Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருச்சிக ராசிக்கு பூர்வ புண்ணிய ராகு லாப கேது.. அர்த்தாஷ்டம சனி.. டெலிகேட் பொசிசன்.. பரிகாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல ஆண்டு காலமாகவே சோதனைகளை மட்டுமே சந்தித்து வரும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பூர்வ புண்ணிய ராகு லாப கேது
என 2024 ஆம் ஆண்டு ஆரம்பமாகப்போகிறது. அர்த்தாஷ்டம சனியும் கஷ்டத்தை கொடுத்தாலும் உங்களை காப்பாற்றி கரை ஏற்றி விட கடவுள் குரு பகவானை அனுப்பி வைக்கப்போகிறார்.

அர்தாஷ்டம சனி: ஜோதிடர்கள் இப்போதெல்லாம் பக்கம் பக்கமாக ராசி பலனை எழுதுவதை விட ஓரே வரியில் மீம்ஸ் போட்டு புரிய வைத்து விடுகின்றனர். அப்படித்தான் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி டெலிகேட் பொசிசன் என்று மீம்ஸ் பதிவிட்டுள்ளார் ஒரு ஜோதிடர்.
அர்தாஷ்டம சனி என்பது சனி பகவான் கோச்சார ரீதியாக ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்வது. அஷ்டம சனியில் பாதி அர்த்தாஷ்டம சனி. விருச்சிக ராசிக்காரர்களுக்கு மூன்று ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான் 4ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் இருந்தாலும் முதலில் கிடைத்த வேலையை ஏற்று கொண்டு திருப்தியற்ற வேலையாக இருந்தாலும் திருப்தியாக செயலாற்ற வேண்டும்.

New Year Rasi Palan 2024: Sani, Rahu ketu,Guru Peyarchi palan Viruchigam Rasi prediction

வேலையில் கவனம்: நான்காம் வீடு என்பது சுக ஸ்தானம், இந்த இடத்தில் அமரும் சனிபகவான் உங்கள் ராசியை பத்தாம் பார்வையாக பார்க்கிறார். மூன்றாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை பார்க்கிறார், ஏழாம் பார்வையால் உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்வையிடுகிறார். நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் சனி பகவான் சச மகா யோத்தை தரப்போகிறார். 4ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும் தொழிலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவார். அதே சமயம் வேலையில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். உழைப்புக்கு அஞ்சாமல் வேலையில் சளைப்பில்லாமல் செய்ய வேண்டும்.

சனி தரும் சங்கடம்: உங்க வேலையை காதலித்தால்தான் அந்த வேலையில் நீங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும். இல்லையெனில் வேலையில் அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டு வேலையை விட வேண்டியிருக்கும். அவசரபட்டு வேலயை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு மாறும் பொழுது வேலைக்கு உத்தரவாதம் இருந்தால் மட்டுமே மாற வேண்டும். வேலை காரணமாக சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும், வெளியூர், வெளிநாடு செல்லவேண்டியிருக்கும். பதவி உயர்வு நீண்ட இழுபறிக்குப் பின்னர் கிடைக்கும். வேலையின் காரணமாக உயர்வு ஏற்பட்டாலும் அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையை சனி பகவான் உருவாக்குவார்.

அம்மாவின் உடல்நிலை: நான்காம் இடம் தாய் ஸ்தானம் இந்த இடத்தில் சனி அமர்வதால் அம்மாவின் உடல்நிலை சற்று பாதிக்கப்படும். எனவே அம்மாவை அவ்வப்போது மருத்துவரிடம் காட்டி உடல்நலத்தை கவனிக்கவும். சமூகத்தில் இதுவரை இருந்த வந்த நிலை மாறி சற்று மதிப்பும் மரியாதையும் கூடும். இதுவரை இருந்து வந்த தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து ஒரு இடத்தில் நிலையாக இருக்க வாய்ப்பு அமையும். இடம் வாங்குவதற்கு வீடு வாங்குவதற்கு வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் தானாக வந்து சேரும். ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் இனம் தெரியாத நோய்கள் வந்து போகும் ஏதோ நோய் இருக்குமோ என்று நினைத்து அவதிப்பட நேரிடும். நேரத்திற்கு சாப்பிடுங்கள்.

எதிரிகள் தொல்லை: எதிரிகள் அதிகமாக வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள் தேவையற்ற விசயங்களில் தலையிட வேண்டாம். தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள். முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே பிரகாசிக்க முடியும். ஜெயிக்கவும் முடியும். புதிய முயற்சிகளை செய்ய வேண்டாம் வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சனிபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் உற்சாகமாக இருங்கள், வேலைகளை ஒத்திப்போடாமல் உடனே செய்து முடியுங்கள்.

பரிகாரம்: கணவன் மனைவி உறவு உற்சாகமாக அமையும். மகிழ்ச்சி நீடிக்கும். பேச்சில் இனிமை கூடும். காதல் திருமணத்தில் முடியும், சிலருக்கு தடைபட்டு வந்த குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நிறைய ஓய்வு எடுங்க. வயிறு பிரச்சினைகள் வராமல் இருக்க நேரத்திற்கு சாப்பிடுங்க. அர்த்தாஷ்டம சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறைய வேலூர் வாலாஜாபேட்டை அருகே தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்குங்கள். காலபைரவரை செவ்வாய்கிழமைகளில் செவ்வரளி மாலை சாற்றி வணங்குங்கள். சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபம் ஏற்றுங்கள். அம்மாவை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெறும்.

ராகு பெயர்ச்சி: உங்க ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு வருவதால் மிகப்பெரிய திருப்புமுனையை தரப்போகிறார். குருவைப் போல ராகு செயல்படுவார். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு மன நிம்மதியை தரக்கூடியதாக இருக்கிறது. உங்களை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் இனி உங்களை ஆச்சரியமாக பார்க்கும் அளவிற்கு உயர்வு கிடைக்கும். இந்த ராகு பெயர்ச்சியால் உங்களுக்கு புத்திர பாக்கியம், திருமண யோகம் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிரிகள் தொந்தரவு தீரும், கடன் சுமைகள் குறையும். உங்களை விட்டு விலகி போனவர்கள் எல்லாம் இனி உங்களை தேடி வருவார்கள். விலகிப்போன சொந்தங்கள் எல்லாம் ஒன்றாக தேடி வருவார்கள். கணவன் மனைவி இடையை இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்த வாழ்க்கை துணை உங்களைப்பற்றி தெரிந்து கொண்டு தேடி வருவார்கள். மன சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

New Year Rasi Palan 2024: Sani, Rahu ketu,Guru Peyarchi palan Viruchigam Rasi prediction

கேது பெயர்ச்சி : 11ஆம் இடம் என்பது லாப ஸ்தானம், இந்த இடத்தில் கேது பகவான் அமர்வதால் அலுவலகத்தில் பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். கேது லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் தொட்டது துலங்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடி வரும். பூர்வீக சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெற்றோர்களுக்கு சின்னதாக மருத்துவ செலவுகள் வரும். உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி காலத்தில் பட்டம் பதவிகள் தேடி வரும். தெய்வ வழிபாடு உங்களுக்கு நல்ல பலன்களை தரப்போகிறது. குல தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதி சந்தோஷத்தைக் கொடுக்கப் போகிறது. புதன்கிழமைகளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள். பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும் இந்த ராகு கேது பெயர்ச்சி தோஷம் நீங்கி சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்யும் நிம்மதியை தரும்.

குரு பார்வை கோடி நன்மை: குரு பகவான் தற்போது ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தற்போது குரு பயணம் செய்யும் இடம் சாதகமான இடமாக இல்லா விட்டாலும் 2024ஆம் ஆண்டு குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் பார்வை நேரடியாக உங்கள் ராசியின் மீது விழுகிறது. எனவே சனி, ராகு கேதுவினால் சங்கடங்கள் வந்தாலும் நீங்கள் கவலையே பட வேண்டாம் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் அதை நீக்கக்கூடிய வலிமை குருவிற்கு உண்டு. 2024ஆம் ஆண்டினை விருச்சிக ராசிக்காரர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கத் தயாராகுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+