Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிங்கிளா இருக்கும் மேஷ ராசிக்காரர்களே.. 2020ல் நீங்க ரெமோவா மாறப் போறீங்க!

2020ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. இந்த ஆண்டில் எத்தனை சிங்கிள்ஸ் காதல், திருமணம் என மிங்கிள் ஆவாங்க என்று பார்க்கலாம். சுக்கிரன் நகர்வை பொறுத்தும் குருவின் பார்வையை பொருத்தும் காதல், திருமணம் கைகூடி வரு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Sani Peyarchi 2020 | Mesham | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- மேஷ ராசிக்கு பலன்கள் எப்படி ?

    சென்னை: காதல் கிரகம் சுக்கிரன் கிரகங்களுடன் கூட்டணி சேருவதைப் பொறுத்து நல்லதும் கெட்டதுமான பலன்கள் நடைபெறும். 2020 ஆண்டு சுக்கிரன் மகரம் ராசியில் தனது பயணத்தை தொடங்குகிறார். அவரது பயணம் 2020 டிசம்பர் மாதம் விருச்சிக ராசியில் முடிவடைகிறது. இந்த இடப்பெயர்ச்சியால் 2020ம் ஆண்டு முழுவதும் மேஷம் ராசிக்காரர்களுக்கு காதல் பயணம் எப்படி இருக்கும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். சுக்கிரன் சஞ்சாரத்தினால் மேஷம் ராசிக்காரர்களுக்கு காதல் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

    சுக்கிராச்சாரியார் அசுர குரு. சுக்கிரன் 2020ஆம் ஆண்டு என்ன செய்வார் என பார்க்கலாம். சுக்கிரனுக்கு பிடித்தமான நிறம் வெள்ளை. சுக்கிரன் 27 நாட்களுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரன் சுகத்தை கொடுப்பவர். கணவன் மனைவி ஒற்றுமையை தருபவர். ஒரு மனிதரின் நடத்தையை நிர்ணயிப்பதே சுக்கிரன்தான். சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெறுகிறார். ரிஷபம் துலாமில் ஆட்சி பெறுகிறார் கன்னி ராசியில் நீச்சம் அடைகிறார்.

    நேர்மைக்கும் நியாய தர்மத்திற்கும் பேர் போனவர். சுக்கிரன் ஜனவரி மாதம் மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு ஜனவரி 10 ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் லாபங்கள் அதிகரிக்கும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

    சந்தோஷமான காலம்

    சந்தோஷமான காலம்

    சுக்கிரன் தனது ஏழாம் பார்வையாக ஐந்தாம் வீட்டை பார்க்கிறார் குழந்தைகள் மேன்மை அடைவார்கள். பிப்ரவரி மாதம் சுக்கிரன் மீனத்தில் உச்சமடைகிறார். உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சந்தோஷம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். முதுகு தண்டில் கவனம் தேவை. மர்ம ஸ்தானத்தில் நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.

    குதூகலமான காலம்

    குதூகலமான காலம்

    மார்ச் 1 ஆம் தேதி சுக்கிரன் உங்க ராசியில் அமர்ந்து ஏழாம் வீட்டை பார்க்கிறார். சந்தோஷம் அதிகரிக்கும். காதல் மலரும். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். இரண்டாம் தேனிலவுக்கு கூட போகலாம். மார்ச் 28 சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். அவர் இரண்டாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டை பார்க்கிறார். உங்க சந்தோஷம் அதிகரிக்கும் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.

    சந்தோஷமான காலம்

    சந்தோஷமான காலம்

    ஏப்ரல் 4ஆம் தேதி உங்க ராசிக்கு மூன்றாம் வீடான மிதுனம் ராசியில் அமர்கிறார் சுக்கிரன். ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை மிதுனத்தில் அமரும் சுக்கிரன் இந்த கால கட்டத்தில் வக்ரம் ஆகிறார் பின்னர் நேர்கதி அடைந்து பின்னர் நகர்கிறார். சுக்கிரன் நிறைய நல்ல விசயங்களை கொடுப்பார். மூன்றாம் இடத்தில் சுக்கிரன் அமர்வதால் தைரியம் தன்னம்பிக்கை கூடும். அப்பா வழி உறவுகளால் சந்தோஷம் தரும். மிதுனம் ராசியில் சுக்கிரன் ராகு இணைவு அப்பா வழி சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவும். ஆண்களும் எதிர்பாலின நட்புக்களுடன் எச்சரிக்கையாக இருக்கவும். காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும் கவனம் தேவை.

    கவனம் தேவை

    கவனம் தேவை

    ஆகஸ்ட் மாதம் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு நகரும் சுக்கிரன் உங்க ராசிக்கு 10 ஆம் வீட்டை பார்ப்பதால் தொழில் லாபம் அதிகரிக்கும் புதிய பதவிகள் தேடி வரும். அதே நேரத்தில் சனியின் பார்வையும் மகரத்தில் இருந்து கடகத்தின் மீது விழுகிறது. காதல் பார்ட்னருடன் கவனமாக இருங்க. வேலை செய்யும் இடத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மரியாதை தேடி வரும். செப்டம்பர் 28 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்கிறார். சூரியன் எதிரியோட வீடாக இருந்தாலும் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தின் மீது பார்வை விழுகிறது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணவரவு அதிகரிக்கும். வங்கி சேமிப்பும் அதிகரிக்கும்.

    வாழ்க்கை துணை மீது கவனம்

    வாழ்க்கை துணை மீது கவனம்

    சுக்கிரன் அக்டோபர் 23ஆம் தேதி சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரன் கன்னியில் நீசமடைவதால் குடும்பத்தில் கவனம் தேவை. ஏழாம் அதிபதி ஆறாம் வீட்டில் மறைகிறார். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நவம்பர் 17 வரை கன்னியில் சஞ்சரிக்கிறார். அதன்பின் துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார் சுக்கிரன். அங்கிருந்து உங்க ராசியை பார்க்கிறார். வாழ்க்கை துணை ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
    காதல் விவகாரங்களில் கவனமாக இருக்கவும்.

    உற்சாகமான டிசம்பர்

    உற்சாகமான டிசம்பர்

    டிசம்பர் மாதம் 11ஆம் தேதி விருச்சிகம் ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார். உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சுக்கிரன் மறைந்தாலும் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டினை பார்க்கிறார். வார்த்தைகளில் மேன்மை பிறக்கும். வார்த்தைகளில் வசீகரம் பிறக்கும். நகைச்சுவையாக பேசுவீர்கள். உங்க நட்பு வட்டம் விரிவடையும் சுற்றத்தார் தேடி வருவார். காதல் வாழ்க்கையும் குதூகலமாக இருக்கும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+