புத்தாண்டு ராசி பலன் 2023: வெளிநாடு வேலையும் புரமோசனும் யாருக்கு தேடி வரும் தெரியுமா?
சென்னை: 2022 ஆம் ஆண்டு முடிந்து 2023ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. பிறக்கப்போகும் புத்தாண்டில் யாருக்கெல்லாம் நவ கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் யாருக்கெல்லாம் வேலை கிடைக்கும் வெளிநாடு போகும் யோகம் யாருக்கு கிடைக்கும் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
2023ஆம் ஆண்டில் ஜனவரி மாதமே சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது. குரு பெயர்ச்சி மே மாதமும் ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாதமும் நிகழப்போகிறது. வழக்கம்போல சூரியன் மாதந்தோறும், புதன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களும் இடப்பெயர்ச்சி அடையும். நவ கிரகங்களும் 2023ஆம் ஆண்டில் இடப்பெயர்ச்சி அடைவதால் பெரிய அளவில் மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
2022ஆம் ஆண்டு கொரோனாவில் இருந்து தப்பித்து பெருமூச்சு விட்டாலும் பலருக்கும் சாதகமற்ற ஆண்டாகவே அமைந்து விட்டது. திடீரென வேலை பறி போய் விட்டது. பலருக்கும் வேலை நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. 2023ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்? வெளிநாட்டு பார்க்கும் வேலை நிலைக்குமா? என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. 2023ஆம் ஆண்டு அற்புதங்கள் நிகழப்போகிறது. எத்தனை சோதனைகளை சந்தித்தாலும் அதில் இருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்வோம். உங்களுக்கு 2023ஆம் ஆண்டு நிறைய அற்புதங்களை தரப்போகிறது. தன காரகன் குரு பகவான் இந்த ஆண்டு உங்களுக்கு நிறைய வருமானத்தை தரப்போகிறார். உங்களுக்கு நல்ல வேலையும் புரமோசனும் அதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். உங்களுக்கு பணம் கொழிக்கும் ஆண்டாக அமையும். முதல் 5 மாதங்கள் பண வருமானம் அற்புதமாக இருக்கும்.

சனி பகவான் தரம் சோதனை
விரைய ஸ்தானத்தில் உள்ள சனிபகவான் ஜனவரி மாதம் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ஜென்ம சனி உங்கள் ராசிக்கு வரப்போகிறார். செலவுகள் வரிசை கட்டி நிற்கும். மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கும். வேலையில் உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு கவனமாக இருப்பது நல்லது. வாழ்க்கையில் நிறைய சோதனைகள் வரும். சோதனைகளை வென்று சாதனைகளாக மாற்றும் காலம். கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

பண முதலீடுகளில் கவனம்
பிசினஸ் செய்பவர்கள் முதலீடுகளை ஒருமுறைக்கு இருமுறை கவனமாக யோசித்து செய்வது நல்லது. சிலருக்கு வெளிநாடு செல்லக்கூடிய யோகம் கை கூடி வரப்போகிறது. வெளிநாடு வேலை கிடைக்கப்போகிறது. மே மாதம் குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் உள்ள ராகு உடன் இணையப்போகிறார். புதிய முயற்சிகள் செய்யும் போது கவனமாக இருக்கவும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். கண்களில் கவனம் தேவை. சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்கிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். உங்களின் நேர்மறை சக்திகள் இந்த ஆண்டு அதிகரிக்கும். குழந்தைகள் வாழ்க்கையில் குதூகலம் உண்டாகும். சுப காரியம் நடைபெறும். முன்னேற்றகரமான ஆண்டாக அமைந்துள்ளது. தன ஸ்தானத்தில் ராகு பயணம் செய்ய மே மாதம் குரு பகவான் ராகு உடன் இணையப்போகிறார். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கக் கூடிய ஆண்டாக 2022ஆம் ஆண்டு அமைந்துள்ளது. வங்கித்துறையில் வேலை கிடைக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும்.

வேலையில் புரமோசன்
மாணவர்களுக்கு கல்வி துறையில் முன்னேற்றம் உண்டாகும். ஏழரை சனி தொடங்கப்போகிறது. உங்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் வர காத்திருக்கிறது. உங்களுக்கு வரப்போகும் பிரச்சினைகளை முன்கூட்டியே உணர்த்தும். வரப்போகும் புத்தாண்டில் எந்த பிரச்சினை வந்தாலும் எளிதில் சமாளிப்பீர்கள். ஆண்டின் இறுதியில் வெளிநாடு செல்வதற்கான யோகம் வரும். கை நிறைய சம்பளத்தில் வெளிநாடு வேலை கிடைக்கும். உங்களுக்கு புத்தாண்டில் நிறைய வருமானமும் செலவும் அதிகரிக்கும். முதுகு, கால்வலி பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. வண்டி வாகனங்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது.












Click it and Unblock the Notifications