Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சி : கண்டா வரச்சொல்லுங்க.. 2024ல் கடக ராசிக்காரர்கள் பதுங்கி பாயலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. கடக ராசிக்காரர்களுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருக்கும். அஷ்டமத்து சனி, லாப குரு, பாக்ய ராகு, மூன்றாமிட கேது என கிரகங்களின் சஞ்சாரம் நன்மையும் தீமையும் சரி சமமாக கலந்ததாகவே இருக்கப்போகிறது. ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினால் தலையில் தட்டி வைக்க அஷ்டமத்து சனி இருக்கிறார் என்று சொல்லாமல் சொல்கிறது ஜோதிடர் பதிவிட்டுள்ள இந்த மீம்ஸ் .

New Year Rasi Palan 2024: Sani, Rahu ketu,Guru Peyarchi palan Kadagam Rasi prideiction

அஷ்டமத்து சனி: ஏழரை சனியை கூட கொஞ்சம் சமாளித்து விடலாம் ஆனால் அஷ்டம சனி பலவிதமான கஷ்டங்களை காட்டி விட்டுதான் போகும். வாழ்க்கை என்றால் என்ன இரண்டரை ஆண்டுகளுக்கு பாடத்தை கற்றுக்கொடுத்து விடுவார் சனிபகவான். கடந்த பல ஆண்டுகாலமாகவே கடக ராசிக்காரர்கள் காட்டில் மழைதான். ஏதாவது ஒரு கிரகம் காப்பாற்றிக்கொண்டுதான் இருந்தது. அதுவும் ஆறாமிட சனி, ஒன்பதாம் இடத்தில் இருந்து குரு பார்வை கிடைத்தது, லாப ராகு என பலவித பலன்களை அனுபவித்து பொருளை சம்பாதித்தவர்களுக்கு இப்போது வகையாக வச்சு செய்யப்போகிறார் சனி பகவான் என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த மீம்ஸ்.

அஷ்டமத்து சனி வரப்போகிறதே என்று அச்சமடையவேண்டாம். சனி பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதி எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் நன்மையே செய்வார். விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். பேராசை பெரு நஷ்டமாகி விடும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடுகளை செய்து அகலக்கால் வைக்க வேண்டாம். பணமுதலீடுகளை செய்ய வேண்டாம். வேலைகளை விடும் முன்பு ஒருமுறை இருமுறை யோசிக்கவும். புதிய தொழில் எதுவும் தொடங்கவேண்டாம். பேராசை படவேண்டாம். பங்குச்சந்தை முதலீடு தேவையே இல்லை. இருக்கிறதை வைத்துக்கொண்டு சிறப்புடன் வாழுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். ஜாமின் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்க வேண்டாம். சனி பகவான் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டின் மீது விழுகிறது. 5ஆம் வீட்டின் மீது விழுகிறது கூடவே பத்தாம் வீட்டின் மீது சனி பார்வை விழுகிறது. உங்க குடும்ப ஸ்தானத்தை சனி பார்க்கிறார் எனவே குடும்பத்தில் கவனம் தேவை. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணம் கடன் கேட்டு வந்தால் ஜாக்கிரதையாக இருங்கள் அவசரப்பட்டு கொடுத்து விட்டு அவதிப்பட வேண்டாம். வேலையிலும் கவனம் தேவைப்படும்.

ராகு கேது பெயர்ச்சி: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9 ஆம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். இதனால் சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பண தட்டுப்பாடுகள் விலகி பல வழிகளில் இருந்தும் பண மழை கொட்டும். கணவன் மனைவி உறவுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழப்பமான மனநிலை மாறி தெளிவான சிந்தனை உதயமாகும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் பெரும் மதிப்பு அதிகரிக்கும். உங்களுடைய ராசிக்கு 4ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது பகவான் 3 ஆம் வீட்டில் வந்து அமர போகிறார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இழந்த செல்வங்களை திரும்ப பெறுவீர்கள். படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். சுறுசுறுப்புடன் செயலாற்றி பல வெற்றிகளை பெறுவார்கள். பிள்ளைகளால் வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்களை தேடி வரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சிலருக்கு வேலையில் பதவி உயர்வு ஏற்படும். மொத்தத்தில் மிக சிறப்பான பலன்களை அனுபவிப்பார்கள்.

குரு பகவான்: குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பத்தாம் வீட்டு பதவியை நாசம் செய்வார் என்பார்கள். சிலருக்கு பதவி வரும் அதே நேரத்தில் இருக்கிற வேலையை விட்டு விட்டு புது வேலை தேட வேண்டாம் அது ஆபத்தாகி விடும். இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழுங்கள். குரு பகவானின் பார்வை குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும் பண வருமானம் நன்றாகவே இருக்கும். அதே நேரத்தில் செலவுகளும் வரிசை கட்டி நிற்கும். வீடு மனை வாங்கும் யோகம் வரப்போகிறது. 2024ஆம் ஆண்டு குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். லாப குரு வருமானத்தை அள்ளித்தரப்போகிறார். அப்போது குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3, 5,7ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பகவான் கேட்டதை எல்லாம் அள்ளித்தரப்போகிறார். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். திருமண சுப காரிய முயற்சிகள் கைகூடி வரும். திருமணமாகி நீண்ட நாட்களாக பிள்ளை இல்லையே என்று தவமிருந்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். 2024ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை அஷ்டமத்து சனி ஆட்டிப்படைத்தாலும் உங்களுக்கு குருவின் திரு அருளால் நன்மைகள் நாடி வரும் நம்புங்கள் நல்லதே நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+