2023 புத்தாண்டு ராசி பலன்: பொன்மழை பொழியப்போகும் காலம்.. எந்த ராசிக்காரருக்கு தெரியுமா?
சென்னை: ஆங்கில புத்தாண்டு சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை தரப்போகிறது. புத்தாண்டில் ஆண்டில் நம்முடைய வாழ்க்கை பயணம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டில் எப்படி இருக்கும் என்னென்ன யோகங்கள் கிடைக்கப்போகிறது பொருளாதார நிலைமை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
பொதுவாகவே மேஷ ராசிக்காரர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக சனிபகவான் பத்தாம் வீட்டில் பயணம் செய்தார். குருவின் பயணமும், ராகு கேதுவின் பயணமும் பெரிய அளவில் எந்த நன்மைகளையும் கொடுக்கவில்லை.
இந்த ஆண்டு ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் பாடப்போகிறீர்கள். அந்த அளவிற்கு உங்களுக்கு நன்மைகள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. வேலை, கல்வி, குடும்ப வாழ்க்கை, உடல் ஆரோக்கியம், பொருளாதார நிலை எல்லாமே 2023ஆம் ஆண்டில் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே..2023ஆம் ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். வேலையில் இருப்பவர்களுக்கு அற்புதங்கள் நிகழப்போகிறது. காரணம் சனி பகவான் 10ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார்.

எதிர்பாராத வளர்ச்சி
சனி பகவான் சாதகமாக இருக்கிறார். வேலை தொழிலில் எதிர்பாராத வளர்ச்சி ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். சனிபகவானின் பார்வையும் சாதகமான இடங்களில் விழுவதால் உங்களுக்கு யோகங்கள் கிடைக்கப்போகிறது. குடும்ப விசயத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். நிரந்தரமான வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்கள் இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

உடல் ஆரோக்கியம்
இல்லத்தரசிகளுக்கு உடல்நிலை பாதிப்பு சரியாகும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைக்கு முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கர்மகாரகன் சனி கர்ம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போவது சச மகா யோகத்தை தரப்போகிறது.

குரு பகவான்
இந்த ஆண்டு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. உங்களின் தைரியம் தன்னம்பிக்கை நடைபெறும். குருவின் பயணம் முதல் 5 மாதங்களுக்கு லாப ஸ்தானத்தில் இருப்பதால் தொட்டது துலங்கும். மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். உங்களுக்கு இது விரைய ஸ்தானம் என்பதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.

திருமணம் குழந்தை பாக்கியம்
திருமண வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். காதல் கணிந்து திருமணத்தில் முடியும். குழந்தை பிறப்பதற்கான யோகம் கை கூடி வந்துள்ளது. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். புதிய விடிவு காலம் பிறக்கும். மாணவர்கள் நினைத்த கல்லூரிக்கு சென்று படிப்பீர்கள். அரசு போட்டி தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள்.

பொன்மழை பொழியும்
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். மன அழுத்தங்கள் நீங்கப்போகிறது. செல்வ செழிப்போடு வாழும் காலம் வந்து விட்டது.பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கடவுள் அருளால் புதிய கௌரவ பதவிகள் தேடி வரும். லாட்டரி சீட்டில் உங்களுக்கு ஜாக்பாட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எவ்வளவோ கஷ்டங்களை கடந்து வந்திருக்கும் ரிஷப ராசிக்காரர்களே 2023ஆம் ஆண்டு பொன்மழை பொழியப்போகிறது. நிறைய நற்பலன்களை அனுபவிக்கத் தயாராகுங்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications