பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதன் கிரகம் ஜூன் 10ஆம் தேதி முதல் ரிஷபத்தில் இடம் பெயர்கிறது. 12 ராசிக்கும் பலன்கள், பரிகாரங்களைப் பார்க்கலாம்.

புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருப்பவர் புதன் பகவான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர்.

புதன் பகவான் மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். புதன் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை என பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு 3வது இடத்தில் புதன் அமர்கிறார். புது முயற்சி செய்ய நல்ல நேரமாகும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான நேரம் இதுவாகும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். இளைய சகோதரர்கள் உடல் நலம் பாதிக்கப்படும். தாய்மாமனுடன் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும். எழுத்தாளர்களுக்கு நன்மை தரும் காலமாகும். புதன்கிழமைகளில் பழங்களை தானம் செய்வது நன்மை ஏற்படும்.

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் ராசியில் இருந்த புதன் இனி ராசிக்கு2வது இடத்தில் தன, வாக்கு ஸ்தானத்தில் அமரப் போவதால் பேச்சில் இனிமை அதிகரிக்கும். பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் கூடும். பாக்கெட்டில் பணம் சேரும் சொத்து சோ்க்கை உண்டு. உடல் நிலையில் கவனம் தேவை. புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணியலாம். சுண்டு விரலில் எமரால்டு மோதிரம் அணியலாம் நன்மைகள் நடக்கும்.

மிதுனம்

மிதுனம்

உங்கள் ராசிநாதன் புதன் இனி உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவதால் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு ப்ரமோசனுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு அதிகரிக்கும். தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு உடல்நலனில் அக்கறை தேவை. நரம்பு தொடர்பான பிரச்சினை ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வந்தால் பாதிப்பு குறையும்.

கடகம்

கடகம்

புதன் இனி 12வது வீடான விரைய ஸ்தானத்தில் அமர்வதால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள், வாக்குவாதம் வந்து செல்லும். உத்தியோகத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு நரம்பு பிரச்சினை, கை,கால்கள் நடுக்கம், புத்தியில் தடுமாற்றம் சிலருக்கு வரும் என்பதால் இதனை தடுக்க, மகா விஷ்ணுவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

சிம்மம்

சிம்மம்

புதன் உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் அமர்வதால் வருமானம் அதிகரிக்கும். இது யோகமான காலமாகும். பண வருவாய் உடன் கூட திடீா் அதிர்ஷ்டம் ஏற்படும். புதன் 11ம் வீட்டில் அமா்ந்திருக்கும்போது வீடு மனை நிலம் வாங்க காலம் கணிந்து வருகிறது. வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். தினசரி சூரிய பகவானை வழிபட நல்லதே நடக்கும்.

கன்னி

கன்னி

உங்கள் ஆட்சி நாதன் புதன் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் அமர்கிறார். பணியிடத்தில் உங்கள் வேலை பளிச்சிடும். தம்பதியரிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். காதல் கைகூடும். பண வருவாய் திருப்தி தரும். தாய் வழி உறவினா்கள், தாய்மாமன்கள் நன்மை செய்வார்கள். மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவில் படிக்க இடம் கிடைக்கும். மேலும் நன்மைகள் நடக்க, எமரால்டு மோதிரம் அணியலாம்.

துலாம்

துலாம்

புதன் உங்கள் ராசிக்கு புதன் 9வது இடத்தில் அமர்வதால் பணம் தாராளமாக வரும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. சிலருக்கு புரமோசன் ஊதிய உயர்வு கிடைக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடக்கும் காலமாகும். மாணவர்களுக்கு கல்லூரிகளில் மேல்படிப்புக்கு இடம் கிடைக்கும். பலருக்கு புது வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதன் காயத்ரி மந்திரத்தை கூறி வர நன்மைகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

புதன் உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் மறைகிறார். இது நல்ல அமைப்புதான் என்றாலும் வார்த்தைகளில் கவனம் தேவை.தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும். பண வருவாய் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். சிலா் மனை நிலம் வாங்குவதற்கு சரியான காலம். உத்யோகம் தொழிலில் நன்மைகள் ஊதிய உயா்வு பெறுவீா்கள். சிலருக்கு நரம்பு பிரச்சினைகள் ஏற்படும். பசுவிற்கு பச்சைப்பயறு சாப்பிட கொடுக்கலாம். புதன் பகவானை பச்சைப்பயறு வைத்து வணங்கி விளக்கேற்றலாம்.

தனுசு

தனுசு

உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் களத்திர ஸ்தானத்தில் புதன் அமர்வதால் வீட்டில் தம்பதியரிடையே சின்னச்சின்ன சண்டை வரும் வாயை மூடி பேசவும். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். உடல் நலனின் அக்கறை செலுத்தாவிட்டால் ஆபத்தாகி அப்புறம் தேவையில்லாமல் மருத்துவ செலவுகள் ஏற்படும். சிலருக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பசுவிற்கு வெல்லம் கொடுக்கலாம்.

மகரம்

மகரம்

6வது இடமான ருண ரோக ஸ்தானத்தில் புதன் அமர்வதால் தோல் நோய்கள் ஏற்படலாம். பண வரவு அதிகரிப்பதோடு கூடவே புகழ் கிடைக்கும். சகோதா்கள் உதவி கிடைக்கும். வீட்டில் கணவன்,மனைவியரிடையே உற்சாகம் அதிகரிக்கும்.ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்ல வேண்டிய காலம் இதுவாகும். பெருமாள் கோவில்களில் நெய் விளக்கேற்றி வழிபட நன்மையே நடக்கும்.

கும்பம்

கும்பம்

உங்கள் ராசிக்கு 5வது இடத்திற்கு புதன் அமர்கிறார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். கூடவே பிள்ளைகளுக்கு படிப்பு செலவும் அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிப்பார்கள். நன்மைகள் நடக்க பச்சைக்காய்கறிகளை பசுவிற்கு தானமாக கொடுக்க நல்லதே நடக்கும்.

மீனம்

மீனம்

ராசிக்கு 4வது வீட்டில் புதன் அமர்வதால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் கிடைக்கும். வேலைகளில் புரமோசன் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு உயரும். பணம் பாக்கெட்டில் அதிகம் சேரும் கூடவே அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கும் செலவு ஏற்படும். ஆலயங்களுக்கு பச்சை நிற வஸ்திர தானம் தரலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+