புத்தாண்டு ராசி பலன் 2023: சனி, குரு செய்யப்போகும் மாற்றம்.. ஏழரை சனியில் யாருக்கு ஜாக்பாட்?
சென்னை: சனி பகவான் 2023ஆம் ஆண்டில் சிலரது ராசியில் ஏழரை சனியாக அமரப்போகிறார். 2023ஆம் ஆண்டில் நவகிரகங்களும் இடம் மாறப்போகின்றன. 2023ஆம் ஆண்டு சனி பகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவான் மீன ராசியில் சில மாதங்களும், மேஷ ராசியில் 8 மாதங்களும் பயணம் செய்வார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் மகர ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது.
அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ராகுவும் கேதுவும் சிலரது வாழ்க்கையில் திடீர் யோகத்தை கொண்டு வரும். ஏழரை சனி காலமும் சிலருக்கு ஏற்படப்போகிறது. அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமோ என்று பலரும் அச்சமடைந்து கொண்டிருக்கின்றனர்.
மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் கன்னி லக்னத்தில் 2023ஆம் புத்தாண்டு பிறக்கிறது. ஆங்கில புத்தாண்டு 12 ராசிக்காரர்களுக்கு பலவித மாற்றங்களைத் தரப்போகிறது. நவ கிரகங்களின் பயணம் சில ராசிக்காரர்களுக்கு சின்னச் சின்ன சங்கடங்களையும் தரலாம். அதை தவிர்க்க ஆலய தரிசனம் செய்வது பாதிப்புகளை குறைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே.. 2023ஆம் ஆண்டில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறப்போகிறது. இதுநாள் வரை நிறைய படிப்பினைகளை கற்றுக்கொண்டிருப்பீர்கள். ஏழரை ஆரம்பித்த நாளில் இருந்தே பிரச்சினைக்கு மேல் பிரச்சினைதான். எத்தனையோ பாடங்களை கற்றுக்கொண்ட உங்களுக்கு இந்த புத்தாண்டு நிறைய நன்மைகளைத் தரப்போகிறது. விரைய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் வருட ஆரம்பத்தில் ஜென்ம ராசிக்கு வரப்போகிறார்.
ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்கப்போகிறது. உங்கள் ராசி அதிபதி ஆட்சி பெற்று அமரப்போகிறார்.
எதையும் நிதானமாக யோசித்து செய்வது நல்லது.

சனி பகவான்
சனி பகவான் நிறைய சோதனைகள் கொடுத்தாலும் கடைசியில் நன்மைகளையே செய்வார். ராசிக்குள் நுழையும் சனிபகவான் உங்களைப் பற்றியும் உங்கள் உறவுகளைப் பற்றியும் உங்களுக்கே புரிய வைப்பார். நிறைய அனுபவங்களை கற்றுத்தருவார் சனிபகவான். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் காட்டுவது அவசியம். கண்களில் கவனம் தேவை. உறவினர்களிடம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி மாட்டிக்கொள்ளாதீர்கள்.

குரு பகவான்
குரு பகவான் தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். பண வருமானம் அற்புதமாக இருக்கக் போகிறது. மே மாதம் வரைக்கும் குரு பகவான் 2ஆம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரப்போகிறது. சந்தோஷம் அதிகரிக்கும். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நன்மையைத் தரும். பண விசயங்களில் அகலக்கால் வைக்காதீர்கள். அப்புறம் அவதிப்படுவீர்கள். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
வெளிநாடு செல்வதற்கு யோகம் வரப்போகிறது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடப்போகிறீர்கள். குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது.

மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 2023ஆம் ஆண்டு மிகவும் அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. காரணம் உங்கள் ராசிநாதன் குருபகவான் உங்கள் ராசியிலேயே இருக்கிறார். ராசிக்கு 5 ஏழு ஒன்பதாம் வீடுகளைப் பார்வையிடுகிறார். திருமணம் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நிறைய யோகங்கள் கிடைக்கப்போகிறது. நிறைய நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் நடைபெறும்.

பண வருமானம்
மே மாதத்திற்குப் பிறகு உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் குருபகவான் சென்று ராகு உடன் இணைவதால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். திடீர் ஜாக்பாட் மூலம் பண வரவு வரும். எப்போதோ கொடுத்து வைத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். சனிபகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருவதால் ஏழரை சனி ஆரம்பிக்கப்போகிறது. நிதானமும் பொறுமையும் அவசியம். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். அரசு வேலைக்காக போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு வெற்றிகள் கைகூடி வரும். ஐடி துறையில் வேலை கிடைக்கும். வெளிநாடு யோகம் கைகூடி வரப்போகிறது. மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும் ஆண்டாக 2023ஆம் ஆண்டு அமையப்போகிறது.












Click it and Unblock the Notifications