புத்தாண்டு ராசி பலன் 2023: புது வேலை யாருக்கு கிடைக்கும்..வேலையை தக்க வைக்க இதை செய்ய மறக்காதீங்க
சென்னை: 2022 ஆம் ஆண்டு முடிந்து 2023ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. கடந்த சில ஆண்டு காலமாகவே பலருக்கும் சரியான வேலை இல்லை வேலை கிடைத்தாலும் திருப்தியில்லை. இன்றைய கால கட்டத்தில் எப்போது வேலை போகும் என்று பலரும் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். பிறக்கப்போகும் புத்தாண்டில் யாருக்கெல்லாம் நவ கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. கை நிறைய சம்பளத்தில் யாருக்கெல்லாம் வேலை கிடைக்கும் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
2023ஆம் ஆண்டில் ஜனவரி மாதமே சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது. குரு பெயர்ச்சி மே மாதமும் ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாதமும் நிகழப்போகிறது. வழக்கம்போல சூரியன் மாதந்தோறும், புதன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களும் இடப்பெயர்ச்சி அடையும். நவ கிரகங்களும் இந்த மாதம் இடப்பெயர்ச்சி அடைவதால் பெரிய அளவில் மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
2022ஆம் ஆண்டு கொரோனாவில் இருந்து தப்பித்து பெருமூச்சு விட்டாலும் பலருக்கும் சாதகமற்ற ஆண்டாகவே அமைந்து விட்டது. திடீரென வேலை பறி போய் விட்டது. பலருக்கும் வேலை நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்த ஆண்டு நமக்கு நல்ல வேலை கிடைக்குமா? பார்க்கும் வேலை நிலைக்குமா? என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

துலாம்
அர்த்தாஷ்டம சனியால் அதிகம் கஷ்டப்பட்டிருப்பீர்கள். நல்ல வாய்ப்புகள் கையில் வந்து தட்டிப்போயிருக்கும். சனி பகவான் 5ஆம் வீட்டிற்கு செல்வதால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. அரசு போட்டி தேர்வுகளை எழுதியிருப்பவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். வாய்ப்புகளை நழுவ விட்டவர்கள் இனி உங்களுக்கு வரப்போகும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். எத்தனையோ சிரமங்களை கடந்து வந்திருப்பீர்கள் உங்களுக்கு இனி விடிவு காலம் வரப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட சிரமங்கள் நீங்கப்போகிறது. குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு நேர் எதிரே ஏழாவது வீட்டில் அமர்ந்து பார்க்கப்போகிறார். குரு பலனால் உங்களுக்கு இந்த ஆண்டு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சிக்கல்கள் நீங்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
சனிக்கிழமைகளில் சனி ஹோரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும். வியாழக்கிழமை குரு காயத்ரி மந்திரம் சொல்லி வணங்க நல்ல வேலை கிடைக்கும்.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு சனிபகவான் மூன்றாம் வீட்டில் இருந்து நான்காம் வீட்டிற்கு பயணம் செய்யப்போகிறார். அர்த்தாஷ்டம சனி என்றாலும் ஆட்சி பெற்று அமரப்போகும் சனிபகவான் சச மகா யோகத்தை தரப்போகிறார். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் அமர்ந்தாலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு அற்புதமான கால கட்டம். வேலையில் புரமோசன் கிடைக்கும். குருபகவானின் பார்வையும் மே மாதம் வரைக்கும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வேலைக்கும் முயற்சி செய்யலாம். வேலையில் இருந்த அழுத்தங்கள் நீங்கும். உயரதிகாரிக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே 2023ஆம் ஆண்டினை உற்சாகமாக கடந்து விடுவீர்கள். செவ்வாய்கிழமை முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு கடந்த ஏழரை ஆண்டு காலமாக கஷ்டங்களை கொடுத்து வந்த சனி பகவான் உங்களை விட்டு விலகப்போகிறார். உங்களை மனதாலும் உடலாலும் நிறைய வாட்டி வதைத்து விட்டார். உங்களை விட்டு விலகும் சனி பகவான் நன்மைகளை கொடுத்து விட்டு செல்வார் என்பதால் கவலை வேண்டாம். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் பட்ட அவமானங்கள் நீங்கப்போகிறது. வேலையை இழந்தவர்கள் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்திருப்பீர்கள் இனி நீங்கதான் ராஜா. குரு பகவானின் பார்வையும் உங்களை தேடி வரப்போகிறது. கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். மனதாலும் உடலாலும் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களின் பணி சூழல் அற்புதமானதாக மாறப்போகிறது. அரசு வேலைக்கு தேர்வு எழுதியவர்களுக்கு அற்புத செய்திகள் தேடி வரும். குரு பகவானை வியாழக்கிழமைகளில் குரு ஓரையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே.. 2023ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு சனிபகவான் செல்லப்போகிறார். ஜென்ம சனியால் எத்தனையோ சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு பாத சனி பலவித நன்மைகளைத் தரப்போகிறது. போகிற போக்கில் சனி பகவான் பண வரவுக்கு ஏற்ற நல்ல வேலையை தரப்போகிறார். தொழில் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தை பார்வையிடுவதால் கூட்டுத்தொழில் சிறப்படையும். இருக்கிற வேலையை சிறப்புடன் செய்யப்பாருங்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்வதற்கு இது ஏற்ற காலமல்ல. 2023ஆம் ஆண்டு போராட்டங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தாலும் அலுவலகத்தில் வரும் சிக்கல்களை எளிதாக சமாளிப்பீர்கள். தினசரியும் சூரிய பகவானை வணங்க அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம்.












Click it and Unblock the Notifications