ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்: 2017- துலாம்
2017 புத்தாண்டு ராசி பலன்கள் அனைத்தும் பொதுவானவை ஜன்ம லக்கின ராசியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள பலன்களாகும். துலாம் ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்வோம்.
சென்னை : துலாம் ராசி நேயர்களே! ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் மூன்றாமிடத்திற்கு வருவது புதிதாக வீடு கட்டி அதில் புதுமனை புகுவிழா நடத்தும் நன்மையைக் கொடுக்கும்.
ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுப பலன்களை அதிகமாக கொடுக்கும். ராகு பத்தாமிடத்திற்கும் கேது நான்காமிடத்திற்கும் வருவது சிறப்பு.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் செலவுகள் அதிகமாக இருக்கும் ஆண்டின் இறுதியில் குரு உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
ஜனவரி - இடமாற்றம்
ஆண்டின் துவக்கத்தில் மூன்றாமிடத்தில் இருக்கும் சூரியன் இடமாற்றத்தைத் தருவார். இம்மாதம் 14ம் தேதி நான்காமிடத்திற்கு சூரியன் வருகிறார் அரசாங்க நிதி உதவியுடன் வீடு கட்டுவீர்கள் செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி ஆறாம் இடத்திற்கு வருகிறார் உடன் பிறப்புகளால் தொல்லை உண்டாகும் புதன் இம்மாதம் முழுவதும் மூன்றாம் இடத்தில் இருப்பது எல்லோரிடமும் ஏற்படும் தகவல் தொடர்பு சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது அதிகமான செலவினங்களை கொடுக்கும் பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் சுக்கிரன் ஐந்தாமிடத்திலிருப்பது குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள் இம்மாதம் 27ம் தேதி ஆறாமிடத்திற்கு மாறுகிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் சனி வருட ஆரம்பத்தில் இரண்டாமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி தேதி மூன்றாமிடத்திற்கு வருவது இடமாற்றத்தைக் கொடுக்கும் ராகு பதினொன்றாமிடத்தில் இருப்பது லாபத்தை அதிகரிக்கச் செய்யும் கேது ஐந்தாமிடத்திலிருப்பது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..
பிப்ரவரி - வெற்றி கிடைக்கும்
சூரியன் இம்மாதம் 13ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும் உண்டாகும் புதன் இம்மாதம்03ம் தேதி நான்காமிடத்திற்கு வருவது கல்வியில் மேன்மை நிலையை உண்டாக்கும் 22ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது தரகு கமிஷன் வியாபரத்தில் நல்ல லாபத்தைத் தரும். செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.
மார்ச் - மாமனுடன் சச்சரவு
சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் கஷ்டம் உண்டாகலாம் செவ்வாய் 02ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் வீடு மனை நிலம் வியாபாரம் சிறப்படையும் புதன் 11ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது தாய் மாமனுடன் சச்சரவைத் தரும் 27ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் வியாபாரம் விருத்தியாகும் குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஏப்ரல் - கவனம் தேவை
சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஏழாம் இடத்திற்கு வருகிறார் கோதுமை பொருட்கள் வியாபாரம் விருத்தியாகும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் மின்சாதனங்களைக் கையாளும்பொழுது கவனம் தேவை புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
மே - தொழில் சிறப்பு
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகத்தில் மன உளைச்சல் உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி ஒன்தாமிடத்திற்கு வருகிறார் பரம்பரையாக செய்து வரும் தொழில் சிறப்படையும் சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு சிறப்படையும். இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஜூன் - வெளிநாடு யோகம்
இந்த மாதம் சூரியன் 15ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் தாத்தா அப்பா வகையில் பரம்பரையாக செய்து வந்த தொழில் மேன்மை நிலையை அடையும் புதன் இந்த மாதம் 03ம் தேதி எட்டாம் இடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நஷ்டத்தை கொடுக்கலாம் 18ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பொன்னகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும் இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஜூலை - அரசு வேலை கிடைக்கும்
சூரியன் இந்த மாதம் 17ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் செவ்வாய் 11ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அன்னிய தேச தொழில் வர்த்தக நிலை மேன்மை நிலையை அடையும் புதன் இந்த மாதம் 03ம் தேதி பத்தாம் இடத்திற்கு வருகிறார் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வியாபாரம் விருத்தியாகும் 21ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் வியாபார லாபம் அதிகரிக்கும் சுக்கிரன் 26ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஆகஸ்ட் - யோகம் உண்டாகும்
சூரியன் 17ம் தேதி உங்கள் பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் சம்பளம் அதிகரிக்கும் செவ்வாய் 27ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தீயணைப்பு துறையில் பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் சுக்கிரன் 21ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகத்தில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும் ராகு இம்மாதம் 18ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் புதிய கிளை துவக்கும் யோகம் உண்டாகும் கேது 18ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும் இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
செப்டம்பர் - வியாபாரத்தில் முதலீடு
சூரியன் 17ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் பதவி அரசு துறை நிறுவனங்களில் முதலீடுகள் செய்வீர்கள் செவ்வாய் 13ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் மருத்துவ சிகிச்சை பெறும் நிலை உண்டாகும் புதன் 27ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும் குரு 12ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் சந்தோஷமும் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் சுக்கிரன் 15ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் மனைவி மூலம் பண வரவு அதிகரிக்கும். இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
அக்டோபர் - புத்தி தெளிவடையும்
சூரியன் 18ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் அப்பாவின் ஆலோசனை சில பிரச்சினைகள் தீர்வு கிடைக்க உதவும் செவ்வாய் 30ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் கோபம் அதிகரிக்கும் புதன் 30ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் குழப்ப நிலையில் இருந்த புத்தி தெளிவடையும் சுக்கிரன் 15ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வீட்டிற்கு ஆடம்பர பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
நவம்பர் - செல்வ சேர்க்கை
சூரியன் 17ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் சம்பள உயர்வு உண்டாகும் புதன் 02ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் 24ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் தகவல் தொடர்பு சிறப்படையும் சுக்கிரன் 03ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் முக வசீகரம் அதிகரிக்கும் 26ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
டிசம்பர் - சகோதரிகளால் நன்மை
சூரியன் 16ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் வீடு மாறும் நிலை உண்டாகும் சுக்கிரன் 20ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் சகோதரிகளால் நன்மை உண்டாகும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications