புத்தாண்டு ராசி பலன் 2024... புது வீட்டில் குடியேறப்போகும் ராசிக்காரர்கள்.. கிரகப்பிரவேசம் நிச்சயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டு பலருக்கும் புது வசந்தத்தை தரப்போகிறது. பலருக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இன்றைய கால கட்டத்தில் பண வருமானம் அபரிமிதமாக இருந்தால் மட்டுமே வீடு, நிலம் வாங்க முடியும். மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டில் புது வீட்டில் கிரகப்பிரவேசம் செய்யும் யோகம் வரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: லாபங்கள் நிறைந்த ஆண்டாக மேஷ ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது. சனி, குரு, ராகு கேதுவின் நற்கருணையும் கிரகங்களின் பயணம் சிறப்பாக உள்ளது. நல்லதே நடக்கும் கிடைத்த வேலை நிலைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். 2024ஆம் ஆண்டு பொற்கால ஆண்டாக இருக்கிறது. சொந்த வீட்டில் குடியேறும் கைகூடி வந்துள்ளது.

New year Rasi Palan 2024 Tamil: Good Time To Buy A House In 2024

ரிஷபம்: சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே... ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்று பாடப்போகிறீர்கள் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி அதி அற்புதமாக இருக்கும். லாபத்தை தரப்போகும் ராகுவினால் நிதி நெருக்கடிகள் விலகும். தொட்டது துலங்கும் வெற்றிகள் தேடி வரும். 2024ஆம் ஆண்டில் சொந்த நிலத்தில் வீடு கட்டும் யோகம் கைகூடி வந்துள்ளது.

சிம்மம்: சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே. 2024ஆம் ஆண்டு உங்களுக்கு அதி அற்புதமான புத்தாண்டாக அமையப்போகிறது. காரணம் கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக அமைந்துள்ளது. வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகிறது. கடந்த சில ஆண்டுகளாக பட்ட கடன்கள் அடைபடும் வருடம் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள். தொழில் வியாபாரம் செழிக்கும். 2024ஆம் ஆண்டில் வீடு, நிலம் வாங்குவீர்கள்.

கன்னி: புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. 2024ஆம் ஆண்டில் ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குருவின் பார்வையால் கை நிறைய சம்பளத்தில் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். இந்த ஆண்டு அதிகம் சம்பாதிக்கலாம். பொருளாதார வளம் நிறைந்த ஆண்டாக கன்னி ராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது. 2024ஆம் ஆண்டில் சொந்த வீட்டில் வசிக்கும் யோகம் தேடி வந்துள்ளது. புது வீட்டில் குடியேறலாம்.

துலாம்: சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே..2024ஆம் ஆண்டில் இந்த ஆண்டு சம்பள உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். சொத்துக்கள் வீடு வாங்குவீர்கள். சொந்த வீடு வாங்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். தொட்டதெல்லாம் பொன்னாகும் பொற்கால ஆண்டாக அமைந்துள்ளது.

தனுசு: 2024 ஆம் ஆண்டில் தனுசு ராசிக்காரர்களுக்கு எதையும் சமாளிக்கும் தெம்பும் தைரியமும் பிறக்கும். குரு பகவான் பார்வையால் பல அற்புதங்கள் நிகழும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வாடகை வீட்டில் வசித்தவர்களுக்கு சொந்த வீட்டில் குடியேறும் யோகம் தேடி வரப்போகிறது.

மகரம்: சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே. ஏழரை சனி என்றாலும் தொழில் காரகன் சனியால் புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ப வருமானமும் அதிகமாக வரும். சித்திரை மாதத்திற்குப் பிறகு சிறப்பான யோகம் கைகூடி வரப்போகிறது. வைகாசியில் வீடு கட்ட வாஸ்து செய்து தை மாதம் வீடு பால் காய்ச்சலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+