Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்- 2017 - கன்னி

2017 புத்தாண்டு ராசி பலன்கள் அனைத்தும் பொதுவானவை ஜன்ம லக்கின ராசியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள பலன்களாகும். கன்னி ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்வோம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2017ம் ஆண்டு ஆரம்பத்தில் சனி பெயர்ச்சியும் ஆகஸ்ட் மாதம் ராகு கேது பெயர்ச்சியும், செப்டம்பரில் குரு பெயர்ச்சியும் நிகழ உள்ளது.

அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக லக்கினம் தசாபுத்தி பலன்கள், குணாதிசயம், ராசி பலன்கள் மாறுபடலாம். ஜாதகத்தில் சுபபலன்கள் தரக்கூடிய தசை புக்தி அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும் கெடுபலன்கள் குறையும்.

New year Rasi palan 2017 - Kannai

கன்னி ராசி நேயர்களே!

இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானால் மனதில் சந்தோஷமும் நிம்மதியும் அதிகமாக இருக்கும் ஆண்டின் இறுதியில் குருவின் ராசி மாற்றமானது பொருளாதாரத்தில் ஏற்றமான நிலையைக் கொடுக்கும்.

ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் நான்காமிடத்திற்கு வருவது வருவது வீடு நிலம் வாகன யோகத்தைக் கொடுக்கும் இவ்வாண்டு இறுதியில் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி அசுப பலன்களை அதிகமாக கொடுக்கும். ராகு பதினொன்றாமிடத்திற்கும் கேது ஐந்தாமிடத்திர்கும் வருவது சிறப்பு.

ஜனவரி - வீடு, வாகனம் வாங்கும் யோகம்

ஆண்டின் துவக்கத்தில் நான்காமிடத்தில் இருக்கும் சூரியன் அரசாங்க வாகன யோகத்தை தருவார். இம்மாதம் 14ம் தேதி ஐந்தாமிடத்திற்கு சூரியன் வருகிறார் குழந்தைகளால் செலவுகள் அதிகரிக்கும் செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி ஏழாம் இடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் நன்றாக இருக்கும் புதன் இம்மாதம் முழுவதும் நான்காம் இடத்தில் இருப்பது கல்வி நிலையை மேம்படுத்த வழிவகுக்கும் குரு உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது மனதில் சந்தோஷத்தையும் சமுதாயத்தில் மதிப்பு மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுக்கும் சுக்கிரன் ஆறாமிடத்திலிருப்பது பெண்களால் தொல்லை உண்டாகும் இம்மாதம் 27ம் தேதி எட்டாமிடத்திற்கு மாறுகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியத்தை அதிகரிக்கச் செய்யும் சனி வருட ஆரம்பத்தில் மூன்றாமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி தேதி நான்காமிடத்திற்கு வருவது புதிதாக வீடு வாகனம் வாங்கும் யோகத்தைக் கொடுக்கும் ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது அலைச்சலை அதிகரிக்கச் செய்யும் கேது ஆறாமிடத்திலிருப்பது உடல் நிலை சீராக இருக்கும்.

பிப்ரவரி - அதிகாரிகளுடன் சச்சரவு

சூரியன் இம்மாதம் 13ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் அதிகாரிகளுடன் அடிக்கடி சச்சரவு உண்டாகும் புதன் இம்மாதம்03ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது படிப்பில் உன்னத் நிலையை உண்டாக்கும் 22ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது ஷேர்மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் - கவனம் தேவை

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க உத்தியோகம் காரணமாக பிரயாணத்தைக் கொடுக்கும் செவ்வாய் 02ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் வாகனங்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை புதன் 11ம் தேதி ஏழாமிடத்திற்கு வருவது வியாபாரத்தில் விருத்தியைத் தரும் 27ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் தடையைக் கொடுக்கும் குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் - சொத்துக்களில் பங்கு

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி எட்டாம் இடத்திற்கு வருகிறார் அப்பாவினால் மனக் கஷ்டம் உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அப்பா சம்பாதித்த நிலம் வீடு போன்ற சொத்துகளில் பங்கு கிடைக்கும் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே - வெளிநாடு யோகம்

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் நிலை சிறப்படையும் சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை.
இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் - பதவி உயர்வு

இந்த மாதம் சூரியன் 15ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் பதவி உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் புதன் இந்த மாதம் 03ம் தேதி ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார் தகவல் தொடர்பு சிறப்படையும் 18ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் வியாபாரம் தொழில் சிறப்படையும் சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்லும் நிலை உண்டாகும் இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை - லாபம் அதிகரிப்பு

சூரியன் இந்த மாதம் 17ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் செவ்வாய் 11ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் வீடு நிலம் வாங்கி விற்பவர்களுக்கு தொழில் சிறப்படையும் புதன் இந்த மாதம் 03ம் தேதி பதினொன்றாம் இடத்திற்கு வருகிறார் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் 21ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வியாபார முதலீடுகள் அதிகரிக்கும் சுக்கிரன் 26ம் தேதி உங்கள் பத்தாமிடத்திற்கு வருகிறார் பொன் ஆடை ஆபரணத் தொழில் சிறப்படையும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் - பணவரவு

சூரியன் 17ம் தேதி உங்கள் பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும் செவ்வாய் 27ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் நிலம் வீடு வகையில் முதலீடுகள் செய்வீர்கள் சுக்கிரன் 21ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் பண வரவு அதிகரிக்கும் ராகு இம்மாதம் 18ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் செலவுகள் குறையும் வரவினங்கள் அதிகரிக்கும் கேது 18ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கடன்கள் அத்தனையும் தீர்வாகும் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் - உத்தியோக உயர்வு

சூரியன் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் பதவி உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும் செவ்வாய் 13ம் தேதி உங்கள் ஜென்மராசிக்கு வருகிறார் மனதில் கோபம் அதிகரிக்கும் புதன் 27ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் சமயோசித புத்தி சிறப்பைத் தரும் குரு 12ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பணவரவும் வங்கி சேமிப்பும் அதிகரிக்கும் சுக்கிரன் 15ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் - சம்பள உயர்வு

சூரியன் 18ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் கோபமான பேச்சை தவிர்க்கவும் உண்டாகும் செவ்வாய் 30ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் புதன் 30ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பேச்சில் நகைச்சுவைத் தன்மை அதிகரிக்கும் சுக்கிரன் 15ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் - வெளியூர் பிரயாணம்

சூரியன் 17ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் இடமாற்றம் உண்டாகும் புதன் 02ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் கிடைக்கும் 24ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும் சுக்கிரன் 03ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் புதிதாக நகை நட்டுகள் வாங்குவீர்கள் 26ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் - அரசால் பலன்

சூரியன் 16ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் சுக்கிரன் 20ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+