சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சி : இப்பவே கண்ண கட்டுதே.. 2024 எப்படி இருக்குமோ?.. தப்பிக்க முடியுமா?
சென்னை: என்னடா நடக்குது இங்கே.. ஒண்ணுமே புரியலையே என்று சிலர் கலங்கித் தவிக்கின்றனர். வேலை நிலைக்குமா? என்று யோசிக்கத் தொடங்கி விட்டனர் மீன ராசிக்காரர்கள். ஏழரை சனி, ஜென்ம ராகு, களத்திர கேது, மூன்றாம் இடத்தில் மறையப்போகும் குரு என ஒரு மாதிரியாகத்தான் பயணம் செய்யப்போகின்றன கிரகங்கள். 2024ஆம் ஆண்டு மீன ராசிக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
2024ஆம் ஆண்டு என்று மீன ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது என்று சொல்லாமல் சொல்கிறது ஜோதிடரின் மீம்ஸ் ஒன்று அதை பார்க்கும் எல்லாமே நமக்கும் நெகட்டிவ் தானோ? பாசிட்டிவ் இல்லையோ என்று பயப்பட வேண்டாம். அந்த மீம்ஸ்க்கு ஏற்ற பலன்கள் மட்டும்தான் நடக்குமா? மீன ராசிக்காரர்களுக்கு வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சனி பெயர்ச்சி 2023: ஏழரை சனி நடக்கிறதே என்ன செய்யப்போகிறாரோ சனி பகவான் என்று பயமும் பதற்றமும் இருக்கும். அதுவே உங்களை தவறு செய்ய வைக்கும். சனி பகவான் நேர்மையானவர்களை எதுவுமே செய்ய மாட்டார். சனி உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். ஏழரை சனி எப்போதுமே கடனில் சிக்க வைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடனாக கொடுத்துள்ள பணம், பொருட்கள் தவணை முறையில் வந்து சேரும். வெளி நாடு செல்ல நினைப்பவர்களுக்கு விசா, பாஸ்போர்ட், விஷயங்கள் சாதகமாக அமையும். வேலையின் நிமித்தம் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். இந்த கால கட்டத்தில் அரசியல்வாதிகளின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். வருமானம் பல வழிகளில் வந்தாலும் வீண் விரைய செலவுகள் அதிகரிக்கும். சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டு, ஆறு, பத்தாம் வீடுகளின் மீது விழுகிறது. வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. எனவே அடுத்தவர் வேலையை கெடுக்க முயற்சி செய்யாதவரை உங்கள் வேலையில் எந்த பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
குரு பெயர்ச்சி 2024: குரு பகவான் இப்போது பயணம் செய்யும் இடம் குடும்ப ஸ்தானம். எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்த உங்களுக்கு குரு பகவானின் சாதகமான பயணம் மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. எத்தனையோ சோதனைகளை சந்தித்த நீங்கள் இப்போதுதான் கொஞ்சம் செட்டில் ஆகி இருக்கிறீர்கள். வரும் 2024ஆம் ஆண்டு மே மாதம் குரு பகவான் குடும்ப ஸ்தானத்தில் இருந்து மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சென்று மறைகிறது. சுப கிரகமான குரு பகவான் உங்கள் ராசிநாதன் 3ஆவது வீட்டில் மறைந்தாலும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாம் வீடு, ஒன்பதாம் வீடு, லாப ஸ்தானமான 11ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குருபகவானின் பார்வையால் திருமண தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் குறையும். அசையும் அசையாக சொத்துக்கள் வாங்கலாம். உடலில் இருந்த நோய்கள் நீங்கும். நரம்பு பிரச்சினை உள்ளவர்கள் தூக்கத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம் கவனம் தேவை. குடும்ப பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள் போங்கள் பிரச்சினைகள் எளிதில் நீங்கும். திருமணம் அமைப்பு கை கூடி வருவதால் காதலிப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். வீர ஆஞ்சநேயரை வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.
ராகு கேது பெயர்ச்சி 2023: ராகு பகவான் இப்போது குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். அடுத்த மாதம் முதல் ராகு பகவான் உங்கள் ராசிக்கு வரப்போகிறார். கேது பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். ராகு கொடுத்தால் கேது கெடுப்பார் ஜென்ம ராகு களத்திர கேது பயணம் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தும். அனைத்து விசயங்களிலும் கவனமாக செயல்பட வேண்டும். மனைவி பெயரில் தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும். தொழிலில் முன்னேற்றம் வரும். சிலருக்கு தொழில் மாற்றம்,இடமாற்றம் வரலாம். பொருளாதாரம் நிலை உயரும் இது வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வயிறு பிரச்சினை வரலாம் வெளி உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். நேரம் கடந்து சாப்பிடும் வழக்கத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள். களத்திர கேதுவினால் கணவன், மனைவிக்குள் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லுங்கள் அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். தொழில் ரகசியங்களை யாரிடமும் வெளியிடவேண்டாம். வேலை செய்யும் இடத்தில் பதவி உயரும். மேலதிகாரியை பகைத்துக்கொள்ள வேண்டாம். தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். மொத்தத்தில் 2024ஆம் ஆண்டு பண விசயங்களில் யாரை நம்பியும் ஏமாந்து விடாதீர்கள். கவனமாகவும் நிதானமாகவும் செயல்படுங்கள்.












Click it and Unblock the Notifications