Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சி : 2024ல் தொட்டதெல்லாம் பொன்னாகும்.. வீடு இனி அமைதிப்பூங்காதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்ய சனி, விரைய குரு, பத்தாமிட ராகு, நான்காமிட கேது என கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக இருக்கிறது. வக்ர சனியால் கஷ்டப்பட்டவர்களுக்கு வக்ர நிவர்த்தி ஆன நாளில் இருந்தே அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று சொல்கிறது ஜோதிடர் பதிவிட்டுள்ள இந்த மீம்ஸ். 2024ஆம் ஆண்டு கெத்தாக காலரை தூக்கி விட்டுக்கொண்டு வலம் வரப்போகிறார்கள் மிதுன ராசிக்காரர்கள்.

மிதுன ராசிக்காரர்கள்: கடந்த 5 காலமாகவே மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையே புரட்டி போட்டது போலாகி விட்டது. காரணம் கண்டச்சனி, அஷ்டம சனி, ஜென்ம ராகு என ஒரு வழியாக கலந்து கட்டி அடித்ததில் பலரது வாழ்க்கையே சின்னா பின்னமாகி விட்டது. குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை, வேலை இழப்பு, சொத்துக்களை இழந்து நடுத்தெருவிற்கு வந்து நாயடி பேயடி பட்டிருப்பார்கள் மிதுன ராசிக்காரர்கள். கடன் பிரச்சினை கழுத்தை நெறிக்க கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிக்க பலர் ஊரை விட்டே சென்றிருப்பார்கள். தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து தற்கொலை வரை சென்று திரும்பியிருப்பார்கள் மிதுன ராசிக்காரர்கள். 2024ஆம் ஆண்டு முதல் உங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமும் திடீர் திருப்பு முனையும் ஏற்படப்போகிறது.

New Year Rasi Palan 2024: Sani, Rahu ketu,Guru Peyarchi palan Mithunam Rasi prediction

பாக்ய சனி: அஷ்டம சனி காலத்தில் நிறைய அவமானங்களை பட்டு இருப்பீர்கள். கணவன் மனைவி இடையேயான பிரிவினை ஏற்பட்டிருக்கும். ஒரு சிலரோ நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவை சந்தித்து இருப்பீர்கள். இனி உங்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சினைகள், கஷ்டங்கள் முடியப்போகும் காலம் வந்து விட்டது. இன்னும் சில மாதங்களில் அஷ்டமத்து சனியின் பிடியில் இருந்து விடுபடப்போகிறீர்கள். பயம் பதற்றம் நீங்கப்போகிறது. கணவன் மனைவி பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது.

நிதிப்பிரச்சினை தீரும்: கடந்த சில ஆண்டுகாலமாகவே பணப்பிரச்சினை, கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்து வந்த உங்களுடைய பொருளாதார நிலைமை சீரடையப்போகிறது. பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள் இனி உங்களைப் புரிந்து கொள்வார்கள். கடன் பிரச்சினையால் சிலர் தற்கொலை வரை சென்று மீண்டிருப்பீர்கள். இனி உங்களுடைய வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டுமே அனுபவிக்கப்போகிறீர்கள். சில மாதங்களில் குரு பார்வையால் நல்ல விசயங்கள் நடந்திருக்கும் எனவே இனி கவலைப்பட வேண்டாம் கஷ்டங்களில் இருந்து கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கப்போகிறது.

உடல் ஆரோக்கியம்: பாக்ய சனி நிறைய பதவி உயர்வை தேடித்தரப்போகிறார். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். குடும்ப பிரச்சினை முடிவுக்கு வரும். உறவுகளால் ஏற்பட்ட பகைகள் நீங்கும். பழைய நண்பர்களின் உதவி வீடு தேடி வரும்.

பொற்காலம்: மிதுனம் ராசிக்காரர்கள் சனி வக்ர நிவர்த்தி முடிந்து நேர்கதிக்கு திரும்பிய பிறகு 2024ஆம் ஆண்டு முதல் வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடப்போகிறீர்கள். இனி உங்களுக்கு பொற்காலம்தான். லாப குரு வேலையில் புரமோசனை தருவார். குருவின் பார்வை முயற்சி ஸ்தானமான 3ஆம் வீடு, பூர்வீக புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீடு, களத்திர ஸ்தானமான 7ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பார்வையால் கெட்டிமேளச்சத்தம் கேட்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களினால் வருமானம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும்.

கடன்கள் தீரும்: 2024ஆம் ஆண்டு விரைய ஸ்தான குரு நிறைய சுப விரைய செலவுகளைத் தரப்போகிறார். குருபகவான் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். குருவின் பார்வை சுக ஸ்தானமான 4ஆம் வீடு, ரோக ஸ்தானமான 6 ஆம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ஆம் வீடு மீது விழுகிறது. இந்த ராசிக்காரர்கள் ஜென்ம சனியால் கவலைப்பட்டாலும் இனி குரு பெயர்ச்சியினால் புது வீடு கட்டலாம். சுப விரைய செலவுகள் ஏற்படும். நோய்கள் தீரும், கடன்கள் தீரும் காலம் வந்து விட்டது. மாணவர்கள் உயர்கல்விக்கு முயற்சி செய்யலாம்.

ராகு கேது பெயர்ச்சி: ராகு தொழில் ஸ்தானமான 10ஆம் வீட்டிலும் கேது 4ஆம் வீட்டிலும் பயணம் செய்வதால் யும். குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் நிலவும் கணவன், மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பணவரவு அதிகம் உண்டு. பத்தில் ஒரு பாவி வந்தால் பதவியும் கூடவே வரும் என்று சொல்வார்கள். மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு 2024ஆம் வேலையும் பதவி உயர்வும் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. குழந்தை இல்லாத தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். சூரியனை கண்டு பனி விலகுவதை போல துன்பங்கள் விலகி ஓடும். ஓவ்வொரு முயற்சியும் காரியமும் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.

அமைதிப்பூங்கா: சண்டை சச்சரவாக இருந்த குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன் மனைவி ஓற்றுமை ஒங்கும். குடும்பத்தில் சுபகாரியம் சுபமாக முடியும். வாடகை வீட்டில் உள்ளவர்கள் புது வீடு மாறலாம். புது வீடு, நிலம் வாங்கும் வசதி அதிகரிக்கும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு வருமானம் அதிகாக்கும். கடன் சுமை குறையும். கேது ராசிக்கு நான்காம் வீட்டில் சுக ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பதற்றம் நீங்கும் பேச்சில் கனிவு பிறக்கும். உங்களின் நட்பு வட்டம் அதிகரிக்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனி நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் பதவி உயர்வும் வரும். 2024ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களின் வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+