Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிதுன ராசி ஏப்ரல் மாத ராசி பலன் தமிழ் 2021: மாற்றமும் முன்னேற்றமும் நிறைந்த மாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிதுன ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் நீசபங்க ராஜயோகம் பெற்றிருப்பதால் திடீர் மாற்றங்கள் வரும். ஏப்ரல் மாத முற்பகுதியில் அதிர்ஷ்டங்களைத் தரப்போகிறது. ஏப்ரல் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நவகிரகங்களின் நாயகன் சூரியன் மீன ராசியில் பயணிக்கிறார் உச்சம் பெற்ற சுக்கிரன், நீச்சம் பெற்ற புதன், ரிஷபத்தில் செவ்வாய் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மிதுன ராசிக்கு ஏப்ரல் மாதம் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

கிரக பெயர்ச்சியைப் பார்த்தால் ஏப்ரல் மாதத்தில் சூரியன் மீன ராசியில் இருந்து 14ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்று உச்சமடைகிறார். உச்சம் பெற்ற சூரியனின் பார்வை துலா ராசியின் மீது விழுகிறது. 10ஆம் தேதிக்கு மேல் சுக்கிரனும் மேஷ ராசியில் பயணிக்கிறார். புதன் நீசம் பெற்று சஞ்சரிப்பார்.

குரு பகவான் ஏப்ரல் 5ஆம் தேதி மகர ராசியில் இருந்து அதிசார பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு உடன் இணைந்துள்ள செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து 13ஆம் தேதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி மிதுன ராசிக்கு ஏப்ரல் மாதம் பலன்கள் எப்படி இருக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

அஷ்டமத்து சனி

அஷ்டமத்து சனி

மாத முற்பகுதியில் பத்தில் சூரியன் பதவியில் உச்சத்தை கொடுப்பார். மாத பிற்பகுதியில் சூரியன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் வந்து உச்சம் பெற்று சஞ்சரிப்பது சிறப்பு. செய்யும் தொழிலில் லாபம் வரும். அதிசார குருவின் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக உள்ளது என்றாலும் சனி உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் உள்ளது. எட்டாம் வீட்டில் உள்ள சனிபகவான் எட்டாத உயரத்தை எட்ட வைப்பார் சனி பகவான். வண்டி வாகனத்தில் போகும் போது கவனம் தேவை.

பண வரவு அதிகரிக்கும்

பண வரவு அதிகரிக்கும்

குருவின் பார்வை உங்களுக்கு அதிக பண வரவைத் தரும் இது நாள் வரை உங்களுக்கு இருந்த நிதி நெருக்கடிகள் நீங்கும். தடைகள் நீங்கி நல்ல சம்பவங்கள் நிறைய நடைபெறும். வேலை மாற்றம் கிடைக்கும். நல்ல வேலைக்கு முயற்சி செய்யலாம் கிடைக்கும். வண்டி வாகன வசதி ஏற்படும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும்

பணப்புழக்கம் அதிகரிக்கும்

குரு பார்வையால் திருமண சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். நல்ல வரன் தேடி வரும். சுப காரியங்களை பேசி முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம் முடிந்து புத்திரபாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் செல்வம் செல்வாக்கு உயரும். பிள்ளைகளுக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

போக்குவரத்தில் கவனம்

போக்குவரத்தில் கவனம்

உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். செவ்வாய் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இல்லை என்பதாலும் அஷ்டமத்தில் சனி இருப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. வேலையில் விழிப்புணர்வு அவசியம்.

குடும்ப வாழ்க்கையில் கவனம்

குடும்ப வாழ்க்கையில் கவனம்

உங்கள் ராசிக்கு செவ்வாய் வருகிறார் பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லவும். அதிக வேகத்தை தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் பிரச்சினைகள் வரும். வேலை காரணமாக குடும்பத்தில் சில சிக்கல்கள் வரலாம் கவனம் தேவை. செவ்வாய் ராசியில் இருப்பதால் சகோதர உறவுகளில் சில பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லவும். சிவ ஆலயம் சென்று பாலபிஷேகத்திற்கு வாங்கித்தரவும். அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடவும் மொத்தத்தில் ஏப்ரல் மாதம் மிதுன ராசிக்கு மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+