Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்க ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கா... அப்ப நீங்க அரசியல்வாதியாகலாம்

அரசாள வேண்டும் என்றும் எல்லோருமே ஆசைப்பட்டாலும் அதற்கான யோகம் வேண்டும். அகண்ட சாம்ராஜ்ய யோகம் இருந்தால் அரசாளும் யோகம் தானாக தேடி வரும் என்கிறது ஜோதிட விதி.

Subscribe to Oneindia Tamil

மதுரை: சில யோகங்கள் அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும். கோடீஸ்வர வாழ்க்கையை கொடுக்கும். சில யோகங்கள் படுகுழியில் தள்ளிவிடும். வறுமையில் வாட வைக்கும் பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளிவிடும். சில யோகங்கள் அரசாளும் யோகத்தை கொடுக்கும் அப்படி ஒரு யோகம்தான் அகண்ட சாம்ராஜ்ய யோகம். அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாதவனைக் கூட அரசனாக்கும் சக்தி உள்ளது இந்த யோகம். இன்றைய காலகட்டத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர், முதலமைச்சர், ஆளுநர் போன்ற உச்சகட்ட பதவிகளை வகிக்கும் சக்தியை இந்த யோகம் தரப்போகிறது.

யோகங்கள் என்பது குறிப்பிட்ட ஸ்தானங்களில் குறிப்பிட்ட கிரகங்கள் இணைந்திருப்பதாகும். இவையே ஒருவருடைய எதிர்கால வாழ்க்கை நிலைகளை குறிப்பிடுகின்றன. சில யோகங்கள், கிரகங்கள் சாதாரண முறையில் சேர்ந்திருப்பதாலும், மற்ற சில யோகங்கள் அதே கிரகங்கள் பிரத்யேகமான ஸ்தான அமைப்புகளுடன் கூடியிருப்பதாலும் ஏற்படுகின்றன. உள்ளாட்சி தேர்தல் வரப்போவதால் நிறைய பேர் ஜாதக நோட்டுடன் ஜோதிடர்களை தேடி போகின்றனர். அரச கிரகங்களும், யோகங்களும் கூடி வந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்க முடியும். இல்லாவிட்டால் கை காசுதான் கரையும்.

புராண ஜோதிட நூல்கள் நூற்றுக்கு மேற்பட்ட கிரக சேர்க்கைகளையும் அதன் பலன்களையும் விவரிக்கின்றன. சிலவற்றை நல்ல யோகங்களாகவும் மற்றும் சிலவற்றை தீய யோகங்களாகவும் தெரிவிக்கின்றன. பொதுவாக ஜாதகத்தில் காணப்படுகின்ற சில முக்கியமான யோகங்களையும் அவற்றின் பலன்களையும் பார்க்கலாம்.

அரசானாக்கும் யோகம்

அரசானாக்கும் யோகம்

பிச்சைக்காரர்களாக இருப்பவர்களை கூட யானை மாலை போட்டு அரசானாக்கி விடும். இதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் என்கிறீர்களா? அகண்ட சாம்ராஜ்ய யோகம் அமையப்பெற்றவர்கள், அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தால் கூட அரசனாக்கும் சக்தி உள்ளது இந்த யோகம். இன்றைய காலகட்டத்தில் அமைச்சர், முதலமைச்சர், கவர்னர், பிரதமர் என்பது போன்ற உச்சகட்ட பதவிகளை இது குறிக்கிறது. 2, 9, 11 ம் பாவாதிபதிகள் சந்திரனுக்கு 1, 4, 7, 10 எனப்படும் கேந்திரத்தில் இருக்க, குரு 5, 11 ம் பாவாதிபதியாகி 2 ம் இடத்தில் இருக்க வேண்டும்.

லாப ஸ்தான அதிபதி குரு

லாப ஸ்தான அதிபதி குரு

குரு 2, 5, 11 ம் இடத்தில் இருக்க, குரு நின்ற வீட்டின் அதிபதி, சந்திரனுக்கு 1, 4, 7, 10, 5, 9 ஆகிய ஏதோ ஓரிடத்தில் இருக்க வேண்டும். இந்த இரண்டுவித அமைப்புகளில் எது இருந்தாலும் அது அகண்ட சாம்ராஜ்ய யோகமே. லக்கினம் ஸ்திர ராசியில் இருந்து ஒன்பதாம் வீட்டு அதிபதி பலமடைந்து சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தாலும் குரு பதினொன்றாம் வீட்டு அதிபதியாக இருந்தாலும் இந்த யோகம் உண்டாகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த யோகத்திற்கு சொந்தக்காரர்தான்.

அதிகார பதவி

அதிகார பதவி

அகண்ட சாம்ராஜ்ய யோகத்தின் பலனாக உங்களுக்கு மற்றவர்களையும் அவர்களது விஷயங்களையும் ஆட்சி செலுத்துவதற்குள்ள அதிகாரங்களை கொடுக்கிறது. பெண்களாக இருந்தால் கணவரும் அவரது நண்பர்களும் உங்களுக்கு முறையான மதிப்பை தருவார்கள். திருமணமான வீட்டில் அரசியாக வாழ்வார்கள். வேலை செய்யும் இடத்தில் அதிகாரம் மிக்க பதவி கிடைக்கும்.

சுக்கிரன் சந்திரன்

சுக்கிரன் சந்திரன்

அரசியலில் பெரிய பதவிகள் வகிக்க காரணமான யோகங்களில் இதுவும் ஒன்று. அது மட்டுமல்லாமல் இந்த யோகத்தின் மூலம் அரசாங்க உயரதிகாரியாகவும் ஆகலாம். குரு நின்ற ராசியாதிபதி சந்திரனுக்கு 1, 4, 7, 10 கேந்திரத்திலும் சந்திரன் நின்ற ராசியாதிபதி சுக்கிரனுக்கு கேந்திரத்திலும் இருந்தால் இந்த யோகம் ஏற்படும். ராகு நின்ற ராசியாதிபதி லக்கினத்திற்கு, சுக்கிரனுக்கு கேந்திரத்தில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு என்று சொல்லப்படுகிறது.

ஆட்சி செய்யும் யோகம்

ஆட்சி செய்யும் யோகம்

லக்கினாதிபதி உச்சம் பெற்று, அவருடன் 2, 9 ம் பாவாதிபதிகள் இணைந்து 10 ம் அதிபதி பலம் பெறுவது சக்கரவர்த்தி யோகம். ஆட்சி செய்வதற்குரிய அத்தனை தகுதிகளையும் இந்த யோகம் கொடுக்கும். ஒருவேளை ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் அதற்கு நிகரான அந்தஸ்தை தந்துவிடும். பெரிய தர்மப்பிரபுவாகவும், தெய்வத் திருப்பணிகளில் ஈடுபாடு கொண்டவராகவும் இவர்கள் இருப்பார்கள்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள்

இதற்கு மூன்று வித யோக நிலைகள் கூறப்பட்டுள்ளன. 10 ஆம் இடத்தில் ராகு இருக்க, அந்த வீட்டின் அதிபதி லக்கினத்தில் இருக்க, லக்கினாதிபதி 9 ல் இருக்க, இவர்கள் சுபகிரகங்களால் பார்க்கப்பட வேண்டும். 10 ல் ராகு இருக்க, அவ்வீட்டுக்குடையோன், 1, 5 லிருக்க 9 ம் பாவாதிபதி 7 ல் இருக்க வேண்டும். ராகு, கேது தவிர மற்றைய ஏழு கிரகங்களும் ஒற்றைப்படை ராசி எனும் ஆண் ராசிகளில் இருக்க வேண்டும். எம்.எல்.ஏ முதல் குடியரசுத்தலைவர் வரை எந்த பதவி வேண்டுமென்றாலும் இந்த யோகம் உள்ளவர்களுக்கு கிடைக்கலாம். இந்த யோகங்கள் மட்டுமில்லாமல் இன்னும் நூற்றுக்கணக்கான யோகங்கள் மூலநூல்களில் சொல்லப்பட்டுள்ளன. இவைகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தாலும், அரசு கிரகமான சூரியனும், சந்திரனும் நல்ல நிலையில் இருப்பது ரொம்ப அவசியம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+