நவராத்திரி 2016 : பூஜைகள், முக்கிய செயல்களை தொடங்க நல்ல நேரங்கள்
சென்னை : முப்பெரும் தேவிகளின் அருளை வேண்டி இந்துக்களால் முறைப்படி விரதமிருந்து அனுஷ்ட்டிக்கப்படுகின்ற நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமாவதுடன் ஒன்பது நாட்கள் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இவ்வாண்டு (துர்முகி வருடம்) புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமை இன்று தொடங்குகிறது. நவமி 10ம் தேதி முன்னிரவில் முடிவடைகிறது.

நவராத்திரி விரதம்
விரதம் இன்று 01ம் தேதி தொடக்கம் 10ம் தேதி வரை அனுஷ்டிக்கப்படும்.
பத்து நாட்கள் வருகின்ற போது துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு கோவிலில் கும்ப பூசை மூன்று தேவியருக்கும் செய்யப்படுகின்றது.
சரஸ்வதிக்குரிய நாள் மூல நட்சத்திர நாளில் ஆரம்பித்து திருவோண நட்சத்திர நாளில் நிறைவு செய்ய வேண்டும் என்று விரத நிர்ணய விதி இருப்பதால் இவ்வாண்டு சரஸ்வதி பூசை 08.10.2016 சனிக்கிழமை ஆரம்பமாகி 10.10.2016 திங்கட்கிழமை நிறைவுபெறுகின்றது.
நவராத்திரி பூஜை தொடக்கம்:
புரட்டாசி 15 - அக்டோபர் 1 சனிக்கிழமை
காலை 06-00 முதல் 09-00 வரை
பகல் 10-30 முதல் 01-30 வரை
ஆயுத பூஜை - சரஸ்வதி சாமி கும்பிட நல்ல நேரம்:
அக்டோபர் 10 திங்கள் கிழமை
பகல் 12-00 முதல் 02-00 வரை
மாலை் 06-00 முதல் 09-00 வரை
விஜய தசமி சாமி கும்பிட நல்ல நேரம் :
அக்டோபர் 11 செவ்வாய்
பகல் 10-30 முதல் 11-00 வரை
பகல் 12-00 முதல் 01-00 வரை
வண்டி வாகனங்கள் வாங்குவதற்கு நல்ல நேரம் :
அக்டோபர் 16 ஞாயிறு 08-00 முதல் 09-00 வரை
அக்டோபர் 21 வெள்ளி 06-00 முதல் 07-00 வரை
வீடு வாங்குவதற்கு, கிரக பிரவேசம் செய்வதற்கு தொழில் துவங்குவதற்கு
அக்டோபர் 03 திங்கள் 09-30 முதல் 10-30 வரை
அக்டோபர் 05 புதன் 09-00 முதல் 10-00 வரை
அக்டோபர் 06 வியாழன் 09-00 முதல் 10-00 வரை
அக்டோபர் 19 புதன் 05-00 முதல் 06-00 வரை
அக்டோபர் 28 வெள்ளி 04-00 முதல் 05-00 வரை
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications