Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோஷங்கள் நீக்கும் வாஸ்து சாந்தி பூஜை - நவகிரக ஹோம பூஜைகள்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை நவ கலசங்கள், நவதான்யங்கள், நவ சமித்துக்கள், மற்றும் நவ மூலிகைகள் கொண்டு நவக்கிரக ஹோமத்துடன் காலசக்கர பூஜை நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

வேலுர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று வாஸ்து நாளை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு வாஸ்து சாந்தி ஹோமம் நடைபெற்றது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நவக்கிரக தோஷங்கள் அகல “நவக்கிரக ஹோமத்துடன் காலசக்கர பூஜை” நடைபெறுகிறது.

சிலரது வீட்டில் குடிப்பதற்கு கூட குடிநீர் கிடைக்காமல் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். சில குடும்பத்தில் வீடு கட்டுதல், மனை வாங்குதல், தொழில் துவங்குவதல், விவசாயம் செய்தல், வீடு பழுது பார்த்தல், நகை வாங்குதல், போன்ற எந்த விதமான செயல்களில் இறங்கினாலும் அதில் பல்வேறு வகையான தடைகள் ஏற்படும். சிலரது வீட்டில் குடும்ப தலைவனோ, குடும்ப தலைவியோ வசிக்க மாட்டார்கள்.

Navagraha Homam and Vasthu Pooja at Sri danvantri arokya peedam

சிலரது வீட்டில் அடிக்கடி பொருட்கள் திருடு போவதும், தீ விபத்து ஏற்படுவதுமாக இருக்கும். சிலரது வீடடில் எவ்வளவு பாடுபட்டாலும் செல்வம் சேரவே சேராது. சிலரது வீட்டில் துர்மரணங்கள் ஏற்படும். இன்னும் சிலரது வீடடில் தேவை இல்லாமல் பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். இதற்கான முக்கிய காரணம் ஜாதக தோஷம் மட்டுமின்றி வாஸ்து பிரச்சனையாக கூட இருக்கலாம். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட நமக்கு பெரிதும் உதவி புரிவது வாஸ்து பகவானும், பரிகார பூஜைகளும் ஒருவகை நிவர்த்தி மார்க்கமாகும்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வாஸ்து தோஷங்களால் ஏற்படும் தடைகள் குறையவும், பூர்ண வாஸ்துப்படி நாம் வாழும் இடங்களை மாற்றி அமைத்து கொள்ளவும். வாஸ்து பிரச்சனைகளால் ஏற்படும் போராட்டங்கள் நீங்கி மன உளச்சலில் இருந்து வெளியேறி வாழ்க்கை பிரகாசமாக வாழ வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும், வாஸ்து சாந்தி பரிகார ஹோமமும் செய்வதன் மூலம் சரியான தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் குடும்பத்தில் உள்ள உறவுகளை மேம்படுத்த முடியும்.

Navagraha Homam and Vasthu Pooja at Sri danvantri arokya peedam

நவக்கிரக ஹோமம் பூஜைகள்

நமது வாழ்வில் 9 கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. வேத ஜோதிடப்படி நவம் என்றால் ஒன்பது என்றும், கிரஹ என்றால் கோள்கள் என்றும் பொருள். ஒருவர் பிறக்கும் பொழுது காணப்படும் கிரக நிலைகள் தான் அவருடைய வாழ்வில் பல்வேறு சூழ்நிலைகளில் அவர்தம் செயல் மற்றும் விளைவுகளை நிர்ணயிக்கின்றன என்பது ஜோதிட விதியாகும் என்கிறார் யக்ஞஸ்ரீ. ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

நமது வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் நவகோள்களின் அனுக்கிரகத்தைப் பெற நவக்கிரக ஹோமம் மிகவும் முக்கியமானது. அவரவரின் கர்ம வினையைப் பொறுத்து தான் அவரது ஜாதகத்தில் 9 கிரகங்களின் நிலை காணப்படும். அதன் அடிப்படையில் தான் வெற்றி தோல்வி காணப்படும். சில சமயங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் தோஷம் காரணமாக வாழ்வில் இடையூறுகள் ஏற்படும்.

Navagraha Homam and Vasthu Pooja at Sri danvantri arokya peedam

ஒன்பது கிரகங்களை திருப்தி படுத்தும் விதத்தில் யக்ஞஸ்ரீ. ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தும் இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம் தோஷங்கள் குறையும். வாழ்வில் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், செல்வ செழிப்பு மற்றும் இடையூறில்லாத வெற்றிகளை பெற முடியும் என்கிறது ஜோதிட சாஸ்த்திரங்கள்.

காலசக்கர பூஜை பலன்கள்

நவ கலசங்கள், நவதான்யங்கள், நவ சமித்துக்கள், மற்றும் நவ மூலிகைகள் கொண்டு நடைபெறும் இந்த ஹோமத்தின் மூலம் துன்பங்கள் குறையும். தடைகள் விலகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி. அதிர்ஷ்டங்கள் மற்றும் நன்மைகள் பெறலாம். நவக்கோள்களின் அனுக்கிரகம் கிடைக்கும். வெற்றிகரமான வாழ்க்கை அமையும். மன அழுத்தம் குறையும். செயல்திறன் கூடும். வாழ்க்கையில் வளர்ச்சி. வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சி. கல்வியில் வெற்றி. நீண்ட ஆயுள். செல்வ செழிப்பு. தொழிலில் முன்னேற்றம். இயற்கை வளம் போன்ற பல்வேறு பலன்களை பெறலாம்.

மேற்கண்ட யாகத்தை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் காலசக்கரமாக அமைத்துள்ள 27 நக்ஷத்திர, 9 நவக்கிரக விருட்ஷங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+