2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்: ராஜாதி ராஜயோகம்.. 2 ராசிக்காரர்கள் வீட்டில் மகிழ்ச்சி நிறையும்
சென்னை: 2023ஆம் ஆண்டு முடியப்போகிறது. 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டில் கிரகங்களில் பெயர்ச்சியை பார்த்தால் சனி பெயர்ச்சி கிடையாது ராகு கேது பெயர்ச்சி கிடையாது. குரு பெயர்ச்சி ஏப்ரல் மாத இறுதியில் நிகழ்ப்போகிறது. குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு, சனி, ராகு கேதுவின் பயணம் பார்வைகளை பொருத்து மேஷம், ரிஷப ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய ராஜயோகம் கிடைக்கப்போகிறது. சனி லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். முதல் நான்கு மாதங்கள் ஜென்ம ராசியில் குரு பயணம் செய்கிறார். 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு சென்று அமரப்போகிறார். ராகு 12ஆம் வீட்டிலும் கேது 6ஆம் வீட்டிலும் 2024ஆம் ஆண்டு முழுவதும் பயணம் செய்கின்றனர்.

பண வருமானம்: உங்களின் பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். 2023ஆம் ஆண்டில் ஜென்ம ராகு, ஜென்ம குருவினால் ஒருவித மன குழப்பத்தில் இருந்தீர்கள். வேலை செய்யும் இடத்தில் ஒருவித ஊசலாட்டத்திலேயே இருந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு தேடி வரப்போகிறது.
நிரந்தரமான வேலை: நிலையான நிரந்தரமான வேலை கிடைக்கும். தசாபுத்தி நன்றாக இருக்கும் பட்சத்தில் உங்களின் பொருளாதார நிலைமை, பண வருமானம் நன்றாக இருக்கும். திருமணம் சுபகாரியம் நடைபெறும். திருமணம் முடிந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கைகூடி வரும். எதிர்ப்புகள் விலகி ஓடும். புகழும் செல்வமும் செல்வாக்கும் கூடி வரப்போகிறது. குடும்ப ஸ்தானம் குதூகலம் அடையும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டில், சுப செலவுகள் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் ராகு நிறைய பண வருமானத்தை தரப்போகிறார். விரைய குரு ஜென்ம ராசிக்கு வரப்போகிறார். எது வந்தாலும் எதையும் தைரியமாக சமாளிப்பீர்கள்.
லாபம் தரும் ராகு: உங்களின் அந்தஸ்து உயரும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனிபகவான் நல்ல வேலையை தரப்போகிறார். லாப ஸ்தான ராகு நினைத்த காரியத்தை நிறைவேற்றுவார். லாப ராகு கொட்டி கொடுக்கப்போகிறார். எதையும் எதிர்கொள்வீர்கள். எதிரிகள் தொல்லை ஒழியும்.
விரைய செலவுகள்: பண வருமானம் வந்தாலும் வீண் விரைய செலவுகள் அதிகரிக்கும். பூர்வ புண்ணிய கேது உங்களுக்கு பிள்ளைகளால் நன்மைகள் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. யாரை நம்பியும் பணத்தை கடனாக கொடுக்காதீர்கள். ஜாமின் கையெழுத்து போட்டு பணத்தை கடனாக வாங்கிக் கொடுக்காதீர்கள். பணம் திரும்ப வராது நீங்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும். 2024ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் மன நிம்மதியும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.












Click it and Unblock the Notifications