Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு ராசி பலன் 2023: யாருக்கு காதல் மலரும்?..90 கிட்ஸ் கழுத்தில் கல்யாண மாலை ஏறுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல் என்ற வார்த்தையே பலரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த காதல் உருவாகவும் கால நேரம் வரவேண்டும் எல்லோருக்கும் எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் காதல் வந்து விடாது. காதல் கிரகங்களான சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை பார்வை, சஞ்சரிக்கும் இடத்தைப் பொறுத்து சிலருக்கு மனதில் மன்மதன் அம்பு பாயும். காதல் வந்து விட்டாலே பலரும் காற்றில் மிதக்க ஆரம்பித்து விடுவார்கள். 2022ஆம் ஆண்டு வரை 90 கிட்ஸ் பலரும் சிங்கிள் ஸ்டேட்டஸ் வைத்திருக்கின்றனர். மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம்,சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிகளில் எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு 2023ஆம் ஆண்டு காதல் மலரும் கல்யாண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கப்போகிறார்கள். திருமணம் முடிந்தவர்களுக்கு காதல் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

நவகிரகங்களில் சில கிரகங்கள் கல்யாண யோகத்தை தரக்கூடியது. சில கிரகங்கள் புத்திர பாக்கியத்தை தரும். குடும்ப வாழ்க்கையில் மன நிம்மதி இருந்தாலே போதும் அனைத்து மகிழ்ச்சியும் தானாக தேடி வரும். எத்தனையோ பெண் பார்த்தும் வரன் அமையாத 90 கிட்ஸ் இந்த ஆண்டாவது நமக்கு கல்யாணம் கைகூடி வருமா என்று காத்திருக்கின்றனர்.

2023ஆம் புத்தாண்டு அசுவினி நட்சத்திரம் மேஷ ராசியில் கன்னி லக்னத்தில் பிறக்கிறது.
நமக்கெல்லாம் காதல் என்ற வசந்தம் வீசுமா என்று ஏங்கித் தவிக்கும் ராசிக்காரர்கள் பலர் இருக்கின்றனர். 2023ஆம் ஆண்டில் யாருக்கெல்லாம் காதல் மலரும்?யாருடைய காதல் திருமணத்தில் முடியும்? யாருடைய குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் மேஷ ராசிக்காரர்களே..இந்த ஆண்டு உங்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. காதல் கிரகம் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டில் பயணம் செய்யும் போது ஆண்டு பிறக்கிறது. உங்கள் ராசியில் தான் புத்தாண்டு பிறக்கிறது. கல்யாண யோகம் கைகூடி வரப்போகிறது. காரணம் குருவின் பயணமும் பார்வையும் சாதகமாக உள்ளது. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களின் வாழ்க்கை துணை இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்போகிறீர்கள். காதல் வாழ்க்கை கல்யாணத்தில் முடியப்போகிறது உற்சாகமாக இந்த புத்தாண்டினை கொண்டாடுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே.. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் வலிமையாக பயணம் செய்யும் போது புத்தாண்டு பிறக்கிறது. காதலுக்கும் காதலிப்பவர்களுக்கும் ஏற்ற புத்தாண்டாக அமைந்துள்ளது. உங்கள் வாழ்க்கை துணையுடனான உற்சாகம் அதிகரிக்கும். அன்பும் நெருக்கமும் கூடும். தாம்பத்ய வாழ்க்கையில் நெருக்கம் அதிகரிக்கும் பரிசுகளை பரிமாறிக்கொள்வீர்கள். திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கப்போகும் அற்புதமான ஆண்டாக 2023ஆம் ஆண்டு அமைந்துள்ளது.

மிதுனம்

மிதுனம்


புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு மாயாஜாலங்களை நிகழ்த்தப்போகிறது. காரணம் கஷ்டப்படுத்திய சனி பகவான் இனி பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். பிரிந்தவர்கள் ஒன்றாக இணையும் காலம் கைகூடி வரப்போகிறது. குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை கைகூடி வரப்போகிறது. காதல் இனிக்கப்போகிறது. மனமும் உற்சாகமடையும். உறவும் நட்பும் பலமடையும்.

கடகம்

கடகம்

சந்திரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு சின்னச் சின்ன அற்புதங்களைத் தரப்போகிறது. உங்கள் வாழ்க்கையில் முக்கியமான நபரை சந்திக்கப்போகிறீர்கள். உண்மையான அன்பினை உணர்வீர்கள். காதலிப்பவர்களுக்கு ஏற்ற காலம். தம்பதியர் இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். காதல் பறவைகள் இந்த ஆண்டு கல்யாண உறவில் கை கோர்க்கலாம். சுக்கிரபகவானை வணங்க ஊடல் முடிந்து கூடல் அதிகரிக்கும்.

 சிம்மம்

சிம்மம்

சூரிய பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே..இந்த ஆண்டு உங்களின் பொருளாதார வரவு அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். காரணம் குருவின் பொன்னான பார்வை உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு கிடைக்கப்போகிறது. சுக்கிரனின் பயணமும் உங்களுக்கு சாதகமாக இருக்கப்போகிறது. உங்கள் பார்வை உங்கள் ராசியின் மீது விழும்போது காதல் உங்கள் மனதில் ஊற்றெடுக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணையோடு கல்யாண வாழ்க்கையில் அடிஎடுத்து வைக்கப்போகிறீர்கள். உற்சாகமாக இந்த ஆண்டில் பயணம் செய்ய தயாராகுங்கள்.

 கன்னி

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு குருவின் பார்வை கிடைப்பதால் குரு பலனுடன் பெண்களுக்கு மனம் போல மாங்கல்யம் கைகூடி வரப்போகிறது. பண நெருக்கடியால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரப்போகிறீர்கள். மன குழப்பங்கள் நீங்கும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகள் முடிவுக்கு வரப்போகிறது. நீண்ட நாட்களாக வரன் பார்த்து தேடி சிரமப்பட்ட உங்களுக்கு இந்த ஆண்டு துவக்கத்திலேயே திருமணம் செய்ய நல்ல வரன் கிடைக்கப்போகிறது. காதல் மண வாழ்க்கை அற்புதமாக அமையப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+