Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அள்ளித்தரப்போகும் சனி, ராகு, கேது, குரு..மேஷம் ரொம்ப ஜாலிதான் போல.. 2024ல் தங்க புதையல் கிடைக்குமோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: போகிற போக்கை பார்த்தால் நமக்கு புதையல் கிடைக்குமோ? என்று யோசிக்க ஆரம்பித்து விட்டனர் மேஷ ராசிக்காரர்கள். அதிர்ஷ்டம் பல வழிகளில் இருந்தும் தேடி வரும் என்று எல்லா ராசிபலன்களும் சொல்வதைப் பார்த்தால் 2024ல் கோடீஸ்வரர் ஆகி விடுவோம் நன்று பாசிட்டிவ் ஆக நினைக்க ஆரம்பித்து விட்டனர். மேஷ ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்கள் எப்படி இருக்கும் என்று ஒரு மீம்ஸ் சொல்லியிருக்கிறது. அதை வைத்து பலன்களைப் பார்க்கலாம்.

ஜோதிடம் மீம்ஸ்: பொதுவாக அரசியல் நையாண்டிகள் சிரிக்க வைக்கும் சிந்திக்க வைக்கும். அதையே மீம்ஸ் ஆக போட்டு சம்பந்தப்பட்ட நபர்களையே ரசித்து சிரிக்க வைப்பார்கள். இப்போது ஜோதிடத்திலும் மீம்ஸ் போட்டு பலன் சொல்ல ஆரம்பித்து விட்டனர் சமூக வலைத்தள ஜோதிடர்கள். எதையுமே பாசிட்டிவ் ஆகவும் நேர்மறையாகவும் சிந்தித்தால் எண்ணம் போல எல்லாமே நல்லதாகவே நடைபெறும். சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி என ஆண்டு கிரகங்களின்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டமும் தேடி வரும். 2024ஆண்டு இன்னும் இரண்டு மாதங்களில் பிறக்கப்போகிறது. மேஷம் முதல் மீனம் வரை சில ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கப்போகிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு கேது, குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சியால் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று மீம்ஸ் பதிவிட்டுள்ளார் ஒரு ஜோதிடர். அந்த மீம்ஸ்க்கு ஏற்ற இந்த பலன்களை மேஷ ராசிக்காரர்கள் அனுபவிப்பார்களா என்று பார்க்கலாம்.

New Year Rasi Palan 2024: Sani, Rahu ketu,Guru Peyarchi palan Mesham Rasi prideiction

மேஷம் குரு பெயர்ச்சி: மேஷ ராசிக்கு குரு பகவான் ஜென்ம ராசியில் பயணம் செய்கிறார். ஜென்ம குரு வனத்தினிலே என்று சொல்வார்கள். ஜென்ம குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 5,7,9ஆம் வீடுகளின் மீது விழுகிறது. பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு கல்யாணம் கை கூடி வரும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும், வேலை செய்பவர்களுக்கு பளு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வியாபாரம் தொழிலில் ஏற்பட்டு வந்த தடைகளும் தாமதங்களும் குரு பார்வையால் சரியாகி விடும். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு குரு பகவான் ராகுவை விட்டு பிரிகிறார். தனித்த குரு பல நன்மைகளை செய்யப்போகிறார். 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மேஷ ராசியில் இருக்கும் குரு பகவான் மே மாதத்தில் இருந்து இரண்டாம் வீடான ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார். உங்களுக்கு குடும்பம், தனம் வாக்கு ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்யப்போவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். வீடு நிலம் வாங்கலாம்.
கடந்த பல ஆண்டு காலமாக சோதனைகளை சந்தித்த மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான கால கட்டம் 2024ஆம் ஆண்டு தேடி வரப்போகிறது.

மேஷம் ராகு கேது பெயர்ச்சி: ராகு பகவான் மேஷ ராசியான ஜென்ம ராசியில் இருந்து அக்டோபர் மாதத்தில் இருந்து 12ஆம் வீட்டிற்கு நகரப்போகிறார். கேது பகவான் ஏழாவது வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். அக்டோபர் மாதத்தில் இருந்து ஆறாம் வீட்டிற்கு செல்லப்போகிறார் கேது பகவான். விரைய ஸ்தானமான 12 ஆம் இட ராகு குரு பகவானைப் போல விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். ஆறாம் இட கேதுவும் அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது அவசியம். பணம் பல வழிகளில் இருந்தும் வரப்போகிறது. பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். உங்களுக்கு கோடி கோடியாக குவியப்போகும் பணத்தை பாதுகாப்பது அவசியம். நோய்கள் தீரும் காலம் வந்து விட்டது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி இடையேயான குழப்பங்கள் முடிவுக்கு வரும். ராகுவும் கேதுவும் 2024ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகின்றன.

மேஷம் சனி பெயர்ச்சி: லாப சனி எப்போதுமே வருமானத்தை அதிகரிப்பார். மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இரண்டரை ஆண்டு காலம் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வார். எத்தனையோ கஷ்டங்களை தாண்டி வந்திருப்பீர்கள். கவலைகளை கடந்து வந்திருப்பீர்கள். இனி எல்லாம் யோக காலம்தான். சனி பகவான் நேர்மையானவர்களுக்கு அள்ளிக்கொடுப்பார். மேஷ ராசிக்காரர்கள் நீதியும் , நேர்மையும் நியாயமான மன நிலையும் கொண்டவர்கள் சனி பகவானின் ஆசி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். பல ஆண்டு கால கனவு நனவாகப்போகிறது. சனி பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. ராசிக்கு ஐந்தாம் வீடு, ராசிக்கு எட்டாம் வீட்டின் மீது சனி பகவானின் பார்வை விழுகிறது. 2024ஆம் ஆண்டு முழுவதும் சனிபகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் தேடி வரும். பெட்டி நிறைய தங்கம்.. மலை போல குவியும் செல்வம் என மேஷ ராசிக்காரர்கள் அனுபவிக்கப்போகிறார்கள். தசா புத்தி சரியாக அமைந்து பிறந்த ஜாதகத்தில் சனி, குரு, ராகு கேது வலிமையுடன் இருப்பவர்களுக்கு 2024ஆம் ஆண்டு அதி அற்புதமான யோகத்தை தரப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+