2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்: பணம் பல வழிகளில் வரும்.. கவனமாக இருக்க வேண்டிய 2 ராசிக்காரர்கள்
சென்னை: 2023ஆம் ஆண்டு முடிந்து 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. நல்ல வேலை கிடைக்குமா? திருமணம் நடைபெறுமா? சொந்த வீடு வாங்கலாமா என்று பலரும் யோசிப்பார்கள். பிறக்கப்போகும் புத்தாண்டில் மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மிதுனம்: கஷ்டங்கள் நீங்கி கவலைகள் முடிவுக்கு வரப்போகிறது. 2019 ஆண்டு முதல் கண்டச்சனி, அஷ்டமத்து சனி என அல்லல் பட்ட உங்களுக்கு 2024ஆம் ஆண்டு சந்தோஷங்களைத் தரப்போகிறது. காரணம் பாக்ய ஸ்தான சனி, தொழில் ஸ்தான ராகு, 4ஆம் வீட்டு கேது என கிரகங்களின் பயணம் உள்ளது. முதல் 4 மாதங்களுக்கு குரு பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கு வருகிறார்.

பதவி யோகம்: 10ல் ராகு பதவி யோகத்தை தரப்போகிறார். குருவின் வீட்டில் பயணம் செய்யும் ராகு அள்ளித்தரப்போகிறார். மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போகிறது. வீடு மாறும் யோகம் உள்ளது. சொந்த வீடு கட்டும் யோகம் கைகூடி வந்துள்ளது. வசதியான வீட்டிற்கு இடம் மாறப்போகிறீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது.
நல்ல செய்தி தேடி வரும்: வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வந்துள்ளது. வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் சுப காரியம் நடைபெறப்போகிறது. பிள்ளைகளுக்கு நல்ல காரியங்கள் நடைபெறப்போகிறது. குழந்தைகளால் நல்ல செய்தி தேடி வரப்போகிறது. சாதனைகள் நிறைந்த ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது.
கடகம்: 2024ஆம் ஆண்டில் கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி தொடர்கிறது. ராகு பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்ய கேது மூன்றாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இந்த ஆண்டு குரு பகவானின் பயணம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. குரு பகவான் முதல் 4 மாதங்களுக்கு தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டில் பயணம் செய்கிறார். அடுத்த 8 மாதங்கள் குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு வருகிறார்.
பண வருமானம்: பல வழிகளிலும் உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். காரணம் 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து நிறைய லாபங்களை அள்ளித்தரப்போகிறார். வருடம் முழுக்க அஷ்டம ஸ்தானத்தில் சனி பயணம் செய்தாலும் லாப குரு அதை சமாளிக்கும் சக்தியை தரப்போகிறார்.
குரு பார்வை சாதகம்: குரு பகவானின் பார்வையும் சாதகமாக இருப்பதால் உங்களுக்கு திருமணம் சுபகாரியம் நடைபெறும். உங்களுடைய வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது.பண விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பொறுமையும் நிதானமும் தேவை. யாரை நம்பியும் பணம் கடனாக தராதீர்கள்.
ஆரோக்கியத்தில் அக்கறை: உங்கள் குடும்பத்தை மட்டும் பாருங்கள். ஜாமின் கையெழுத்து போட்டு பணத்தை தராதீர்கள். சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகும் நபர்களிடம் கவனமாக பேசுங்கள். 2024ஆம் ஆண்டில் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறையும் கவனமும் தேவைப்படும்.












Click it and Unblock the Notifications