2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்: அதிரடி சரவெடி.. 2024ல் தொட்டதெல்லாம் பொன்னாகும் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023ஆம் ஆண்டு முடியப்போகிறது. 2024 புத்தாண்டு இன்னும் சில வாரங்களில் பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டில் நல்ல வேலை கிடைக்குமா? திருமணம் நடைபெறுமா? என்று மேஷ ராசியில் பிறந்தவர்கள் யோசிக்கத் தொடங்கியிருக்கின்றனர். 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரைக்கும் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். இது பொதுவான பலன்கள்தான். தசாபுத்தியின் அடிப்படையில் நன்மை, தீமைகள் கலந்து நடைபெறும்.

மேஷம்: 2024 புத்தாண்டு உங்களுக்கு ராஜயோகத்தை அள்ளித்தரப்போகிறது. ஆண்டின் முற்பகுதியில் குரு சஞ்சாரம் சாதகமாக இல்லை என்றாலும் குரு பார்வையினால் கடன் பிரச்சினைகள் தீரும். இந்த ஆண்டு சனியின் சஞ்சாரம், ராகு கேது பெயர்ச்சி சாதகமாகவே உள்ளது. 2024 மே மாதத்தில் நிகழப்போகும் குருப்பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த புத்தாண்டின் தொடக்கத்திலிருந்தே தொழில் உத்தியோகம் சிறப்படையும் இது வரை தடைபட்டிருந்த தொழில் கொஞ்சம் கொஞ்சமாக விறுவிறுப்படையும். பரம்பரை தொழில் நல்லபடியாக செழித்து வளரும். விரைய ராகுவினால் தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். லாப சனியால் தொழிலில் லாபம் அதிகரிக்கும் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஜென்ம குரு குடும்ப ஸ்தானத்திற்கு மாறப்போவதால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

New year rasi palan 2024 - Mesham Rasi 2024 New year Rasi Palan

ஜனவரி: செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே. பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்கவும். யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். சிக்கனமாக செலவு செய்தால் பணத்தை சேமிக்கலாம். மாணவர்கள் நன்றாக படித்து தேர்வு எழுதலாம். தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தை அக்கறை காட்டினால் மட்டுமே மருத்துவ செலவுகளை தவிர்க்க முடியும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். குரு பலன் காரணமாக திருமணம் கைகூடி வரும்.

பிப்ரவரி: சூரியன் மகரம், கும்பம் ராசிகளில் சஞ்சரிக்கும் காலகட்டமாகும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். தொழிலில் ஏற்படும் போட்டிகளை சமாளிப்பீர்கள். மேலதிகாரிகளோடு அனுசரித்து செல்ல வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் வராமல் தவிர்க்க முடியும். பணவரவுகளில் இருந்த தடைகள் சற்று விலகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் பணிகள் சிறப்படையும்.மாணவர்கள் நன்றாக படித்தால் மட்டுமே தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற முடியும். பெண்களின் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மார்ச்: சூரியன் இம்மாதம் லாப ஸ்தானத்திலும் விரைய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். எனவே பணவிரையம் எற்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். கூடவே சுப விரைய செலவுகளை ஏற்படுத்தும். அலுவலகத்தில் உடன் பணி செய்பவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். குரு பகவானின் பார்வையாலும் ராகு கேதுவின் பயணத்தாலும் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரலாம். உல்லாச பயணங்கள் சென்று வரலாம்.

ஏப்ரல்: ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள குருபகவான் மெதுவாக இரண்டாம் இடத்திற்கு நகரப்போகிறார். குருவும் சூரியனும் இணைந்து பயணம் செய்யும் காலத்தில் தனவரவுகளும் நன்றாக இருக்கும். குருபகவான் சுபக்கிரகம் என்பதால் வருமானத்தை கொடுத்து சுப விரையங்களை தருவார். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். சொந்த வீடு அமைந்து விடும். வீட்டிற்கு உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். முடிந்தவரை பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மே: உங்கள் ராசியில் சூரியன் உச்சம் பெற்று பயணம் செய்வார். உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம். மாத பிற்பகுதியில் இடப்பெயர்ச்சியாகும் சூரியன் குரு உடன் இணைந்து குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்வது கூடுதல் சிறப்பு. குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். 12ஆம் இடத்தில் உள்ள ராகு, ஆறாம் இடத்தில் உள்ள கேதுவால் நன்மைகள் நடைபெறும். ராகு அந்நிய கிரகம் என்பதால் அந்நியர்களால் நன்மைகள், குறிப்பாக வேற்று மதம் வேற்று இனத்தவர்களால் நன்மைகள் நிச்சயமாக இருக்கும். கேது புதன் வீட்டில் இருப்பது பல வெற்றிகளை தரும் எடுத்த காரியங்களை ஈசியாக முடிப்பீர்கள். குருவின் வீட்டில் ராகு பயணம் செய்வது விபரீத ராஜயோகத்தை கொடுக்கும்.

ஜூன்: சூரியன் சஞ்சாரம் ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் வீட்டில் அமைந்துள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நன்மைகள் நடைபெறும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்படையும். வேலையில் வரப்போகும் புதிய வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். ராகுவாலும்,குருவாலும் வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். விமானத்தில் பறக்கப்போகும் யோகம் கைகூடி வந்துள்ளது.

ஜூலை: வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம்.திரைகடல் ஓடியும் திரவியங்கள் தேடி நிறைய சம்பாதித்து ,பேரும் புகழும் கிடைக்கப்பெற்று உங்கள் சமுதாய அந்தஸ்தும் ,மதிப்பும் மரியாதையும், உங்கள் பொருளாதாரமும் முன்னேற்றமடையும். கடன்கள் குறையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். லாப சனியும் தன ஸ்தான குரு பகவானும் உங்களுடைய வாழ்க்கையில் திடீர் திருப்புமுனைகளையும் அற்புதமான மாற்றங்களையும் ஏற்படுத்துவார்கள்.

ஆகஸ்ட்: சூரியன் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்யும் மாதமாகும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் திறமையாக வேலை செய்வீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

New year rasi palan 2024 - Mesham Rasi 2024 New year Rasi Palan

செப்டம்பர்: கிரங்கள் ஆறாம் இடத்திற்கு நகர்கின்றன. சூரியனுடன் ஆறாம் வீட்டில் இணையப்போகும் கிரகங்களின் கூட்டணியால் சின்னச் சின்ன பயணங்கள் ஏற்படும். ஆறாம் வீட்டில் பயணம் செய்யும் ராகு உடன் சூரியன் இணைந்து பயணம் செய்யப்போவதால் கடன் தொல்லைகள் நீங்கும். மாணவர்கள் தங்களின் கல்வியில் கவனம் செலுத்துவ நல்லது.

அக்டோபர்: சூரியன் மாதத்தின் பிற்பகுதி வரை ஆறாம் இடத்தில் ராகு உடன் அமர்ந்திருந்தாலும் பின்னர் ஏழாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவார். திடீர் செலவுகள் வந்து செல்லும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் கைகூடி வரும். அலுவலகத்தில் உயர்பதவிகள் தேடி வரும். அற்புதமான வாய்ப்புகளை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

நவம்பர்: ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனி, குரு, ராகு கேதுவின் பயணம் சாதகமாக இருப்பதால் உங்களுக்கு பொன், பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும். 6ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேதுவினால் கடன்கள் நிவர்த்தியாகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். 12ஆம் வீட்டில் ராகு பயணம் செய்வதால் வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்பும் அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

டிசம்பர்: ராசிக்கு எட்டு மற்றும் ஒன்பதாம் வீட்டில் சூரியன் பயணம் செய்யும் மாதம். சூரியனுக்கு குரு பகவானின் பார்வை கிடைக்கிறது. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வேலை வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ஆண்டின் இறுதியில் காதல் உணர்வுகள் அதிகரிக்கும். மொத்தத்தில் 2024ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் பொருளாதார வளமும் நிறைந்த லாபகரமான ஆண்டாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+