2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்: அதிரடி சரவெடி.. 2024ல் தொட்டதெல்லாம் பொன்னாகும் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 புத்தாண்டு இன்னும் சில வாரங்களில் பிறக்கப்போகிறது. கடந்த ஆண்டு பலருக்கும் வேலை போனது. கொத்து கொத்தாக வேலையை பறிகொடுத்தனர். இந்த புத்தாண்டில் நல்ல வேலை கிடைக்குமா? வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் வருமா என்று ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் யோசிக்கத் தொடங்கியிருக்கின்றனர். 2024ஆம் ஜனவரி முதல் டிசம்பர் வரைக்கும் ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

ரிஷபம்: சுக்கிரன் என்றாலே ஆடம்பரம். சுகம், சந்தோஷம். உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் உங்களுக்கு சாதகமான நிலையில் பயணம் செய்யும் போது புத்தாண்டு பிறக்கிறது. உங்கள் ராசியாதிபதியான சுக்கிரனுக்கு நட்பு கிரகமும் தர்மகர்மாதிபதியான சனி பகவான் 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். பொருளாதார ரீதியாக மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் உள்ளவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த உயர்வுகளை பெற முடியும்.

New year rasi palan 2024 - Rishabam Rasi 2024 New year Rasi Palan

குரு பகவான்: உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திலும் ஜென்ம ராசியிலும் குரு பகவான் 2024ஆம் ஆண்டில் பயணம் செய்வதால் பண விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

ராகு கேது: லாப ஸ்தானத்தில் ராகுவும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் உங்களுக்கு இந்த ஆண்டு பண வரவு அதிகமாகவே இருக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து வருமானம் வந்து கொண்டே இருக்கும். கேது ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதால்
உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டிய காலமாகும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. சிலருக்கு வயிறு பாதிப்புகள், ஆலர்ஜி பிரச்சினையால் வீண் மருத்துவ செலவுகள் உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகளால் மன சஞ்சலங்கள் ஏற்படும். பேச்சைக் குறைப்பது நல்லது.

வேலையில் நிம்மதி: பத்தாம் வீட்டில் பயணம் செய்யும் சனியால் வேலை செய்யும் இடத்தில் நிம்மதியும் எதிர்பாராத பதவி உயர்வுகளையும் இடமாற்றங்களையும் பெற முடியும். வேலைபளு அதிகமாக இருக்கும் என்பதால் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது பொறுப்புகளை முடிந்த வரை குறைத்து கொள்வது நல்லது. உயரதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் இந்த ஆண்டில் பெரிய அளவில் பண முதலீடு செய்து அகலக்கால் வைக்க வேண்டாம் ஆபத்தாகி விடும்.

ஜனவரி, பிப்ரவரி: மாத கிரகங்களின் பயணங்களாலும் கூட்டணியாலும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் இதனால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிக்கல்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியை பெற முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சிவ வழிபாடு விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது. கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிப்பதால் உடல் நிலை சற்று சோர்வடையும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

மார்ச், ஏப்ரல்: சூரியனின் பயணம் சாதகமாக உள்ளது. தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள் முன்னேற்றங்கள் உண்டாகும் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். இந்த மாதங்களில் நினைத்தது நிறைவேறும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

மே, ஜூன்: வேலை செய்யும் இடத்தில் அலைச்சல் உண்டாகும். டென்சன் அதிகரிக்கும் பணியில் நெருக்கடிகள் வந்தாலும் எளிதில் சமாளிப்பீர்கள்.
அலுவலகத்தில் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் வீண் பிரச்சினைகள் குறையும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. இந்த மாதம் சூரியன் ஜென்ம ராசியில் பயணம் செய்வார். முன்கோபத்தை குறைப்பது நல்லது. கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

ஜூலை, ஆகஸ்ட்: ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் மனசு என்று சொல்வார்கள். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் வந்தாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். காரிய வெற்றிகள் உண்டாகும் மாதம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலை செய்யுமிடத்தில் எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பொருளாதார நிலை உயர்வடையும்.

New year rasi palan 2024 - Rishabam Rasi 2024 New year Rasi Palan

செப்டம்பர், அக்டோபர்: பண வருமானம் எந்த அளவிற்கு வருகிறதோ அந்த அளவிற்கு வீண் விரைய செலவுகளும் வரும். இந்த ஆண்டு முழுவதுமே நீங்கள் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. செலவை குறைத்து பணத்தை சேமித்தால் மட்டுமே கடன் வாங்காமல் தப்பிக்க முடியும். மருத்துவ செலவுகளும் வந்து மனதை வாட்டி எடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பணி அழுத்தம் காரணமாக மன அழுத்தமும் தேவையற்ற டென்சன்வரும்.
அக்டோபர் மாதத்தில் திடீர் பண வருமானம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் வரும். திருமண சுப காரியங்கள் ஏற்படும். பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் ஏற்படும்.

நவம்பர், டிசம்பர்: ஆண்டின் இறுதியில் உங்களுக்கு அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. உடல் சுறுசுறுப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் பண வருமானம் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் தேவை. வேலை செய்யும் இடத்தில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். தொழில் வியாபார ரீதியாக லாபம் கிடைத்தாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவைப்படும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. கணவன் மனைவி இடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+