சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சி : விலகிய ஜென்ம கேது.. 2024ல் அஷ்டம குரு.. துலாம் டோண்ட் ஒர்ரி
சென்னை: துலாம் ராசிக்காரர்களின் தலையில் இருந்த ஜென்ம கேது விலகப்போகிறது. அதே நேரத்தில் குரு பகவானும் 8ஆம் வீட்டில் அஷ்டம குருவாக மறையப்போகிறார். மறைவு ஸ்தானங்களுக்கு போகும் ராகு கேது, குருவினால் செல்வ வளம் வரப்போகிறது. சங்கடங்களை மட்டுமே சந்தித்து வந்த நீங்கள் இனி சந்தோஷங்களை அனுபவிக்கப் போகிறீர்கள். 2024ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று மீம்ஸ் ஆக பதிவிட்டுள்ளார் ஒரு ஜோதிடர்.
சனி பெயர்ச்சி: துலாம் ராசிக்காரர்களுக்கு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார்.
சனிபகவானின் பார்வை கும்ப ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. பணவரவு அதிகரிக்கும், குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும், குதூகலம் கூடும். செய்யும் தொழிலில் லாபம் கூடும். கனவு நனவாகும் காலம் கனிந்து வருகிறது. தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும், திருமணம் கைகூடி வரும், காதல் மணியடிக்கும். காதலர்களுக்கு கல்யாணம் கை கூடி வரும். வீட்டில் எப்போது உற்சாகமாக இருப்பீர்கள். உங்களின் அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும்.

2024 வெற்றிகரமான ஆண்டு: அர்த்தாஷ்டம சனியால் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். இன்னும் சில மாதங்கள்தான் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அம்மாவின் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சிலருக்கு குழந்தைகளால் பிரச்சினை ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகே குழந்தை பாக்கியம் அமையும். நம்பிக்கையுடன் முயற்சிக்க எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதையும் தீர ஆராய்ந்து முழு மூச்சுடன் செயல்பட வெற்றி கிட்டும். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிபோடவோ ஒத்தி போடவோ கூடாது. காரியத்திலே கண்ணாய் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் போட்டியான உலகத்தில் ஜெயிக்க முடியும்.
வேலையில் கவனம்: வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாகும். விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையிலே உங்களை இயங்க வைப்பார். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் ஏற்படும். சக ஊழியர்களின் எதிர்பாராத உதவியும் அவர்களின் ஒத்துழைப்பும் நமக்கு சாதகமாக இருந்து வரும். ஊதிய உயர்வும் எதிர்பார்த்த அளவு இருக்காது. எனவே கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்த பின் உங்களை ஸ்த்திரபடுத்திக் கொள்ளுங்கள்.பெண்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும், குழந்தைபேறு கிடைக்கும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு நகைகள் சேரும், ஆடை ஆபரணக்சேர்க்கை கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவி உறவு உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. சுறுசுறுப்பாக இருந்தாலும் அடிக்கடி உடல் அசதி, சோர்வு அலைச்சல்களால் ஏற்படும்.
ராகு கேது பெயர்ச்சி: ஜென்ம ராசியில் அமர்ந்து இருந்த கேது இன்னும் 12ஆம் வீட்டிற்கு செல்லப்போகிறார். களத்திர ஸ்தானத்தில் இருந்த ராகு ஆறாம் வீட்டிற்கு செல்லப்போகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால் அற்புதங்கள் நிகழப்போகிறது. ஆறாம் வீட்டில் ராகு மகாலட்சுமி யோகம் தேடி வரப்போகிறது. மன குழப்பங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜா யோகமாக அமைகிறது இந்த ராகு கேது பெயர்ச்சி. கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். களத்திர ராகு குடும்பத்தில் கஷ்டத்தை கொடுத்தது. கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு இருந்தது. கடந்த காலங்களில் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு நெருக்கடிகளை சந்தித்து வந்த உங்களுக்கு துன்பங்களும் பிரச்சினைகளும் முடிவுக்கு வரும். வீட்டில் நிம்மதியில்லாமல் இருந்த உங்களுக்கு நெருக்கடிகள் நீங்கும். தடைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும். எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு அமர்ந்துள்ளதால் கடன் அடைப்படும் தீராத நோய் திரும். போட்டி பொறாமை பொடி பொடியாகும்.
2024ல் முன்னேற்றம்: ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள கேது 12ஆம் வீட்டிற்கு செல்லப்போவதால் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும் வேதனைகள் மறையும். வெளிநாட்டு யோகமும் தேடி வரப்போகிறது. வெளிநாடு வேலையை விட்டு விட்டு வந்தவர்களுக்கு மீண்டும் அழைப்புகள் வரும். கடுமையான உழைப்பு வெற்றியை கொடுக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும். பட்டம் பதவி புகழ் தேடி வரும். கணவன் மனைவி உறவில் இருந்த விரிசல் நீங்கும். கசப்புகள் நீங்கி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வீர்கள். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை யாரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். அக்கம் பக்கத்தினரிடம் எந்த கருத்து வேறுபாடும் வைத்துக்கொள்ளாதீர்கள். மாணவர்களுக்கு நல்ல நேரம் வந்து விட்டது. பிடித்த பள்ளி, கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும். கால்களில் பிரச்சினை வரும் எச்சரிக்கை தேவை. யாரையும் கடுமையாக பேச வேண்டாம்.

குரு பெயர்ச்சி 2024: குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு நேர் எதிரே ஏழாம் வீட்டில் பயணம் செய்து வருகிறார். உங்களுக்கு குரு பார்வை நேரடியாக கிடைக்கிறது. குரு பலன் வந்துள்ளதால் திருமணம் சுபகாரியம் நடைபெறும். பணம் பல வழிகளில் இருந்தும் வரும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் செய்யப்போகும் முதலீடுகள் லாபமாக திரும்ப வரும். வேலை செய்பவர்களுக்கு அலுவலகத்தில் உயர் பதவிகள் தேடி வரும். 2024ஆம் ஆண்டு மே மாதம் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. குரு பகவான் அஷ்டம குருவாக உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.
பொருளாதார நிலை உயரும்: கணவன் மனைவிக்குள் தேவையற்ற சச்சரவுகள் வந்து நீங்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரி இனி உங்கள் திறமையை அங்கீகரிப்பர். எதிர்பார்த்த பதவியுயர்வு தேடி வரும். அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டாம். எட்டாம் வீட்டில் அமரப்போகும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டினை பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் விரைந்து நடக்கும். அதே போல இரண்டாம் வீடான தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார நிலை உயரும் வரவுகள் கூடும். பண சேமிப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு கடந்த காலங்களில் கடனால் அவதிப்பட்டவர்கள் ஏதாவது சொத்தை விற்று முழு கடனையும் அடைப்பார்கள் புது முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications