2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்: தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் தரமான சம்பவம்
சென்னை: 2024ஆம் ஆண்டு இன்னும் சில வாரங்களில் பிறக்கப்போகிறது. நல்ல வேலைக்காக எத்தனையோ பேர் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டிலாவது நமக்கு திருமணம் நடைபெறுமா என்பது பல இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பிறக்கப்போகும் 2024ஆம் ஆண்டு புத்தாண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களை தரப்போகிறது என்று பார்க்கலாம்.
தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு பிறக்கப்போகும் 2024ஆம் ஆண்டு அற்புதமான மாற்றங்களைத் தரப்போகிறது. காரணம் சனி பகவான் ஏழரை சனியாக இருந்து உங்களை முற்றிலுமாக விடுவித்து விட்டார். முயற்சி ஸ்தானமான 3வது வீட்டில் சனிபகவான் ஆண்டு முழுவதும் பயணம் செய்யப்போகிறார். வேலைக்காக நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

முடிவுக்கு வந்த ஏழரை சனி: கடந்த ஏழரை ஆண்டு காலம் கஷ்டத்தை கொடுத்து வந்த சனி பகவான் இனிமேல் உங்களுடைய வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களைத் தரப்போகிறார். தைரிய ஸ்தான குரு பகவான் குடும்பத்தில் தைரியத்தையும் வெற்றிகளையும் தரப்போகிறது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் பார்வை கிடைப்பதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் பல மடங்காக உயரப்போகிறது.
குரு பெயர்ச்சி: மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி ஆனாலும் குரு பகவானின் பார்வை உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீடு, 10ஆம் வீடு 12ஆம் வீடுகளின் மீது விழுவதால் நல்ல பண வருமானம் வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணமான தம்பதியினர் இடையே நெருக்கம் கூடும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். வாழ்க்கையில் கடந்த காலங்களில் சோதனைகளை சந்தித்தவர்களுக்கு சாதனை புரியும் ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது.
வேலை தொழில் வியாபாரம்: குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தின் மீது விழுவதால் நல்ல வேலை கிடைக்கும். தொழில் வியாபாரம் விருத்தி அமையும். வெளிநாட்டில் கல்வி, வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். ஏழரை சனி காலத்தில் தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு இனி நிம்மதியான தூக்கம் வரும். மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சோதனைகள் முடியப்போகிறது. இழந்த பணத்தை திரும்ப பெறப்போகிறீர்கள்.
பண விசயத்தில் கவனம்: உங்களுக்கு இருந்த கெட்ட பெயர்கள் நீங்கப்போகிறது. அரசு போட்டி தேர்வு எழுதியவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். வெற்றிகள் தேடி வரப்போகும் ஆண்டாக அமைந்துள்ளது. வீண் விரைய செலவுகள் அதிகரிக்கும். பண விசயத்தில் ஏமாற வாய்ப்பு உள்ளது. யாரை நம்பியும் ஜாமின் கையெழுத்து போட்டு பணத்தை கடனாக வாங்கித்தர வேண்டாம். பண விசயத்தில் அதிக கவனம் தேவைப்படும்.
ராகு கேது: ராகு 4ஆம் வீட்டிலும் கேது பத்தாம் வீட்டிலும் பயணம் செய்வதால் சொத்து சேர்க்கை ஏற்படும். சுகமும் சந்தோஷம் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.10ஆம் வீட்டில் கேது பயணம் செய்வதால் வேலை செய்யும் இடத்தில் அதிக கவனம் தேவைப்படும். ஆன்மீக பயணங்கள் புனித யாத்திரைகள் செல்ல முயற்சி செய்யலாம். பழைய கடன்கள் அடைபடும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வர பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications