2024 புத்தாண்டு ராசி பலன் மேஷம்: பொக்கிஷத்தை வீடு தேடி வந்து தரும் பொற்காலம்.. என்ஜாய்
சென்னை: 2023ஆம் ஆண்டு பலரது வேலை பறிபோனது. நிறைய பேருக்கு சம்பள உயர்வு,பதவி உயர்வு கிடைக்கவில்லை. விரக்தியோடு வேலையை செய்து வருகின்றனர். பிறக்கப்போகும் 2024ஆம் ஆண்டில் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு வேலை, தொழில் வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம் கிரக நிலை: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டில் கிரக நிலைகளை பார்த்தால் ஆண்டு கோள்கள் எல்லாமே சாதகமாக உள்ளது. லாப சனி, ஜென்ம குரு, விரைய ராகு, ருண ரோக சத்ரு ஸ்தான கேது என கிரகங்கள் பயணம் உள்ளது. சூரியனின் பயணம் சாதகமான நிலையில் இருந்துதான் தொடங்குகிறது. பதவி யோகத்தை தரக்கூடிய ஆண்டாக வருமானத்தை அள்ளித்தரக்கூடிய ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமைந்துள்ளது.

வேலை வாய்ப்பு: 2024 கூட்டுத்தொகை 8. சனியின் ஆதிக்கம் நிறைந்த ஆண்டு. மேஷ ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு வேலை எப்படி இருக்கும் என்று பார்த்தால் சனி பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வார். ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்களுக்கு நன்மை செய்வார். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். குரு பகவான் ஜென்ம ராசியில் பயணம் செய்கிறார். ஏப்ரல் மாதம் வரை மேஷ ராசியில் உள்ள குருவை சனி பார்வையிடுகிறார்.
குரு பலன்: 2024 ஆம் ஆண்டு ஜென்ம ராசியில் இருந்து குரு பகவான் மே மாதம் இரண்டாம் வீடான ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவது சிறப்பு.
குரு பலன் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமணம் சுப காரியம் நடைபெறும். புத்திர பாக்கியம் கிடைக்கும். மழலை செல்வம் மடியில் தவழும். குடும்பத்தில் இருந்த தேவையில்லாத சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரப்போகிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
நிறைய பண வருமானம், தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
வெற்றிகள் தேடி வரும்: ராகு 12ஆம் வீட்டிலும் கேது 6ஆம் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும். உங்களின் தேவை நிறைவேறும். சொத்து சேர்க்கை ஏற்படும். மாணவர்களுக்கு இந்த ஆண்டு எல்லாமே சாதகமாக உள்ளது. 2024ஆம் ஆண்டு கல்வியில் வெற்றி கிடைக்கும். படித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். குரு பெயர்ச்சிக்குப் பிறகு தொட்டது துலங்கும். பொற்காலம் வீடு தேடி வரும்.
பொற்காலம்: உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நோய்கள் நீங்கும். உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். பெண்களுக்கு சமூகத்திலும் வீட்டிலும் மதிப்பு மரியாதை கூடும். 2024ஆம் ஆண்டு அற்புதமான யோகத்தையும் மிகப்பெரிய மாற்றத்தையும், அதிகார பதவியையும் தேடி தரப்போகிறது. மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு பொற்கால ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது. மகிழ்ச்சியுடன் அனுபவிக்கத் தயாராகுங்கள்.












Click it and Unblock the Notifications